Friday, May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல : தேசியத் தலைவரின் சிந்தனையும் மகிந்த சிந்தனையும்



முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மகிந்தவுக்கும் சிங்களப் படைகளுக்கும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது படைகளின் ஆற்றல் ஆளுமைகளையும் கண்டு அச்சமடைந்த மகிந்தவும் அவரது படைகளும் உலக நாடுகளில் போய் இரந்து பெற்று வந்த இரசாயன ஆயுதங்களையும் வல்லரசு நாடுகளில் உள்ள இராணுவப்படைத் தளபதிகளின் தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் பெற்றுவந்து வன்னியில் வைத்து எமது மக்களைக் கொன்று குவித்தனர்.

ஆனால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் செயல்களையும் சிங்களத் தரப்பால் இன்றுவரை வெற்றிகொள்ள முடியவில்லையென்பதை தமிழ் மக்கள் தெளிவாகவே சிங்களத்திற்கு உணர்த்தியிருக்கின்றனர். முப்பது வருடங்களாக இலங்கைத்தீவை ஆட்சி செய்த எமது தலைவர் பிரபாகரன் அவர்களே இன்றும் இலங்கைத் தீவை ஆட்சி செய்கிறார் என்பது கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறீலங்காப் படைகளுக்கும் மகிந்த குடும்பத்திற்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.

ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள். இவர்களை நாங்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம். அடிக்கலாம். உதைக்கலாம். கொலைசெய்யலாம். கிடங்கு வெட்டி உயிருடன் புதைக்கலாம். நாங்கள் செய்வதைக் கேட்க யாருமில்லை என்ற மகிந்த குடும்பத்தின் கற்பனைகளுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆப்பு வைப்பதாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தனித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அடித்தால் உலகம் ஆர்ப்பரித்து எழுந்து வரும் என்பதை உலகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழர்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஏனைய சமூகத்தவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் கலந்துகொண்டுள்ளமை ஈழத் தமிழருக்கு பெரு வெற்றியாக அமைந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களைத் துன்ப துயரங்களுக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சவும் அந்த அயோக்கியனின் படைகளும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியை எதிரி நாட்டை வெற்றிகொண்டதைப் போன்று பறைசாற்றின.

சொந்த நாட்டு மக்களுடன் எதிர்நின்று சமர் புரிந்து வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாத மகிந்தவின் சிங்களப் படைகள் உலக நாடுகளில் பெற்றுவந்த எரி குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தமிழர்களின் தலைமேலே கொட்டி அவர்களை எரித்தழித்த தினத்தை யுத்த வெற்றித் தினமாக பிரகடனப்படுத்தி வருடா வருடம் கொண்டாடி வருகின்றன.

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகள் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தைக் கொண்டாடும் போது தமது படைபலத்தையும் படைக்கலங்களின் பலத்தையும் காட்சிப்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், சிறீலங்கா அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்களில் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்று குவித்த தினத்தை தனது தேசிய வெற்றித் தினமாகக் கொண்டாடி வருகின்றது.

உலகின் ஏனைய நடுகளுடன் ஒப்பிடுகின்ற போது மகிந்தவின் இந்தச் செயலானது உண்மையிலேயே வெட்கப்பட
வேண்டியது. சிறீலங்காவின் தென்பகுதியில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழர் தாயகம் எங்கணும் இந்த வருடமும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. வன்னியில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்ற நிலையில் நான்காவது வருடமாகிய இந்த வருடம் மிகவும் வித்தியாசமான முறையில், மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

உயிரிழந்த மக்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அஞ்சலி செலுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று வன்னி மாவட்ட சிறீலங்காவின் படைக் கட்டளைத் தளபதி பொணிபஸ் அறிவித்திருந்த நிலையிலும், யாழ். மாவட்டம் உட்பட தமிழர் தாயகம் முழுவதும் படையினரின் சோதனைகளும் ரோந்துகளும் கெடுபிடிகளும் அதிகமாக்கப்பட்டிருந்த நிலையிலும், யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் எதனையும் பொருட்படுத்தாத மக்களும் மாணவர்களும் தமிழர் தாயகம் எங்கும் எமது உறவுகளுக்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

படையினர் முற்றத்தில் நிலைகொண்டிருந்த போதிலும் உள்வீட்டில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய வீரம் இந்தத் தடவைதான் தாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இந்த வருடம் மக்கள் பெரும் எழுச்சியடைந்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிவோடு எழுச்சியடைந்திருக்கிறார்கள். இந்த எழுச்சியானது சாதாரணமானதன்று. மக்கள் மீண்டும் துணிவோடு புறப்பட்டுவிட்டார்கள் என்பதையே இந்த எழுச்சி புலப்படுத்துகிறது. தங்கள் தலைகளில் இனிமேல் யாரும் மிளகாய் அரைக்க முடியாது என்பதை தமிழ் மக்கள் இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறா£ர்கள்.

ஈழத் தமிழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவிலுள்ள தமிழ் மக்களும் இந்த வருடம் என்றுமில்லாதவாறு எழுச்சியடைந்துள்ளார்கள். இதிலும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மிக உணர்வுபூர்வமாகவே நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழின விடுதலை மிக விரைவாகவே எட்டப்படும் என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே துளிர்த்திருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது புதிய ஆரம்பம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவே நோக்கப்பட்டது. ஆனால், இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாக அந்த வார்த்தையின் அர்த்தம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது. ஈழத்தமிழர்களின் போராட்டம் கூட முள்ளிவாய்க்காலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது என்றே சிங்களம் உட்பட அனைவரும் கருதினார்கள். இந்தப் பாடத்துடன் தமிழன் படுத்துவிடுவான். இனிமேல் அவன் நிமிர்ந்தெழ முடியாது என்று சிங்களம் கனவு கண்டது.

ஆனால், தமிழீழத் தேசியத் தலைவரும் போராளிகளும், ‘எமது கல்லறைகளில் புற்கள் முளைக்காது, புதிய போராளிகள் முகிழ்த்தெழுவார்கள்’ என்று கூறியதைப் போல இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவுடன் புதிய போராட்ட அத்தியாயம் ஒன்று முகிழ்த்துள்ளது. அதுதான் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டம். மக்கள் புரட்சி வெடித்தாலே நாம் சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க முடியுமென்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் கூறியிருந்தார்கள். அது போன்று இப்போது மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. ஈழத்தில் மட்டுமல்ல, உலகம் பூராக மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. இதன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டமும் சிறீலங்காவிற்கு எதிராக தமிழீழத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டமும் உலகப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அதிலும் தமிழீழப் போராட்ட முறைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட யுக்திகள் குறித்தும் வியந்து பேசப்படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த திறமை. அஞ்சாத துணிவு. இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போரிடும் ஆற்றல். இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது எங்கே தங்கியிருக்கிறது? போராட்ட மௌனிப்போடு அந்த ஆற்றல், ஆளுமைகளும் மௌனித்துவிட்டனவா? இல்லை இல்லை. தமிழருக்கு என்று சிறப்பாக இருக்கின்ற ஆற்றல், ஆளுமைகளும் வீரமும் உலகில் எந்த இனத்திற்கும் இல்லை. புலிகளிடமுள்ள போர்க்குணம் என்றுமே மாறப்போவதில்லை. தமக்கு இரை கிடைக்காவிட்டால் உரிய இரை, பெரிய இரை தன்னைத் தேடி வரும்வரை புலி பதுங்கியிருக்கும் என்பது வன ஆராய்ச்சியாளர்கள் புலியைப் பற்றி ஆராய்ந்து கூறிய முடிவு. அதேபோல்தான், தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் சாதாரணமான காரியங்களுக்கு எல்லாம் அவர்கள் மண்டையைப் போட்டு உடைப்பதில்லை. உரிய காலம் வரும் வரை அவர்கள் அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். இந்த அமைதியைப் பார்த்து சிங்களம் போரில் புலிகளை வென்றுவிட்டோம் என்று எக்காளத்தொனி எழுப்புகிறது. ஆனால், இது அவர்களுக்கோ அவர்களின் மக்களுக்கோ நல்லதல்ல.

போர் என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். தமிழ்த் திரைப்படங்களில் கூறுவதைப் போல ‘சண்டை என்றால் சட்டை கிழியும் தான்.’ அதற்காக கிழிந்த சட்டையைத் தொடர்ந்து அணிந்துகொண்டு திரிய முடியாதே. என்றோ ஒரு நாள் சட்டையைத் தைப்பதற்கு முயலத்தானே வேண்டும். சட்டையைத் தைப்பதற்கு முயன்று முடியாவிட்டால் புதிய சட்டையை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்களின் நிலையும் இன்று இது போலத்தான் இருக்கின்றது. சண்டை வந்தது. சட்டை கிழிந்துவிட்டது. தைப்பதற்கு முயன்றார்கள். முயல்கிறார்கள். முடியாவிட்டால் புதிய சட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டும். எமது போராட்டத்தை புதிய வழியில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் துணிந்துவிட்டார்கள்.

தமிழர்களும் தமிழீழப் போராட்டமும் புதைக்கப்பட்டுவிட்டதாக மகிந்தவும் மகிந்தவின் படைகளும் நம்பிக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்கள் சென்று இந்த வருடம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். சிங்களம் இதனைச் சற்றேனும் எதிர்பார்த்திருக்காது. தமிழன் மீண்டும் துணிந்து எழக்கூடாது என்று கருதிய சிங்களத்தின் மனங்களில் தமிழரின் மீளெழுச்சியானது இடியாக அமைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வரை புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சி நின்ற மகிந்த அரசாங்கம் இப்போது தாயகத்திலேயே தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அச்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சம் மகிந்த குடும்பத்தை அமைதியாக இருக்கவிடப்போவதில்லை.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்திய வாழ் உறவுகளும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெரும் அச்சத்துடன் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உங்கள் எழுச்சியே மீள் பலத்தைக் கொடுத்தது. ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நீங்கள் அங்கே நடத்திய போராட்டங்களும் எழுச்சி நிகழ்வுகளுமே இங்கே இவர்களையும் எழுச்சியடையச் செய்தது. இனி நாங்களும் எழுச்சியடையாவிட்டால் நாங்கள் அடக்கப்படுவோம் என்ற உணர்வு ஈழத் தமிழ் மத்தியில் மேற்கிளம்புவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்பதை நீங்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களிலும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஈழத் தமிழ் மக்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் உறுதியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இவர்களின் உறுதியான எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இந்ந வருடம் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக நீங்கள் எழுச்சியடைந்தமையாலேயே ஈழத்தில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய அனைத்து இடங்களிலும் வாழ்கின்ற மக்களும் இந்த நினைவு தினத்தைக் நினைவு கொள்ளத் துணிந்தனர். எனவே, எதிர்காலத்திலும் நீங்களே ஈழத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் காவலர்களாகவும் இருக்க வேண்டும் என்றே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்து ஈழத்தில் தமிழர் தாயகமான தமிழீழம் மலர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு என்றைக்குமே இருக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் தமிழீழம் மலரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு

Sunday, May 19, 2013

மகிந்த சிந்தனையால் நாய்களுக்கே நன்மை



இலங்கையில் தெருநாய்களுக்கு இருக்கின்ற மதிப்புக்கூட தமிழ் மக்களுக்கு இல்லை. உலகத்தில் நாய்களைச் சுடுவதற்கே அனுமதிகள் பெறப்படவேண்டும். நாய்களால் பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் நாய்களைப் பிடித்து கொல்வதற்கு உரிய அனுமதிகள் இருக்கின்றன. இலங்கையில்கூட ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் தொடங்கியவுடன் நாய் பிடிக்கும் படலம் ஆரம்பிக்கும். மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஊழியர்கள் உரிய அனுமதிகளைப் பெற்று நாய்களைப் பிடித்துக் கொல்வார்கள்.

ஆனால் தற்போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதாவது, எக்காரணம் கொண்டும் தெருநாய்களைக் கொல்லக்கூடாது. மீறி கொல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த நடைமுறையாகும். நாய்கள் விடயத்தில் காட்டிய அக்கறையைக் கூட மகிந்த தமிழ் மக்கள் விடயத்தில் காட்டவில்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னரே இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சாட்சியமற்ற யுத்தம் ஒன்றை நடத்தியதன் மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பில் வைத்து தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இதனைவிட, தமிழர் தாயகம் முழுவதும் இளைஞர்கள் வகை தொகையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் மகிந்த ராஜபக்ச யாரிடமும் அனுமதியெடுக்கவில்லை. நாய்களைச் சுடுவதற்கே, தெருநாய்களைக் கொல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இது தொடர்பாக யாருமே குரலெழுப்பவில்லை. உலக நாடுகளின் கண்முன்னாலேயே இந்த இனப்படுகொலை நடந்தபோது எந்தவொரு நாடும் யுத்தத்தை நிறுத்துமாறு மகிந்தவிடம் கோரிக்கை விடுக்கவில்லை. புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்ற நாட்டில் அதே போதனைகளை ஒதியவாறு சென்ற படையினர் தமிழர்களைக் கதறக் கதறக் கொன்றனர்.

இந்த நிலையில் சிறீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் நாட்டில் நாய்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது. மகிந்த சிந்தனையின் அடிப்படையில் நாய்களைக் கொல்லக்கூடாது என்றும் கொன்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிந்த எச்சரித்திருப்பதால் நாட்டிலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் நாய்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. நாய்கள் விசர் நோயால் பாதிக்கப்பட்டு பொதுமக்களைக் கடிக்கும் பட்சத்தில் மக்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கும்? நிலை ஏற்படுகின்றது.

இதனைவிட நாய்க்கு விசர் உள்ளதோ இல்லையோ நாயன்று கடித்தால் கடித்த காயத்திற்குள்ளேயே ஒன்பது ஊசி மருந்துகள் ஏற்றப்படுகின்றன. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருமே இதனால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தமிழர் தாயகத்தில் யாழ்.குடாநாட்டிலும் வன்னிப் பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் அண்மையில் பொது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் நாயால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கிராமங்களுக்கு கிராமம் இராணுவ காவலரண்கள். மினி முகாம்கள். இந்த காவலரண்களிலுள்ள இராணுவத்தினர் பொதுமக்கள் மீளக்குடியேற முன்னர் தமது முகாம்களில் அதிகளவான நாய்களை வளர்த்து வந்தனர்.

தமது பாதுகாப்பின் நிமித்தம் வளர்க்கப்பட்ட நாய்களுக்கு அப்பால் தெரு நாய்களையும் இவர்களே உருவாக்கி விட்டிருந்தனர். இந்த நாய்கள் தற்போது மீள்குடியேறிய மக்களை இலக்குவைத்து தமது காரியத்தை நிறைவேற்றுகின்றன. பொது மக்களைத் துரத்தித் துரத்திக் கடிக்கின்றன. இதனால் வன்னியிலும் வலி வடக்கிலும் அண்மையில் மீளக் குடியேறிய மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், இராணுவ முகாம்களில் உள்ள இந்த நாய்கள் கிராமங்களுக்குள் ஊடுருவி மக்களின் கால்நடைகள், கோழிகள் போன்றவற்றையும் கடித்துக் கொன்று தின்கின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கூட வளர்க்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினாலும் அவர்கள் ஏனோ தானோ போக்கை கடைப்பிடிப்பிடிப்பதாகவும் இதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லையென்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பிரதேச சபைகளுக்கு அறிவிக்கின்ற போதிலும் மகிந்த சிந்தனையைக் காரணம் காட்டி நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிரதேச சபைத் தவிசாளர்கள் கைவிரிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் பெருக்கம் காரணமாக பொது மக்கள் தினமும் துன்பங்களை அனுபவிக்கின்ற போதிலும் மகிந்த சிந்தனையைக் காரணம் காட்டி நாய்களைப் பிடித்து அழிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் வீண் மரணங்களை எதிர்நோக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த சிந்தனை கொண்டுவரப்பட்ட பின்னர் நாய்களால் கடிக்கப்பட்ட பல பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றமையையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வருடாந்தம் வெயில் அதிகமாக உள்ள காலங்களில் நாய்களுக்கு விசர் நோய் ஏற்படுவதால் இந்தக் காலத்தில் மாநகர, நகர, பிரதேச சபைப் பணியாளர்கள் நாய்களைப் பிடித்து அழிக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது நாய்களைக் கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் கிராமப் புறங்களின் நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் இதனால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. விசர்நாய் கடிக்கு இலக்காகும் மக்கள் சிகிச்சை பயனின்றி மரணமடையும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

குறிப்பாக வலி வடக்கில் அண்மையில் பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாகியுள்ளதுடன் நாயால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கே இராணுவ முகாம்களிலுள்ள நாய்கள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வருகை தந்து மக்களையும் கால் நடைகளையும் கடித்துக் குதறுகின்றன. இங்கு மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள வித்தகபுரம் பகுதியில் தினமும் பல பொதுமக்கள் நாய்க்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் பொதுமக்கள் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வித்தகபுரம் பகுதியில் பலர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ள நிலையில் அங்குள்ள மக்களைக் கடித்து வரும் நாய் ஒன்று அண்மையில் இறந்துள்ளது. இந்த நாயின் கழுத்து வெட்டப்பட்டு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயால் கடிக்கப்பட்ட பத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நாய் இறந்ததைத் தொடர்ந்து சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் வித்தகபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாய்கடி சம்பந்தமான விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்களையும் வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை, நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை யாழ்.போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகரித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். நாய்க்கடி நோயானது பொதுமக்களுக்கு எமனாக அமைவதன் காரணமாக தெரு நாயைக் கண்டால் பொதுமக்கள் பெரும் அச்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த சிந்தனை என்ற ஒரு காகித அறிக்கையை மகிந்த கொண்டு வந்ததுடன் அதில் அனைத்து மக்களுக்குமான நன்மைகள் உண்டென்று கூறினார். அந்த காகித அறிக்கையையே தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்த மகிந்த அந்த விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே வெற்றியும் பெற்றார். ஆனால், அந்த அறிக்கையானது நாட்டு மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை.

குறிப்பாக இந்த மகிந்த சிந்தனையால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்கவில்லை. மாறாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலுள்ள நாய்களுக்கே நன்மை ஏற்பட்டுள்ளது என்பதே வெளிப்படையாகும்.


தாயகத்தில் இருந்து வீரமணி.

நன்றி : ஈழமுரசு

ஆர்மேனிய இனப்படுகொலை, குவாதமாலா அதிபருக்கு வழங்கப்பட்ட தண்டனை தமிழருக்குத் தரும் நம்பிக்கைகள்.


முதலாம் உலகப் போர் நடைபெற்ற, 1915-1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒட்டோமான் பேரரசினால் 1.5 மில்லியன் வரையான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று சிறீலங்காவின் இனப்படு கொலைகளுக்கு அஞ்சி தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்ததுபோன்றுதான், அன்று ஒட்டோமன் பேரரசின் தாக்குதலுக்கு அஞ்சி உலகம் முழுவதும் ஆர்மேனியர்கள் சிதறிப் போனார்கள். ஒட்டோமான் பேரரசின் இந்த அழிப்பு நடவடிக்கையை ஒரு இனப்படுகொலை என்றே ஆர்மேனியா கூறிவந்தது. ஆனாலும், உலகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

படுகொலை நடைபெற்று நூற்றாண்டுகளை எட்டும் நிலையில், ஒட்டோமன் பேரரசு நடத்திய இந்தப் படுகொலையை, இனப்படுகொலை என்று பிரான்ஸ் தேசம் அங்கீகரித்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் பிரென்சு மேலவையில் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதுடன், நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 45,000 ஈரோக்கள் வரை அபராதமும் விதிககும் சட்டமூலத்தையும் நிறைவேற்றியது.

ஆனாலும், ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிய குடியரசு, நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த இந்தப் படுகொலையை இனப்படுகொலை அல்லவென்றும், கொல்லப்பட்டவர்கள் மிகக் குறைவென்றும், பிரான்ஸ் அரசு தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டிவருகின்றது. ஆனாலும், காலம் கடந்தேனும், தங்கள் இனத்தின் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை இந்த உலகம் ஏற்றுக்கொண்டதில் ஆர்மேனியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாதமாலா 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

எனினும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களாலும், அயல்நாட்டு அரசியல் தலையீடுகளாலும் குவாதமாலாவின் பூர்வீக குடிகளான மாயா இன மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். அகிம்சை வழியிலான அவர்களது போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில், 1960களில் ஆயுதத் தாங்கிய கெரில்லாப் போராட்டங்களில் குதித்தார்கள். விளைவு தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதில் கங்கணம்கட்டிநின்றார்கள்.

இலங்கைத் தீவைப்போல் மாறிமாறி ஆட்சியிலமர்ந்த எல்லோருமே, கெரில்லாக்களை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அந்த மக்களை ஒடுக்குவதிலேயே முன்னின்று செயற்பட்டார்கள். இவர்களில் மாறுபட்ட ஒருவராக இராணுவ அதிகாரியாக இருந்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்தான் எஃப்ரெய்ன் ரியோஸ் மான்ட் (Efraín Ríos Montt). 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் ஆட்சியைக் கைப்பற்றியபோது, அமைதியான நாட்டை உருவாக்கியுள்ள

தாகக்கூறி இவருக்கு பெரும் தொகைப் பணத்தை அள்ளிக்கொடுத்தது அமெரிக்கா. ஆனால், அந்தப் பணம் இன்னும் அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவே என்பதை பின்னர்தான் பலரும் உணர்ந்துகொண்டார்கள். சுமார் 15 மாதமே (1983 ஓகஸ்ட் வரை) இவர் பதவி வகித்தபோதும், இவரது ஆட்சியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 50 ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கடத்தப்பட்டவர்கள் உலங்குவானூர்திகளில் ஏற்றிச்செல்லப்பட்டு பசுபிக் பெருங்கடலில் உயிருடன் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவரது ஆட்சிக் காலமே மிகவும் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டது. இலட்சக் கணக்கானவர்களின் படுகொலைக்கு இவர் காரணமானபோதும், 1771 பேரது படுகொலைக்கு இவரே காரணம் என்றும் இதுவொரு இனப்படுகொலை என்றும் இவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்றுக்கொள்ள குவாதமாலா அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில்தான் 2006ம் ஆண்டும் இவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் முடிவில் இவர் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் அவருக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. “இனப் படுகொலை நிகழ்ந்ததற்கு ரியோஸ் மூல காரணமாக இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இனவெறி காரணமாக ஒரு குறிப்பிட்ட இனம் முழுவதையும் அழிக்க முயற்சி செய்துள்ளார். இதுபோல அவர் மீதான போர்க்குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை குற்றத்துக்காக 50 ஆண்டுகளும், போர்க்குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்படுகிறது” என்று இந்த வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன், ரியோஸின் வீட்டுக் காவலை இரத்து செய்து அவரை சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் குழுமியிருந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரியோஸ் மேல் முறையீடு செய்ய முடியும் என்றபோதிலும், ரியோஸ் மான்ட் இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் இலத்தீன் அமெரிக்கர் ஆகியுள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என மனித உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்துவெளியிட்டுள்ளனர். ஏனெனில், உலகிலேயே முதன்முறையாக இனப்படுகொலை வழக்கில் அதே நாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இன, மத, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட இன மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காலம் கடந்தேனும் ஆர்மேனியர் மீதான இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட்டதும், குவாதமாலா முன்னாள் ஜனாதிபதிக்கு இனப்படுகொலைக்காகத் தண்டனை வழங்கப்பட்டதும், இன அழிப்பிற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்திகளாக உள்ளன. சிங்களப் பேரினவாதம் இவர்களையெல்லாம் விட மிகக்கொடூரமான இனப்படுகொலையை தமிழர்கள் மீது புரிந்துள்ளது. 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இந்தப் பேரினவாதம் நடத்திய தனது இன அழிப்பின் உச்சத்தை தற்போதை ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எட்டியுள்ளார். இந்த இன அழிப்பைத் தனது ஆட்சியின் பெரும் வெற்றியாக கொண்டாடியும் வருகின்றார்.

கிடைத்துவரும் உலக ஆதரவுகளும், பாதுகாப்பும் தற்போது இவர்களை விட்டுவைக்கலாம். ஆனால், இவர்களும் இனப்படுகொலையாளிகளாக இந்த சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் நாள் விரைவில் வந்தே தீரும். காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதியை விடக் கொடுமையானது. காலத்தைக் கடத்ததாது அந்த நாளை புலம்பெயர்ந்த தமிழர்கள் விரைந்து உருவாக்கவைப்பதே, முள்ளிவாய்க்கால் இறுதிவரையும் அதற்குப் பின்னரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தளவு நீதியாக இருக்கமுடியும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

Tuesday, May 7, 2013

இன்று நாம் தூங்கினால் நாளை எழுந்திருக்க நிலமிருக்காது...



புகைத்தலால் பாதிக்கப்பட்டவனின் நுரையீரல் சுருங்குவதைப் போல யாழ்ப்பாணம் இன்று மெல்ல மெல்ல சுருங்குகிறது. இது இன்னும் சில வருட காலத்தில் முற்றாக அழிந்துவிடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டிய நிலையன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் வாழ்விடம் சுருங்குகிறது. இது இன்னும் சில வருடங்களில் முற்றாக சிங்களவன் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துவிடுவான். அதன் பின்னர் நாங்கள் யாரிடமும் பேரம் பேச முடியாத நிலை ஏற்படப்போகிறது. உலகத்திலேயே தமிழ் மக்களுக்கு முக்கியமான, முதன்மையான தாயகமாக திகழ்ந்தது யாழ்ப்பாணம் மட்டுமே. இன்று அதையும் சிங்களவன் பறித்தெடுக்கிறான். நாங்கள் என்ன பாவம் செய்தோம். உலகில் தனிமையாக, யாருமே எம்மை அசைக்க முடியாத பலத்துடன் நின்ற நாங்கள், இன்று எமது நிலத்தை இழக்கின்றோம். எங்கள் வயிறு பற்றியெரிகின்றது. ஈழத் தாய் குமுறுகின்றாள். யாருக்கும் அடிமையாக இல்லாமல் நிமிர்ந்து நின்ற நாம், யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் வாழ்ந்த நாம் இன்று எமது நிலத்தை இழக்கின்றோம்.

வலி. வடக்கு..! அது எத்தகைய வளம் கொழிக்கும் பூமி. பாட்டன், முப்பாட்டன் காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே வலி. வடக்கு எங்கள் பசி என்ற வலியைப் போக்கியது. அழகிய தோட்டங்கள். என்ன பயிர் வைத்தாலும் நிறைந்த விழைச்சல் தரும் செம்மண். யாழ்.குடாநாட்டுக்கு தேவையான மரக்கறிகளையும் பழ வகைகளையும் எடுத்துக் கொண்டது போக எஞ்சியவையே தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தோட்டத்தில் நிற்கும் போது பசித்தால் சில மரவள்ளிக்கிழங்குகளைப் பிடுங்கி சுட்டுவிட்டு தோட்டத்தில் நிற்கின்ற பச்சைமிளகாய், வெங்காயத்துடன் சேர்த்து கடித்துச் சுவைத்துச் சாப்பிட்டால். ஐயகோ அதன் சுவையை சொல்லவே முடியாது. யாழ்.குடாநாட்டிலுள்ள எந்தச் சந்தையிலும் பழங்களா, காய்களா எதை எடுத்தாலும் அது வலி.வடக்கைச் சேர்ந்ததாகவே இருக்கும். இது அந்தக் காலம். பிரபாகரன் காலம். ஏன்... பிரபாகரனுக்கு முற்பட்ட காலமும் கூட.

இன்று இங்கே என்ன நடக்கிறது?

நடக்கிற எதையுமே சொல்ல முடியவில்லை. நடக்கிற அனைத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. வார்த்தைகளில் வருவதை தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏனெனில், என் தாயை மாற்றான் தள்ளி வீழ்த்திவிட்டு காலால் உதைத்துக்கொண்டிருக் என்னால் கவிதை எழுத முடியுமா? என் தங்கையின் ஆடை கலைத்துவிட்டு மாற்றான் காமம் புரிந்துகொண்டிருக்கும் போது என்னால் கையப்பம் வைக்க முடியுமா? இங்கே இன்று அதுதான் நடக்கிறது. எது நடந்தாலும் நாங்கள் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டியதாய் உள்ளது.

எங்கள் நிலம் இது. எங்கள் நிலமே இது. இதை மாற்றான் அபகரித்தால் எந்தக் காலத்தில் இதை நாம் பெற முடியும்? என் அழகான மனைவியின் முந்தானைக்குள் மூக்கை நுழைப்பது போலல்லவா இன்று சிங்களவன் எங்கள் வளமான நிலத்தில் காலை மிதிக்கிறான். அகலக் கால்பதிக்கும் அந்நியன் நாளை தன் கால்களை குறுக்கிக்
கொள்வான் என்று எவன் எமக்கு உத்தரவாதம் தர முடியும்? முடியாது. எவனும் எங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

எங்கள் நிலத்தை அவன் ஆக்கிரமிக்கிறான். தூங்கிய எங்களைத் தட்டிக் கலைத்துவிட்டு எங்கள் அன்னையின் மடியில் வந்து அவன் படுத்துறங்குகிறான். இவன் அன்னையின் முந்தானையை முகரமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இல்லை யாரும் உத்தரவாதம் தர முடியாது. அந்நியன் எதுவும் செய்யலாம். நாங்கள் திருப்பிக் கதைக்க முடியாது. இந்த நிலைதான் இன்று இங்கே இருக்கிறது. அவன் வந்துவிட்டான். அவன் அகலக்கால் வைத்துவிட்டான்.

வலி.வடக்கு இன்று சிங்கள தேசமாகிறது. அங்கே எங்கள் நிலங்களை ஒரு தடவை வந்து பாருங்கள். எங்கள் நிலங்களை அவன் அபகரிக்க நாங்களே உத்தரவாதப்படுத்தும் நிலை. எங்கள் காணிகளை அவன் ஆக்கிரமிக்க நாங்களே காணிகளை அடையாளப்படுத்தும் நிலை. கையிலிருந்த வாள்களும் இல்லை. வாளுக்கு பின் வந்த ஆயுதங்களும் இல்லை. ஏன் எங்களோடு நின்ற தோள்களே இல்லை. எதுவுமே இல்லாத எமது கையில் தரப்பட்டது நில ஆக்கிரமிப்பு பத்திரம். எங்கள் காணிகளில் அதை ஒட்டும்போது நாம் அழுதோம். மனதுக்குள் அழுதோம் ஏனெனில், வெளியே தெரிந்தால் நாம் அழுவது அபசகுனமாகிவிடும்.

என் மகளுக்கு சீதனம் கொடுப்பதற்காக என்று எண்ணியிருந்த காணியை இன்று மாற்றானுக்கு கொடுக்கின்றேன். என் அப்பா வாழ்ந்த நிலத்தில் நானும் வாழலாம் என்று எண்ணியிருந்த காணியை இன்று மாற்றானுக்கு கொடுக்கின்றேன். என் தங்கைக்கு வாழிடம் அமைக்க என்று எண்ணியிருந்த நிலத்தை இன்று சிங்களவனுக்கு கொடுக்கின்றேன்.

ஒரு கணம்... ஒரே ஒரு கணம்.... நினைத்துப் பாருங்கள் அந்த நிலையை. சிறீலங்கா அரசாங்கத்தில் அரச உத்தியோகம் பார்க்கின்ற காரணத்தால் எங்கள் நிலங்களை அவன் ஆக்கிரமிக்க நாங்களே உறுதியெழுதிக் கொடுத்தது போல அந்தக் காணிகளுக்குள் ஆக்கிரமிப்பு துண்டுகளை ஒட்டினோம். ஐயகோ.... எத்தகைய அழகிய நிலம் அது. 20 வருடங்களுக்கு முன்னர் எங்களை அங்கிருந்து துரத்திய காலம் தொடக்கம் சிங்களப் படைகள் அங்கே எங்கள் நிலத்தில் விவசாயம் செய்கின்றது. மரக்கறி, பழமரத் தோட்டங்களைச் செய்கின்றது.

வடபகுதியிலுள்ள அனைத்துப் படை முகாம்களுக்கும் தேவையான மரக்கறிகளும் பழங்களும் வலி.வடக்கிலுள்ள தோட்டங்களிலிருந்துதான், எமது தாய் மடியிலிருந்துதான் உற்பத்தியாக்கப்படுகின்றன. அந்தத் தோட்டங்களைப் பார்க்க எங்களுக்கு இதயம் வெடித்தது. இந்த இடங்களை எப்படி சிங்களவனுக்கு விட்டுக்கொடுப்பது என்று எமக்குள் புலம்பினோம். ஆனாலும், என்ன செய்வது, எங்களுக்குள்ளும் யாராவது உளவாளிகள் நிற்கிறார்களோ தெரியாது என்று எங்களைச் சுதாகரித்துக்கொண்டு நாங்கள் அபகரிப்பு பிரசுரங்களை ஒட்டிவிட்டு வந்தோம். இந்த நிலம் இனிமேல் எமக்குக் கிடைக்காதா என்ற ஏக்கம் வலி. வடக்கு மக்களிடம் மட்டுமல்ல. ,வலி.வடக்கைப் பற்றி அறிந்த, தெரிந்த ஒவ்வொரு மக்களிடமும் இருந்துகொண்டுதானிருக்கிறது. இந்தக் கவலைகள் தொடர்கதையா? அல்லது இதை தடுக்க வழி உண்டா என்று நாம் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.

நிச்சயமாக நாங்கள் இதைத் தடுக்க முடியும். எவ்வாறு என்றால், முதலாவது புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வசிக்கின்ற நாட்டு அரசாங்களுக்கும், இந்தியத் தமிழர்கள் இந்திய அரசாங்கத்திடமும் மிக முக்கிய கோரிக்கையாக இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தடுக்க முடியும்.

புலம்பெயர் தேசத்திலிருக்கிற தமிழர்கள், இது எங்கள் நிலம், நாங்கள் வாழ்ந்த நிலம், எமது தாயக நிலம் எமது உறவுகள் வாழ வேண்டிய நிலம். இப்போது அங்கே புலிகள் இல்லை. பயங்கரவாதம் இல்லை. இந்த நிலையில் ஏன் இந்த அபகரிப்பு? இந்த அபகரிப்பை நிறுத்துமாறு சிறீலங்கா அரசாங்களுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தாங்கள் தற்போது வதியும் நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க முடியும்.

இந்த அழுத்தங்களை கவனயீர்ப்பு போராட்டங்கள் மூலமாக, மின்னஞ்சல்கள் மூலமாக, தந்திகள் மூலமாக வெளிப்படுத்த முடியும். இது வெற்றியளிக்காவிட்டால் வீதிப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் சிந்திக்கலாம்.

மேலும், தாயகத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாயகத்தில் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதுடன் சர்வதேச நாடுகளுக்கும் அவசர தந்திகளையும் மின்னஞ்சல்களையும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்ததாக நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க வேண்டும். அல்லது நாடாளுமன்ற வாசலில் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் யாரையும் யாரும் பகைத்துக்கொள்ளாமல், யாருடனும் யாரும் முரண்படாமல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நாங்கள் இன்று இந்த நில அபகரிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லையாயின் நாளை இப்போது நாமிருக்கின்ற வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து இராணுவ முகாமை அமைத்துவிட்டு எங்களைத் துரத்தியடிக்கவும் சிங்களவன் பின்னிற்கமாட்டான்.

சிந்தியுங்கள்...

தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு

Monday, May 6, 2013

புலம்பெயர் தமிழர் விளங்க வேண்டிய நாம் சிங்களவர் கொள்கைகள்…



நாம் தமிழர் என்று சிந்திப்பது நல்லது ஆனால் அதுமட்டும் போதியதல்ல சமகாலத்தில் நாம் சிங்களவர் என்ற கொள்கையும் சீர்தூக்க வேண்டும்..

முதலில் நாம் சிங்களவர் கொள்கையென்றால் என்ன.. இதோ ஆதாரங்கள்..

தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மூன்று பெரும் போர்களை தேர்வு செய்து மூன்று காவிய நாயகர்களை அடையாளம் காட்டுகிறது மகாவம்சம்..

இந்தக் காவியநாயகர்கள் கொள்கைகளில் மறைந்துள்ளதுதான் ” நாம் சிங்களவர் ” கொள்கை..

01. மகாவம்சம் பாகம் ஒன்றின் காவிய நாயகன் துட்டகைமுனு
02. மகாவம்சம் பாகம் இரண்டின் காவிய நாயகன் 1ம் விஜயபாகு
03. மகாவம்சம் கடைசிப்பாகத்தின் காவிய நாயகன் மகிந்த ராஜபக்ஷ


இனி விடயத்திற்கு வருவோம்…

இந்த மூன்று சிங்களவர்களும் தமிழருக்கு எதிராக நடாத்திய காவியப் போர்களிலும் அவர்கள் கடைப்பிடித்த “நாம் சிங்களவர்” கொள்கை ஒன்றே ஒன்றுதான்.. எளிமையாக ஒரே வரியில் சொன்னால்..

“தமிழர்களுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் எந்தவிதக் குற்றமும் பார்க்காது சேர்த்துக் கொள்ளும் சிங்களம்..”


இலகுவான விளக்கத்திற்காக முதலில் மகிந்த ராஜபக்ஷ..

01. அன்று 600 சிங்களப் போலீசாரை கொன்று புதைத்த குற்றச்சாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணாவை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக்கி, பின் மந்திரியாக்கி, அவரின் உதவியுடன் தமிழரை அழத்தார்கள்.

02. விடுதலைப்புலிகளுக்கு ஆயுத முகவராக இருந்த கே.பியை புலிகள் தலைமைக்கு தெரியாமலே நெடுகாலத்துக்கு முன்னரே நண்பராக்கிவிட்டனர்.

03. விடுதலைப் புலிகளைத் தவிர தமிழின விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய மற்றைய அனைவரும் ஏறத்தாழ இன்று சிங்கள இனவாதத்துடன் இணைந்து நிற்கிறார்கள்.

04. ராஜிவ் கொலையை காரணம் காட்டி சோனியா குடும்பத்தையும், காங்கிரசையும் வளைத்துப் போட்டார்கள்..

தமிழரை அழிப்பதென்றால் சிங்கள இனவாதம் பேயுடனும் கூட்டுச் சேரும் என்பதற்கு மகாவம்சம் மூன்றின் உதாரணம் இதுவாகும்.


மகாவம்சம் இரண்டின் காவிய நாயகன் 1ம் விஜயபாகு

01. சோழர்களை வெற்றிகொள்ள பாண்டிய இளவரசி திருலோகசுந்தரியை மணமுடித்தான் சிங்கள அரசன் முதலாம் விஜயபாகு… அதன் மூலம் பாண்டியர்களை சோழர்களுக்கு ஆதரவாக போக விடாது தடுத்தான்.

02. சேர அரசர்களுடன் விவாக பந்தங்களை ஏற்படுத்தி சோழர்களை தனிமைப்படுத்தினான்..

03. முடியுடை மூவேந்தர்களையும் மூன்றாக்கி, அதில் இருவரை தன்பக்கம் சேர்த்து, பொற்காலம் கண்ட சோழரையே ஆட வைத்தான்.

நிறைவாக 1077 ல் சோழர்களை வென்று, இலங்கைத் தீவில் அவர்களுடைய 77 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..

தமிழன் மற்றவனில் குறைபிடித்து, இவன் உண்மைத் தமிழனா என்று துருவித் துருவி ஆராய்ந்து, தனக்குத்தானே குறைபிடித்து, தனிமைப்பட்டு செல்லும் இனம் என்பது அவனுடைய கணிப்பு..

அவர்களை வெல்ல சிறந்தவழி, அவர்களுடைய எதிரிகளுடன் கூட்டுவைப்பதே என்று விஜயபாகு சிங்களவருக்கு சொல்லி வைத்தான்.

அதுதான் “நாம் சிங்களவர்..!” கொள்கை…!


இனி மகாவம்சத்தின் முதல் காவிய நாயகன் துட்டகைமுனு..

01. தமிழருக்கு எதிராகப் படையில் சேரும் ஒவ்வொருவரும் தன்னோடு புதிதாகப் பத்துப்பேரை சேர்க்க வேண்டும், அவர் தமிழராக இருந்தாலும் காரியமில்லை.

02. சிங்களவரின் ஒரேயொரு பொது நோக்கம் தமிழரை அழிப்பது, அதற்காக ஒன்றைப் பத்தாக பெருக்குவதே தமிழருக்கு எதிரான நாம் சிங்களவர் என்ற பொதுக்கொள்கை என்று அறிவித்தவன்.

தமிழ் நாட்டு தமிழர்பற்றி அவன் சொன்ன செய்தி…

தமிழ் நாட்டு தமிழர்கள் சாவதற்கு முன் பொங்கி எழ மாட்டார்கள், செத்த பின் கேட்கும் ஒப்பாரி போல பொங்குவார்கள்…

உதாரணம்…

எல்லாளனுக்கு உதவ வந்த தமிழகத் தளபதி பாலுகன் தலைமையிலான படை எல்லாளன் இறந்த பின்னர் ஒரு வாரம் தாமதமாகவே மன்னாருக்கு வந்தது, அனைத்துப் பலத்தையும் ஒன்றுகூட்டி பாலுகனையும், படைகளையும் கொன்று கடலில் வீசினான்…

பாக்கு நீரிணை தமிழ் இரத்தத்தில் சிவந்தது….

தமிழகத் தமிழரின் பிரதான குறைபாடு ” லேற்…”

இன்னொரு உதாரணம் உடனடியாக போரை நிறுத்த வழியிருந்தும் மு.கருணாநிதி தாமதமானார்..

வீண் உண்ணாவிரதம் இருந்து காலம் தாழ்த்தி, பாலுகன் போல தவறிழைத்த மு. கருணாநிதி தமிழக “லேற்..” வரலாற்றின் இன்னொரு சாபக்கேடு..

இப்போது அவருடைய டெசோ செத்தபிறகு கேட்கும் ஒப்பாரி..

இதை நாம் சொல்லவில்லை துட்டகைமுனு கதை சொல்கிறது.

இனி சென்ற வார உதாரணம் :

தமிழனுக்கு எதிராக படுகொலைக்களத்தில் இறங்குகிறானே இந்தப் புத்தபிக்கு இவன் கருணா, கே.பி பற்றி வாயே திறக்காமல் இருக்கிறானே.. ஏன்..?

தமிழனுக்கு எதிரென்றால் பேயுடன் அவனும் கூட்டு வைப்பான்..

தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, குழந்தைகளை புணர்ந்து, சர்வதேச போர்க்குற்றம் புரிந்தாலும் புத்தபிக்குவின் பார்வையில் அவன் காவிய நாயகனே..

இல்லாவிட்டால் மகாவம்சம் தனது வரலாற்றை நீட்டி மகிந்தராஜபக்ஷவை காவிய நாயகனாக்குமா..?

நேற்று முன்தினம் தமிழ்ப்படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றவன் கூடவே என்ன சொன்னான்..?

கேரளப்படங்களை பாருங்கள் என்றான்…

பாருங்கள் எவ்வளவு நுட்பமாக அவன் திராவிடர்களைப் பிரிக்கிறான் என்று..

ஆம்…

திராவிடனை பிரிக்க வேண்டும் என்ற அவனுடைய கொள்கை மிகப்பழையது..

இனி சென்றமாத உதாரணத்தைப் பாருங்கள்…

சிங்கள இனவாத அரசின் இந்தியத் தூதுவன் பிரசாத் காரியவசம் என்ன செய்தான்..?

சிங்களவரின் 75 வீதமானவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களே.. ஆகவே தமிழகத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை ஆதரிக்க வேண்டாம் என்று வட இந்திய தலைவர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் போட்டான்..

இதன் நோக்கமென்ன..? வடக்கு, தெற்கு என்று இந்தியாவை பிரித்து, வடக்கை தன்பக்கம் இணைக்க முயன்றது அவனுடைய கொள்கை..

இதுவும் மிகப் பழையது 1ம் விஜயபாகுவினுடையதுதான்…

சரி இனி என்ன நடக்கும்…

ஒரு வேளை இந்தியா சிறீலங்காவிற்கு எதிராக மாறினால்…

மாறியவர்களின் எதிரியைக் குறிவைத்து, இந்தியாவிற்குள் கூட்டு வைத்துக் கொள்வார்கள் உதாரணம் : சுப்பிரமணியசுவாமி போன்றவர்கள்.

மறுபுறம் சர்வதேச அளவில் இந்திய எதிரிகளுடன் கூட்டு வைப்பார்கள்.

இனி… மறுபக்கமாக…

கடந்த 2000 ம் ஆண்டுகளாக நடைபெறும் தமிழ் சிங்கள இனப்போரில் தமிழர்கள் கடைப்பிடிக்கும் கொள்கை என்ன..?

அவன் தெலுங்கன், இவன் மலையாளி, இவன் காக்கைவன்னியன், அவன் அந்தச்சாதி, இவன் இந்தச்சாதி என்று தன் இனத்தையே தனக்குள் பிளவுபடுத்தி தாமே தனிமைப்படுகிறார்கள்.

சிங்கள இனவாதம் கொடியது அழுக்கானது என்றாலும் அது கூட்டல் விதியைக் கடைப்பிடித்து வெற்றி பெறுகிறது..

தமிழர்களோ கடும் தூய்மைவாதம் பேசி எல்லோரையும் விலத்தி, விலத்தி கழித்தல் விதியைக் கடைப்பிடித்து கடைசியில் தனிமரமாகித் தோல்வியடைகிறார்கள்.

தன் தம்பி விபீடணனை இழந்து தோற்ற இராவணன், நண்பன் எட்டப்பனை இழந்து தனிமரமாக புளியமரத்தில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன்.. இப்படி உதாரணங்களை அடுக்கலாம்..

இனி… சிங்கள இனவாதத்தை வெல்ல என்ன செய்ய வேண்டும்..

சிங்களம் என்றால் கூட்டல் தமிழர் என்றால் கழித்தல் என்ற பழைய விதியை மாற்ற வேண்டும்..

நாம் தமிழர் என்றால் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்…

முதலில் கையில் இருக்கும் கழித்தல் அடையாளத்தை தூக்கி வீசிவிட்டு, கூட்டல் அடையாளத்தை கையில் எடுக்க வேண்டும்.

சற்று முன் நடந்த ஒரு நிகழ்வு…

வடகொரியாவின் உற்ற நண்பனான சீனாவை தனது பக்கம் சேர்த்து, உலகம் வடகொரியாவுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறது..

வடகொரியாவின் கையில் அணு ஆயுதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யோன் கர்ரி பெய்ஜிங்கில் நின்று கூறியுள்ளார்..

இதையெல்லாம் ஒப்பிட்டு மக்கள் மன்றில் பேசாமல் வெற்று உணர்ச்சி அரசியல் பேசக்கூடாது..

ஆம்…

தமிழர்கள் எங்கோ தொலைத்த திறப்பை வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடும் இனமாக இனியும் பயணிப்பதை அனுமதிக்க முடியாது.. அனுமதிக்கக் கூடாது என்பதற்காக ஆதாரங்களுடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது..

நாம் தமிழர் என்று தமிழர் ஒன்றுபடுவதை வரவேற்க வேண்டும், ஆனால் அது நாம் சிங்களவர் என்ற கொள்கையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, செம்மைப்படுத்தப்பட வேண்டும்..


கி.செ.துரை

அலைகள்

Sunday, May 5, 2013

டக்ளஸ் தேவானந்தா.., தேர்தலில் குதிக்கும் ஒரு கொலையாளி…!



இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்துகொள்ளாத தாடித்தோழர்களைக் கொண்ட EPDP எனப்பட்டது.

ஆரம்பத்தில் மக்களை மிரட்டிப் பணம் பறித்த இந்தக்கூட்டம், வடமாகாணத்தின் நகரப்புறங்களில் அதிகமாக அடாவடிகளில் ஈடுபடுவோரைத் தம்முடன் இணைத்துக்கொண்டது. காரணம்; இவர்களது இலக்கு அடாவடி செய்வது மட்டுமே. பின்னாளில், ஸ்ரீலங்கா அரசுடன் இணைவதற்குப் பல முயற்சிகள் எடுத்தும் அது பலன்பெறாத நிலையில், ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே, தாம் புலிகளுக்கு எதிரானவர்கள் எனக் காட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதற்காக; விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துவது அல்லது அவர்களைக் காட்டிக்கொடுப்பது, அவர்களின் பெற்றோர் உறவினர்களைக் கொடுமைப்படுத்துவது, அவர்களுக்கு உணவு கொடுப்பவர்களைச் சுட்டுக்கொலைசெய்வது, தமக்குப் பணம் தராதவர்களை விடுதலைப்புலிகள் எனக்கூறி கடத்திச் சென்று கொலை செய்வது போன்ற கைங்கரியங்களில் இவர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள்.

பின்னாளில், தமிழ்மக்கள் மீது மென்போக்கைக் கடைப்பிடித்த இவர்களது தோழர்களே, இவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதும் ஒரு கசப்பான வரலாறு. அதற்குச் சிறந்த உதாரணம்; யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு வந்த முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான ரொபேர்ட் என்பவர். இவர் தமிழ் மக்களோடும், தமிழீழ விடுதலைப் புலிகளோடும் இணைந்து செயற்பட அதிக விருப்பம் காட்டினார். அது தமக்கு இடையூறாக அமைத்துவிடும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, டக்ளஸ் தேவானந்தாவின் நேரடிப்பணிப்புரையின் கீழ் அதிகாலை வேளை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்பு அந்தப் பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தினார். ஆனால் EPDP குழுவாலேயே அவர் சுடப்பட்டார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

இவர்களால் அநியாயமாகச் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்றுமொருவர், கொழும்பு நகரில் EPDP யின் வெளியீடுகளை மேற்பார்வை செய்தவந்த பாலா எனப்பட்ட பாலசுந்தரம். EPDP யினரின் அட்டூழியங்களை பின்னாளில் நன்றாகப்புரிந்தகொண்ட இவர், அவர்களை விட்டு விலகித் தமிழீழ விடுதலைப்புலிகளோடு இணைந்து செயற்படவிருப்பம் கொண்டிருந்தார். அதற்காக மிகவும் இரகசியமான முறையில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பாலகுமார் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, தாம் குடும்பத்தினரோடு கிளிநொச்சிக்கு வந்து சேரவிருப்பதாகவும், தம்மை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர்களிடம் வேண்டியிருந்தார். அதற்கு விடுதலைப்புலிகளின் தலைமையும் சம்மதம் அளித்திருந்தது. ஆனால் இதை எப்படியோ தெரிந்துகொண்ட டக்ளஸ், மிகவும் புத்திசாதுரியத்துடன் அவர் மீதான படுகொலை விளையாட்டை நடாத்தியிருந்தார். அது எப்படியெனில்; தினமும் பாலா அவர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல EPDP குழுவினர் அவரது வீட்டு வாசலிற்கு சரியாக 8:30 மணிக்கு வருவார்கள். அந்தக் குழுவினரோடு இணைந்தே பாலா அவர்கள் நாரகேன்பிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்குச் செல்லவது வழக்கம். ஆனால், இவர் சுடப்பட்டு இறந்த அன்று காலை குறிப்பிட்ட நேரத்திற்கு இவரை அழைத்துச் செல்லும் குழுவினர் அங்கு வந்திருக்கவில்லை. இவர் தொலைபேசியில் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இன்னும் சிறிது நேரத்தில் தாம் வந்துவிடுவதாகவும், வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் காத்திருக்குமாறும் பதில் தரப்பட்டது. அதற்கமைவாக பாலா அவர்கள் வீட்டுவாசலடியில் காத்திருந்தபோது, உந்துருளியில் வந்தவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்பு அந்தப்பழியும் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டது. ஆனால், தமது கணவர் EPDP யினராலேயே சுடப்பட்டார் என்பது அவரது மனைவிக்கே நன்றாகத்தெரிந்த ஒரு விடயம். உயிர்ப்பயம் காரணமாக, இன்றும் அவர் மௌனமாக வாழ்ந்துவருகிறார்.

மிகவும் கேவலமான முறையில் செயற்பட்டுவந்த இந்த EPDP ஒட்டுக்குழு 1998ஆம் ஆண்டு களுத்துறைச் சிறைச்சாலைக்குக் கைதிகளைப் பார்வையிடச் சென்றிருந்தபோது, தமிழ் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டது. ஆனாலும் டக்ளஸ் உயிர்தப்பினார். பம்பலப்பிட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் இவர்களின் தலைமை அலுவலகம் இயங்கிவந்தார்கள். அலுவலகத்தின் முன்புறமாக, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியும், இடதுபுறமாக, செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகமும் அமையப்பெற்று இருக்கும் அவ்விடத்தில் முற்றுமுழுதாக மக்கள் நடமாட்டம் EPDP யினராலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், கண்காணிக்கப்பட்டு வந்தன.

கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டிருந்த காரணத்தினால் EPDPயினரின் அலுவலகத்திற்கு அருகாமையில்; பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு அப்பாவித் தமிழ் இளைஞர் 2006ஆம் ஆண்டில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். சுடப்படுவதற்கு முன்தினம் இரவு, EPDP ஆயுததாரிகளால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் இவர் முறையீடு செய்திருந்தார். ஆனாலும் மறுதினம் இவர் EPDPயின் குழுவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரும் இக்குழுவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைவிடவும் எமக்குத்தெரியாத எத்தனையோ புத்திஜீவிகள், கல்விமான்கள் இவர்களாளல் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

பின்பு, இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சைத் தனதாக்கிக் கொண்ட டக்ளஸ், தமது பழைய எதிரியான மகேஸ்வரன் அவர்களை சுட்டுக்கொலைசெய்தார். அதைக்கொலையாளியே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தார். இன்று, தேர்தல் காலத்தில் ஏனைய கட்சிகளை மிரட்டுவதிலும், ஏனைய கட்சிகளின் சுவரொட்டிகளுக்கு கறுப்புவர்ணம் பூசியும், தமது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் கேவலமான முறையில் EPDP குழு நடாத்திவருகிறார்கள். இதைவிட ஒருபடி மேலாகச்சென்று, ஒரு தொகுதி மக்களை நலன்புரி முகாம்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றி, அவர்களை மீளக்குடியேற்றிவிட்டோம் என வெளியுலகிற்குக் காட்டி, அதன்மூலம் தமது வாக்குவங்கியைப் பலப்படுத்தவும் EPDP ஒட்டுக்குழு முயன்றுவருகிறது. ஆனால் நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்கள் துரையப்பா விளையாட்டரங்கில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்ட பின், மீண்டும் நலன்புரிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். டக்ளசின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எமது மக்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுப்பபதற்கு அங்கு எவருமே இல்லையென்பதும் மிகவும் வேதனையான ஒரு உண்மை. எமது மக்களின் எதிர்காலம், மீண்டுமொருமுறை கொலைஞர்களின் கையில் செல்லாதிருக்க, நாம் அனைவரும் தேர்தல் காலங்களில் ஒன்றிணைந்து நிற்போம். எமது மக்களின் விடிவிற்காக கடுமையாக உழைப்போம்.

பண்டாரவன்னியன்

Saturday, May 4, 2013

தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம்



2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, பல ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள்..

ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள், இன்னும் எத்தனைபேர் உளநலம் பாதிப்படைந்தார்கள் என்பதெல்லாம் தெரியாத கணக்காகவே இருக்க!

தமிழன் தன் தாய் மண்ணையும், பல மாவீரர்களையும் இழந்திருக்கும் நிலையில் இருக்க!

உலகமோ, அழிக்கும் பௌத்த அரசின் பின்னால் நிற்க!

காந்தீயம் காசு நோட்டில் மட்டும் இருந்து சிரிக்க!

புலம் பெயர் நாடுகளிலெல்லாம் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்க!

சில மனிதர்கள் மட்டும் தாங்கள் ஏதோ வேற்றுக்கிரக மனிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

ஆறாத துன்பத்தில் ஈழத்தில் மக்கள் இருக்க, புலம் பெயர் நாடுகளில் தமிழன் தனக்கு நடந்ததை எல்லாம் மறக்கத் தொடங்கிவிட்டான்.

மீண்டும் கோடைகாலக் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள், மலிவு விற்பனை என்பன கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

எரி குண்டுகளால் எரிந்தும் எரியாத பிணங்களின் புகைப்படங்கள் இன்னும் கண்களில் தெரிய! மருந்தும், பாலும், ஏன் நீர் கூட இல்லாமல் இறந்த குழந்தைகளின் ஒளிப்படங்கள் இன்னும் கண்களில் மறையாமல் இருக்க, எப்படித் உறவுகளே உங்களால் கொண்டாட்டங்கள் செய்ய முடிகின்றன.

“ஊர் கூடித் தேர் இழுத்து” என்ற ஓர் வாசகம் தமிழில் உண்டு. ஈழத்தில் ஊர் ஊராய் தமிழன் இறந்து போனான். இன்னும் இறந்து கொண்டிருக்கிறான், இன்னும் இறப்பான். பெண்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படியான சூழ் நிலையில் எப்படி உங்களால் தேர் இழுக்க முடிகிறது புலம் பெயர் தேசத்தில்!

ஏதோ மனச்சாந்தி, இறந்தவர் ஆத்ம சாந்தி என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே காரணம் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் தமழிர்களே!

மன்னிப்பதும் மறப்பதும் மனித குணம் என்றும் சொல்லலாம். ஆனால் எமது எதிரி எம்மை என்றும் மறந்தது கிடையாது.

அவன் ஆட்சிக்கு வந்தாலும் மறக்காமல் எம்மைக் கொல்கிறான். எம் இனத்தை அழிக்கும் விடயத்தில் தங்கள் பேதங்கள் பகைமைகள் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக இருக்கிறான். ஆனால் அழிவின் பின்பும் நாம் தான் பிழவு பட்டு நிற்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போய் சந்தோசமாக இருக்க நாம் முயற்சியும் செய்கிறோம். அடிவிழுந்த காயம் ஆறுமுன்னே! திருவிழாவும், தேரும் இழுக்கத் தொடங்கிவிட்டோம். நம்மைப் பார்க்கும் வேற்றினத்தவன் நம்மைப்பற்றி என்ன விளக்கம் கொள்வான்! போனவாரம் பட்டினிப் போராட்டம், இந்த வாரம் கோவிலில் அன்னதானம்.

என்ன இனம் இந்த இனம் என்று எண்ணமாட்டானா?

போனவாரம் வரை மக்கள் அழுத-அலறிய ஒளிக்காட்சிகளைப் பார்த்தமக்கள், இன்று விழாக்கோலம் போடத் தொடங்கிவிட்டனர்.

போர் முடிந்தது என்ற எண்ணிவிட்டோமா? அல்லது ஈழம் தான் கிடைத்துவிட்டது என்று எண்ணிவிட்டோமா?

மறைந்த தமிழன் எத்தனை என்று இன்னமும் தெரியவில்லை. தன்னுயிர் ஈர்ந்த மாவீரர்களின் விபரங்கள் இன்னமும் தெரியவில்லை. முகாம்களில் கைதாகும் இளவயதினர் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்கள், என்ன ஆகின்றார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. காயமடைந்து வந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.

இப்படி எதுவுமே வெளிவராமல் இருக்க எப்படி எம்மால் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது.

உறவுகளே அழும் காலமல்ல இது?

நீங்கள் அழுது அழுது உங்கள் துயரங்களை ஆற்றிக் கொள்ள வேண்டாம்.

உங்கள் கோபங்கள் வெறியாக மாறவேண்டும். அது இந்த சர்வதேச மௌனிகளின் இதயத்தை திறக்கவேண்டும்.

இனப்படுகொலை நடந்தது என்பதை, நடக்கிறது என்பதை இங்குள்ள மக்களுக்கும், மந்திரிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் துயரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். கைதானவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு மறு வாழ்வு வழங்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழனுக்கு ஒரு நல்லாட்சி, சுய ஆட்சி, அமைய வேண்டும்.
இப்படி எவ்வளவோ செய்ய இருக்க நாங்கள் எமது கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள், மலிவு விற்பனை என்று நமது மனங்களை மாற்றுச் செயல்களில் செல்ல அனுமதிக்க வேண்டாம். அத்தோடு எமது நேரத்தையும் பணத்தையும் அதற்கு செலவு செய்யவும் வேண்டாம்.

நாம் பறி கொடுத்த உயிர்களுக்கு, நாம் வளங்கும் மரியாதை இதுவாகத்தான் இருக்கும்; தம் உயிரை ஈகம் தந்த மாவீரருக்குச் செய்யும் வணக்கமும் இதுதான்.

அந்நிய மண்ணில் நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அதை, எதிரி எடுத்துக் காட்டும் உதாரணமாகவும் மாறக் கூடும்.

ஆகவே உறவுகளே! கொண்டாட்டங்கள் இப்போது வேண்டாம்.

கனவுகள் நனவாகும் காலத்தில் அவற்றை பல மடங்கு பெரிதாகச் செய்வோம்.

அது வரை தமிழீழ தேசத்திற்காக உழைப்போம்.. உழைப்போம்... உழைப்போம்...

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)

பிரான்சிலிருந்து ரத்னா.

Friday, May 3, 2013

இலங்கையும் தமிழீழமும்!



இலங்கை இந்திய நாட்டின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு. இலங்கையின் வரலாறு மகாவம்சத்தின்படி கி.மு.6-ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன், தனது ஆட்களுடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியின் கீழ் இலங்கை இருந்ததை அதே மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது. பின்னர் இந்தியாவை போலவே ஆங்கிலேயரின் ஆட்சியில் 133 வருடங்கள் கழித்த இலங்கை, 1948-ல் சுதந்திரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் சிங்களர்கைக்கு மாறியது.

ஆங்கிலேயர் காலத்தில் சுமூக நிலையில் இருந்து வந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. இனமுரண்பாடுகளின் வெளிபாடுகள் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. தனி சிங்களச் சட்டம்- 1956, பௌத்தம் அரசு சமயமாக்கப்படல், இலங்கை குடியுரிமைச் சட்டம்-1948 (இதன் மூலம் இலட்சக்கணக்கான மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டது),கல்வி தரப்படுத்துதல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் (தமிழர்களின் மரபு வழித் தாயகப் பகுதிகளில்) போன்ற சட்டத்திட்டங்களை கொண்டு வந்தது இலங்கை அரசு. அதோடு அரசே திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்தியது. 1958-இல் ஆரம்பித்து தமிழர்களுக் கெதிரான இன கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1958, 1977, 1983 (கறுப்பு ஜூலை), பிந்துனுவேவா படுகொலைகள் போன்றவை திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் இலட்சக் கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் பலியாகினர். சட்டத்துக்குப் புறம்பாக தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சிங்களமயமாக்கம் மூலம் இலங்கை தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். உலகமே இந்த படுகொலைகளை கண்டனம் செய்தன.

இந்த தமிழின அழிப்பை எதிர்த்து தமிழ்மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் முக்கியமாக ஈழதந்தை எனப்படும் செல்வநாய கம் தலைமையிலான தமிழரசு கட்சி அறவழி போராட்டங்களை மேற்கொண்டது. அவரை தொடர்ந்து அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களிலேயே ஈடுபட்டது. சிங்கள ராணுவத்தைக் கொண்டு தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை ஏவிவிட்டது. அதற்கேற்ப சிங்கள ராணு வத்தினரும் தமிழர்களுக்கெதிராக வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போதுதான் சிங்கள அரசின் வன்முறைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல போராளி குழுக்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் உறுதியுடன் நின்று, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ மக்களின் தன்னாட்சிக்காக போராடி வந்திருந்தார்கள். ஈழத்தமிழர்கள் கேட்கும் தன்னாட்சி அதிகாரம் எந்த அளவுக்கு சரியானது என்பதை புரிந்துகொள்ள தன்னாட்சியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தன்னாட்சி உரிமை என்பது "மக்கள் திரள் ஒன்று அதன் அரசு விசுவாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மா னிக்கும் சுதந்திரம்' எனப்படுகிறது. இத்தன்னாட் சியை கோருபவர்கள் முதலில் ஒரு தேசிய இனமாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத் தினால்தான் தன்னாட்சி உரிமைக்காக போராட முடியும். இதனை வி.இ. லெனின் தனது "தேசிய இனங்களின் பிரச்சினை குறித்து' என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:

"ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாற்று படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் உரிமையும் அதற்குண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்குண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்த அளவில் தன் னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்' என்கிறார் வி.இ.லெனின். இந்த கோட்பாடுகளை கொண்டு பார்க்கும்போது தமிழ் இனம் ஒரு தேசிய இனத்திற்கான அனைத்து தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ளது. இதனை உலக அறிஞர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐ.நா. பொது அவை 1960-ல் "மக்கள் திரள் கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமையுண்டு' என்பதை ஏற்றுக்கொண்டது. அதேபோல உலக மனித உரிமைப் பிரகடனம் 1948-இல் வெளியிடப்பட்டது. அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து மற்றும் பிற கருத்துகள் தாயகம் அல்லது தாய்ச் சமூகம், உடமை, பிறப்பு மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' என பிரகடனப்படுத்தியது.

உலக அளவில் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் பற்றிய கருத்துகள் மேலோங்கிய தனால்தான் இங்கிலாந்திலிருந்து அயர் லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் விடுதலைப் பெற்றன. அதன்பின் யுகோசிலோவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குரோசியா, போஸ்னியா கெசகோவினா, மெந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் தனி நாடுகள் ஆகின. அதேபோல 1971-ல் வங்காள தேசமும், 1993-ல் எரித்திரியாவும், 2002-ல் கிழக்கு தைமூரும், 2008-ல் கொசொவோவும் தனிநாடுகளாக மலர்ந்தன.

ஆக, தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனம். அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்பதன் அடிப்படையில்தான் 1976-ம் ஆண்டு இலங்கையின் முக்கிய தமிழ்கட்சிகள் உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் "வட்டுக் கோட்டை தீர்மானம்' என்ற புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை.

1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

2. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

3. அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப் பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை அமைக்க வேண்டுமென கோரியது.

1977 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழரின் கனவு சுயநிர்ணய உரிமையே என்பதை பறைசாற்றியது. மக்கள் தீர்ப்பை உள்வாங்காத இலங்கை அரசு தமிழரின் உரிமை போராட்டத்தை நசுக்கியது. இதனை எதிர்த்து தமிழரின் தன்னாட்சி அதிகாரத்திற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விடுதலைபுலிகள் இயக்கம் நடத்திவருகிறது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகும். ஈழ மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட இந்திய அரசு 1987-க்கு முன்புவரை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது. இந்திரா காந்தி மறைவுக்கு பின்னர் இந்திய - இலங்கையின் வெளியுறவு கொள்கையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டன.

1998-ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை அரசுகளுக்குமிடையே வர்த்தகம் மற்றும் ராணுவ நெருக்கம் உருவானது. 2002-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இந்த பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக ராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் வாஜ்பாய் - ரணில் விக்கிரமசிங்கே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் இலங்கையில் ராஜபக்சே கூட்டணி 2005-இல் பதவியேற்றபோது சிறீலங்காவின் தேசப்பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்று கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதி செய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என கூறி வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் நான்காவது ஈழப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்தனர்.

நடந்து "முடிந்த' போரில் இலங்கை ராணுவத்தால் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் நடைபிணமாகினர். உயிர்காக்கும் மருந்துகள் கூட தடுத்து நிறுத்தப் பட்டன. சர்வதேச அளவில் தடை செய்யப் பட்ட பாஸ்பரஸ் மற்றும் இரசாயன குண்டுகளை சொந்த நாட்டு மக்கள் மீது ஈவு இரக்கமின்றி வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. சபை உட்பட மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை கேட்டும் தமிழின மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. வரலாறு கண்டிராத போர் குற்றங்களை செய்துள்ள சிங்கள ராணுவம் தெற்காசிய நாடுகளில் சீனா உட்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ தாக்குதல் தீர்வாகாது என ஒருபுறம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் ஆயுதங்களை வழங்கி வருந்திருக்கின்றன. எது எவ்வாறாயினும் சர்வதேச தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ள விடுதலைபுலிகளும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தற்சமயம் பின்னடைவை சந்தித்திருப்பினும், தமிழீழத்தின் தன்னாட்சி கோரும் உரிமை சாகாவரம் பெற்றவை என நிரூபிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!

எஸ். செல்வராஜ்

யூத வழியில் தமிழீழம்



1939-ஆம் ஆண்டு – ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு.

அதற்கான முதல் படியாக ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின.

இந்த தடுப்பு முகாம்கள்தான் பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஹோலோகாஸ்ட் என்றால் "ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது” என்று பொருள். அதுதான் யூத இனப்படுகொலையை குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.

1945 வரை நீண்ட இரண்டாம் உலகப் போரில் மிக அதிக அழிவுக்குண்டான இனம் யூத இனம். ஆனால் மூன்றே ஆண்டுகளில், அதாவது மே 14 1948-ஆம் ஆண்டு யூதர்கள் தங்களின் மரபு வழித்தாய் நாடான இஸ்ரேலின் விடுதலையை அறிவித்தனர். எண்ணிக்கையில் யூதர்களை விடமிக அதிகம் உள்ள, அரபிய நாடுகள் இஸ்ரேலின் விடுதலைக்கு எதிராக அணி திரண்டு போரிட்ட போது, அதனை எதிர்த்து "விடுதலைக்கானப் போரை” நடத்தி யூதர்கள் வெற்றி கண்டனர்.

எப்படி அது அவர்களுக்கு சாத்தியப்பட்டது? ஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாற்றினை உடைய யூத இனத்தினர், அவர்களின் சொந்த மண்ணான இஸ்ரேல் மீதான உரிமையினை சிறிது சிறிதாக இழந்தனர். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேல் மாறியது. அதுவும் இஸ்ரேல் என்ற பெயரில் அல்ல. பாலஸ்தீனம் என்ற பெயரில். மண்ணை இழந்து, மண்ணின் மீதான உரிமைகளை இழந்து, தங்கள் தாய் மண்ணின் மரபு வழிப் பெயரான இஸ்ரேல் என்பதும் மறைந்து பாலஸ்தீனமான நிலையில், வரலாற்றின் தொடர்ந்த காலக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்கள் இஸ்ரேலைவிட்டு அய்ரோப்பாவிற்கும், வடக்கு ஆப்ரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் குடி பெயர்ந்தனர்.

எங்கு சென்றாலும் அவர்கள் அந்நாட்டு மக்களுடன் இணைந்த ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட போதிலும், சிலவற்றை விட்டுக் கொடுக்காது இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.முதலாவதாக, எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை. தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியை கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம்.

தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இரண்டாவதாக, தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மிக கண்டிப்பாகப் பின்பற்றினர்.மூன்றாவதாக, தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங்களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர்வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

நான்காவதாக, பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப்பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.இவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்கு முன். இரண்டாம் உலகப் போரில் தங்கள் இனத்தின் மீது மிகப் பெரிய இனப் படுகொலை நடந்தேறிய போது, அது உலகெங்கும் உள்ள யூத மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதில் வியப்பில்லை.

ஆனால் அந்த அதிர்ச்சி அவர்களை உறைய செய்துவிடவில்லை. மாறாக அவர்களுக்குள் ஒரு உறுதியை ஏற்படுத்தியது. உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனாலும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந்தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்தகையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத்தினை, உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்.

"யூதர்களுக்கு என ஒரு நாடு வேண்டும். அது அவர்களின் மரபு வழி தாய் நாடான இஸ்ரேலாக இருக்க வேண்டும்”இதுவே அவர்களின் ஒரே இலட்சியமாக இருந்தது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை அவர்கள் திட்டமிட்டனர். முதலாவதாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் இனப் படுகொலையினால் சீர் கெட்டிருந்த தங்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கும் முன் பொருளாதார வளம் பெற்றிருந்த போதிலும் செய்யாத ஒன்றை தற்போது திட்டமிட்டு செய்தனர்.

தங்களின் பொருளாதார நிலையினை கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர். இரண்டாவதாக, உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங்கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.

ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத்தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொருக் கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர்.இந்த இரண்டின் அடிப்படையிலும் அறிவுப் பூர்வமாக காய்கள் நகர்த்தி, மூன்றே ஆண்டுகளில் தங்கள் நாட்டின் விடுதலையை அறிவிக்கும் அளவிற்கு பலம் பெற்றனர். அவர்களின் "விடுதலைக்கானப் போர்”, நாட்டு விடுதலையை அறிவித்தப் பிறகே நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டின் விடுதலையை தன்னிச்சையாக அறிவிப்பது என்பது விளையாட்டு அல்ல. அது கேலிக் கூத்தாக போகாமல் இருக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒரு நாடாவது இந்த விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.இந்த இடத்தில் தான் யூத மக்கள், அவர்கள் வெளியேறி வாழ்ந்த நாடுகளில் பெற்றிருந்த பொருளாதார பலமும், அதிகார மட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டது.

பல நாடுகள் இஸ்ரேலையும், அதன் விடுதலையையும் அங்கீகரித்தன.இதன் விளைவாக, யூதர்களுக்கென ஒரு நாடு, இஸ்ரேல், மீண்டும் பிறந்தது.யூதர்களைப் போலவே தமிழர்களும் 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களைப் போலவே மரபு வழியாக தங்களுக்கென நிலப் பகுதிகள் இருந்தும், அவற்றை ஆண்ட வரலாறு இருந்தும், இன்று அதன் மீது உரிமை அற்றவர்களாக நிற்கின்றனர்.

"இஸ்ரேல்" என்ற தொன்மைப் பெயர் உலக வழக்கிலிருந்து மறைந்து பாலஸ்தீனம் ஆனது போலவே, "தமிழீழம்" என்ற தமிழர்களின் தாய் நிலத்தின் தொன்மைப் பெயரும் உலக வழக்கிலிருந்து மறைந்து சிறிலங்கா என்ற பெயரே வழங்கப்படுகிறது. யூதர்களைப் போலவே இன்று தமிழர்களும், மண்ணை இழந்தவர்களாக, மண்ணின் மீதான உரிமையை இழந்தவர்களாக உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர்.

கடந்த 2009 மே மாதத்தில், ஈழத்தில் "கடற்கரைப் படுகொலை" என்ற பெயரில் நடந்திருப்பதும் மற்றொரு ஹோலிகாஸ்ட்டே. சொல்லப் போனால் யூதர்கள் மீதான இனப்படுகொலையையும் மிஞ்சிய இனப் படுகொலை நடந்தேறி உள்ளது. அதனை விட மோசமாக எஞ்சியுள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். ஹிட்லரின் தடுப்பு முகாம்களில் நடந்ததை விட கொடிய சித்ரவதைகளும், உளவியல் கொடுமைகளும் இங்கு நடந்தன.

ஈழ மக்களை காப்பதிலும், தமிழர்களுக்கு என ஒரு நாடு, தமிழர்களின் மரபு வழித் தாயகமான தமிழீழ நாடு, தமிழர்கள் வசப்படுவதிலும் தங்களின் கடமை என்ன என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் யூத வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நம்முடைய மொழியையும் உண்மை வரலாற்றினையும், அண்மை வரலாற்றினையும் நாம் எந்த அளவிற்கு அறிய தந்திருக்கிறோம் என்ற கேள்வியை நாம் எமக்குள் கேட்க வேண்டிய தருணம் இது.

விடுதலைக்கான போர் என்பது ஒரு தலைமுறை இரு தலைமுறைகளோடு நிற்பதில்லை. இறுதி வரை அதே உறுதியுடன் அது எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில், வரக் கூடிய ஒவ்வொரு தலைமுறையினரும் வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். வரலாற்றினை கற்பிப்பதன் மூலமாக மட்டுமே இன உணர்வினை எழுப்ப இயலும். போராட்ட உணர்வினை விதைக்க இயலும்.

வழி வழியாக போராட்டத்தை கைமாற்ற முடியும். நாடு விடுதலைப் பெற்றப் பிறகும், நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தப் பிறகும் நாட்டை கட்டமைப்பதற்கும், அதற்கு பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு நாட்டினை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதானப் பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும்.

அப்படி இல்லையேல் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஈழத்தில் இன அழிப்புப் போரினால் நம் மக்களை இழந்ததைப் போல, புலம் பெயர் நாடுகளில், மொழியையும் வரலாற்றையும் மறந்த மக்களாக, இன உணர்வு அற்ற மக்களாக, உயிருடன் நம் இளைய தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும். அடுத்ததாக, இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தாங்கள் வாழும் நாடுகளில் ஓரளவு பொருளாதார வளம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

அந்த பொருளாதார வளம், பொருளாதார பலமாக மாறவேண்டும். அந்த பலம், அதிகார செல்வாக்காக உருப்பெற வேண்டும். அதற்கானத் திட்டமிடல் வேண்டும். அவ்வாறு நடந்தேற வேண்டுமெனில் அதற்கு தனி மனித உழைப்பு, அறிவாற்றல், உறுதி மட்டும் போதாது. அவற்றிற்கு மேலாக ஒருங்கிணைவு வேண்டும். அனைவரும் ஒரே திசையில் சிந்திப்பவர்களாக, ஒரே திசையில் அடியெடுத்து வைப்பவர்களாக மாற வேண்டும்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்.

 பூங்குழலி

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு - இதயச்சந்திரன்



மே 2009 இற்குப் பின்னர் வட - கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாழ 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ  தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை, அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்குப் படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம், புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன.

மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது. ஆனாலும் கலாசார இன அழிப்பின் பல பரிமாணங்கள், வட- கிழக்கு எங்கணும் 2009 இற்குப் பின்னர் தீவிரமடைவதையிட்டு மனித உரிமை குறித்து ஐ.நாவில் தீர்மானங்கள் கொண்டுவரும் மேற்குலகிற்குப் புரிவதில்லை.

கால அவகாசம் வழங்குவதால் தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோவது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. இந்த வாரம் வடக்கிற்கு வசந்தப் பயணம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதிகாரிகள், யாழ் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், கிளிநொச்சியில் சிறிதரனையும் சந்தித்துப் பேசியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர் நிலமும், மண்டைதீவில் 600 ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உத்திர வேங்கை ஆலயக் காணியும் படையினரால் சுவீகரிக்கப்பட்ட விடயம் அமெரிக்க அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது.

இவைதவிர இரணைதீவு, பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் படையினருக்கு ஒதுக்கப்பட்ட விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது. முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

சாந்தபுரத்திலிருந்து தெல்லிப்பளை வரை, ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்கிற முழக்கத்தோடு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள். உயர் பாதுகாப்பு வலயம் இராணுவப் பிரதேசமாக மாற்றமடைவதற்கு எதிராக, கடந்த பெப்ரவரியில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடாத்திய வேளை, மக்கள் விரோதக் கும்பலொன்று தாக்குதலில் ஈடுபட்டது. அதில் பொதுமக்களோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொண்டன.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை பொதுசனமும் கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும்போது, படைப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களைப் புகைப்படம் எடுப்பது, ஒன்றுகூடும் இடத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது, ஆர்ர்ப்பாட்டம் முடிந்து வாகனங்களில் செல்வோர் மீது தாக்குதல் தொடுப்பது போன்ற பல ஒடுக்குமுறை வடிவங்கள் மக்களை நோக்கி பிரயோகிக்கப்படுகிறன.

இருப்பினும் நிலமிழந்த மக்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்வதற்காகப்  போராடும் முயற்சியினைக் கைவிடவில்லை. அவர்களை ஒன்றிணைத்து வெகுஜனப் போராடங்களை  முன்னெடுக்கும் வகையில் பலமான அரசியல் தளம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவையாக அமைகிறது. மக்களிடையே சாதிய, மத ரீதியான உள் முரண்பாடுகள் இருந்தாலும், பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அணி திரளவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே எவ்வாறு பகைமையுள்ள முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது குறித்து ‘தராக்கி’ சிவராம் அவர்கள் முன்வைத்த ஆய்வுகளை, வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். ‘உயர் பாதுகாப்பு வலயம்’ சட்டபூர்வமானதாக மாற்றப்படுகிறது என்பதுதான் இப்போதுள்ள தலையாய பிரச்சினை.

காணிச் சுவீகரிப்பு சட்டத்தின் 2வது பிரிவின் கீழ், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை), வலி.கிழக்கு (கோப்பாய்) என்கிற இரு பிரதேசப்பிரிவிலுள்ள, மொத்தமாக 11 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது மக்களின் 6381 ஏக்கர் 38.91 பேர்ச் காணி அரசால் சுவீகரிக்கப்படுகிறது. காணிக்கு உரிமை கோருவோரை அடையாளம் காண இயலாமல் இருப்பதால், இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியையும் (காங்கேசன்துறையும், பலாலியும்), யாழ்.பாதுகாப்பு பட்டாலியன் தலைமையகத்தையும் உத்தியோகபூர்மாகக் கையளிப்பதாகக் கூறும் அறிவித்தல் ஒன்றினை, யாழ் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த காணிச் சுவீகரிப்பு அதிகாரி எ.சிவசுவாமி விடுத்துள்ளார்.

தமது வாழ்விடங்களில் இருந்து 23 வருடங்களுக்கு முன்பாக, வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்தான் இந்த இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள். பயிர் செய்கைக்கு உகந்த அற்புதமான செம்பாட்டு மண் இங்கு பரவிக் கிடக்கிறது. தாம் வாழ்ந்த மண்ணைக்கூட இம்மக்களால் தரிசிக்க முடியவில்லை. அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சனநாயக நாடுகளுக்கு, முகவரியிழந்த மக்களின் குரல் கேட்காதா?. மீள்குடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறுகிறதென இன்னமும் பொய்யுரைக்கப்  போகிறார்களா?.

தீர்மானத்தால் விடியலின் வாசல்கள் திறக்கப்படுமென்று, மர நிழல்களில் வாழும் துன்ப்பப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களா?. காணாமல் போகடிக்கப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, சகோதர சகோதரிகளை தேடியலையும் உறவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது இந்த சர்வதேசம்!

முடிவின்றித் தொடரும் துயரங்களுக்கு மத்தியில், குடியிருந்த நிலமாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், சிறுதுளி நம்பிக்கையோடு வாழும் தமிழ் மக்களுக்கு, அடுத்தடுத்துவரும் காணி அபகரிப்பு சுவரொட்டிகள் அச்சத்தை ஊட்டுகின்றன. ஒருவருக்கு 5 படையினர் என்கிற வகையில் ஏறத்தாழ 31,000 இராணுவத்தினர் பூநகரியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதில் பூநகரியைச் சூழவுள்ள பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், மற்றும் முழங்காவில் உட்பட 800 ஏக்கரில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

சுவீகரிக்கப்பட்ட நிலத்தில், சீன தேசத்தின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை நிர்மாணிக்கும் திட்டம் அரசிற்கு இருக்கிறது. காற்றாலை உடன், சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையங்களை, மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் நிறுவிட, சீனத் தொடர்புடைய மலேசிய கார்பரேட் ஒன்றுக்கு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாதகல்லில் இருந்து வெளியேறிய 279 குடும்பங்களின் நிலை குறித்து மனித உரிமைவாதிகள் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை.

‘கண்ணி வெடி அபாயம்’ என்கிற பதாகைகள், திருவடிநிலை மக்களை குடியேற விடாமல் தடுக்கிறது. ஆனால் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இவைதவிர, உயர் பாதுகாப்பு வலயம் என்று குறிப்பிடப்பட்ட மயிலிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளில், இரண்டு விடுமுறை விடுதிகள் (Holiday Resort) படையினரின் பயன்பாட்டிற்காக சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு குடாநாட்டைத் துண்டாடும் வகையில், நீண்ட அணைகள் (BUND) வலி வடக்கில் கட்டப்படும் விசித்திரங்களையும் காணலாம். தொண்டமாணாறு செல்வச்சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அணை, ஓட்டகப்புலத்தை ஊடறுத்து பலாலி படைத்தளத்தை அண்டிய வசாவிளான் வரை நீண்டு செல்கிறது. குரும்பசிட்டியில் ஆரம்பித்து கட்டுவன் மற்றும் தெல்லிப்பளையை கடந்து செல்லும் மற்றுமொரு அணை காங்கேசன்துறையில் சங்கமிப்பதாக வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார்.

இந்த அணை கட்டும் வேலைத்திட்டத்தின் ஊடாக 26 கிராம சேவைகள் பிரிவிற்கு உட்பட்ட நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார். இந்நிலையில்  நில அபகரிப்பிற்கு எதிரான கனதியான போராட்டங்கள், தேர்தல் அரசியலைக் குறிவைக்காமல், குடாநாட்டில் முன்னெடுக்கப்படும் நிலை தோன்றுவதைக் காணலாம்.

தினசரி கூலியை 550 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்கிற போராட்டங்களும் மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு மனோ கணேசன் தாக்கப்பட்டுள்ளார். அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் வரவழைப்பதற்கு, தொம்சன் மதியுரைக் குழு என்கிற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ள அரசு, மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கிறதென நாட்டிற்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பொய்யான நம்பிக்கைகளைக் கொடுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால், மின்சாரக் கட்டண உயர்விற்கான காரணத்தை ஏன் கூறமுடியாமல் தவிக்கிறார் என்று ஐ.தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமாகிய கலாநிதி.ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.

ஆட்சி அதிகார மையத்தில் பொருளாதாரச் சுனாமி அலை மேலெழும் அதேவேளை, வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசு முன் வருகிறது. செப்டெம்பர் தேர்தலுக்கு முன்பாக காணிச் சுவீகரிப்புகள் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.

குவேனியின் கன்றுகளே !


சிங்கத்தைப் புணர்ந்து
உங்களைப் போட்ட 
குவேனிக்குக் கூட 
உங்களது செயலை
நினைத்தால் அருவருக்கும் !

அருவருப்பின் வழிவந்த
அரியண்டப் புத்திரரே(?)
நீவிர் அழிவது உறுதியடா !
நரமுண்ணும் பிசாசுகளே
நாலுகால் பிறவிகளே
சாக்கடையில் மிதந்துவந்த
சண்டாளப் பிறவிகளே 

உயிரற்ற உடலம் மீது
உங்கள் இயலாமையை
காட்டுகின்ற கோழைகளே 

கண்ணியம் புரியாத
காட்டுமிராண்டிக் கயவர்களே
நாய் கூடப் புரியாத
ஈனச் செயல் புரிகின்ற
ஊன மனம் கொண்ட
ஈனப் பிறவிகளே
புரிய வைக்கும் காலம் வரும் ! 

மனிதம் இல்லாத
மானிட உருக்கொண்ட
சிங்கத்துக்குப் பிறந்த
சீரியமும் இல்லாத
வீரியமும் இல்லாத
பிணம் தின்னும் கூட்டமே 

இனமென்று கொள்வதா
மனித இனம் நீங்களென்று
கொள்ளத்தான் முடியுமா(?) 

குவேனியின் கன்றுகளே
கொட்டம் அடங்குமடா 
குருட்டு வீணர்களே !
உயிரற்ற உடலென்றால்
சிவமென்பதெங்கள் மொழி 

பன்றிகள் மட்டுமே
உயிரற்ற உடலுண்ணும்
உண்மை அறிவீரா 

உங்களைப் படையென்றே
சொல்வதற்கு இயலாது
என்பதே எம் முடிவு ! 

கவிஞர்:மா.பாஸ்கரன்

Sunday, April 7, 2013

ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல்?



தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம் நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டது சிங்களம்.

அன்றைய காலகட்டத்தில் பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்ட முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை கொன்றுகுவித்தனர். சிங்களத்துடன், இணைந்து ஊர்காவல் படை என்ற போர்வையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் படுகொலைகளையும் மேற்கொண்டனர்.

1985 ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியென்பது, தமிழர்களை கொலை செய்வதும், சிங்களத்திற்கு பக்கவாத்தியம் பாடியும்தான் வங்கோரோத்து அரசியல் செய்தனர். அதனையே இன்றும் தொடர்ந்து கையாண்டுவருகின்றார்கள். முஸ்லீம்களின் அரசியலை கடந்த 2009 ஆம் ஆண்டு வரைக்கும் கச்சிதமாக பயன்படுத்திய சிங்களம், சர்வதேசத்தின் மூலம் இலட்சக் கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் முஸ்லீம்களையும் கையுதறிவிட்டனர்.

ஒரு சிறுபான்மை இனத்தை கொன்றொழிக்கும் போது வேடிக்கை பார்த்தவர்கள், இன்று தனது சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்ற வேளையில், தமிழர்களின் உதவிகளை நாடுவது அரசியல் தர்மமா? அல்லது சுயநல அரசியல் தேவைக்கான தாகமா? சிறீலங்கா பௌத்த நாடு, பௌத்தம் மாத்திரம்தான் இங்கு வாழ முடியும் எனத்திண்ணம் கொண்டுள்ள சிங்களத்துடன் ஏனைய மதத்தவர்கள் வாழ முடியாது என்பதை அறுபது ஆண்டு காலமாக தமிழ் இனம் உரத்து குரல் கொடுத்துவருகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மூர்க்கத்தனமாக, மனிதகுலமே அருவருக்கத்தக்க செயலில் சிங்களம் ஈடுபட்ட போதிலும், இன்றுவரை சிங்களத்தின் காலில் விழாத இனம்தான் தமிழ் இனம். தமிழனுக்கு தன்மானம் பெரிதென்று வாழ்பவன்தான் தமிழன். அற்ப சொற்ப சலுகைக்காக சிங்களம் போடும் எலும்புத் துண்டைக் காவுதல் தமிழனின் வழக்கமல்ல.

தமிழர்கள் வந்தான்-வரத்தான் அல்ல, பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த இடம் எமது தாயகப் பூமி. நாம் பூர்விக மக்கள். நாங்கள் யாரிடமும் மண்டியிட வேண்டியதில்லை. சிலபுல்லூருவிகளினாலும், சில தேசத் துரோகிகளினதும் தேசத் துரோகத்தனத்தினால் தமிழ் இனத்தின் மன்னர்களை வெற்றி கொண்ட சிங்களம் இன்றுரை அதனையே செய்து முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றியுள்ளது. அப்போதும், எமது உரிமைக்காக தாயகத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர் இடங்ளிலும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். எமது தொப்புள் கொடி உறவுகளும் தமிழகத்தில் எமக்காக குரல் கொடுத்துவருகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த காலக் கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து கடந்த ஆண்டு 2012 இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட சிறுபான்மையினர் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் எனச் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டனர். பெரும்பான்மை சிங்களத்தின் நெடுங்கயிற்றை விழுங்கிக் கொண்டு சுயஉரிமைக்கான அனைத்தையும் உதறித்தள்ளினர் முஸ்லீம் அரசியல் தலைவர்கள்.

உரிமைப் போராட்டம், உரிமைப் போராட்டம் என மேடை போட்டு கத்தும் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்று தனது இனத்தின் அனைத்து உரிமை மாத்திரமல்ல, கலை, கலாச்சார விழிமியங்களையும் சிங்களம் ஆதிக்கம் செய்ய முற்படுகிறது. பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மதச் சின்னங்களை உடைத்துள்ள சிங்கள ஆதிக்கம் கொண்ட அரசு, மறுபுறத்தில் பௌத்தம், பிற மதங்களை மதிப்பதாக உலகுக்கு சாக்குப் போக்கான கருத்துக்களை கூறித் தப்பித்துக் கொள்கிறது.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுருக்குக் கயிறு கழுத்தில் ஏறுவதைத் தடுப்பதற்காக ஐ.நாவில் முஸ்லீம் நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளும் மகிந்த அரசு, அதேசமயத்தில் இன்று முஸ்லீம்களின் பொருளாதாரத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு சாதாரண பௌத்த துறவிகளின் நடவடிக்கையல்ல, மிகப் பெரியளவில் திட்டமிட்டு இராணுவத்தின் பின்புலத்திலேயே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. விசஜந்தான ‘பொது பல சேனா’ எனும் கொடிய நச்சுத் தன்மையான அமைப்பின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே செயற்பட்டுவரும் நிலையில் இது நன்கு புலனாகும்.

சிறுபான்மை இனம் தமது தன்மானத்துடன் வாழ்வோம் என கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது, அதனையெல்லாம் காலால் உதைத்து தள்ளிவிட்டு இன்று வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டவுடனேயே தமிழ் தரப்புடன் பேசுவதற்கு தயார் என சிங்கள அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையில் தனது இனத்திற்காக குரல் கொடுப்பவர்கள் என்றால், தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டவுடனேயே சிங்கள அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேறியிருக்க வேண்டும்.

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைக்கு மேல் சென்ற போதும், சிங்களத்துடன் இணைந்துகொண்டு தமிழர்களை பேச்சுக்கு அழைப்பது எந்த வகையில் நியாயம்?, தமிழ் தலைமைகள்தான் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமா? முஸ்லீம்களை ஏமாற்றும் கருத்துக்களை கூறிக் கொண்டு சிங்களத்தின் குகைக்குள் பதுங்காமல் மகிந்தாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு தமது மக்களுக்காக குரல் கொடுப்பார்களாயின் அவர்கள் உண்மையில் வரவேற்கப்படுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கு இன்றுவரை முஸ்லீம் தலைமைகள் தயாராக இல்லையே..?

நன்றி : ஈழமுரசு
கிழக்கில் இருந்து எழுவான்

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்துநிறுத்துமா..?

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சிக்கான இறுதி உதாரணமாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் அரச படைகளின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வந்த இராணுவப் புலனாய்வாளர்களும் அவர்களின் கையாட்களான சில குண்டர்களும் அங்கிருந்த கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டமையானது வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தற்போது வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் சர்வதேச ரீதியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால், வடக்கு கிழக்கு இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் இங்கு இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதே முற்று முழுதான உண்மையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கிலுள்ள மக்களை அடக்கியாள்கின்றார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள மக்களை அடிமைகள் போன்று நடத்தி அவர்களின் சுதந்திரத்தை பறித்துள்ளார்கள் என்றும் உலக நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திய மகிந்த அரசு அந்த நாடுகளின் உதவியைப் பெற்று புலிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தது.

இந்த யுத்தம் மூலமாக இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்ததுடன் புலிகளின் கட்டமைப்புகளையும் அரசும் அரச படைகளும் தகர்த்தழித்தன. ஆனால், புலிகள் தமிழ் மக்கள் மீது சர்வாதிகாரம் நடத்தினார்கள் என்று கருத்து வெளியிட்ட மகிந்த அரசாங்கம் இன்று தனது படைகள் சர்வாதிகாரம் நடத்துகின்றபோது அதனை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? புலிகளின் ஆட்சியில் மக்கள் இருந்த நிலைமைக்கும் தற்போது மக்கள் இருக்கின்ற நிலைமைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் நேர்மையான ஆட்சியே நடைபெற்றது, சிங்கள அரசு சொல்வது போன்று தமிழ் மக்கள் புலிகளால் அடக்கியாளப்பட்டார்கள் என்றால், இன்று வடக்கு, கிழக்கு மக்களிடையே சிறீலங்கா அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இங்கே தற்போது நடைபெறும் சிறீலங்கா அரசின் ஆட்சியையா, புலிகளின் ஆட்சியையா மக்கள் விரும்புகிறார்கள் என்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் புலிகள் தான் தமிழர்களின் காவலர்கள் என்பது சிறீலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் புரியும். புலிகளின் ஆட்சியில் தமிழர் தாயகப் பகுதியில் நேர்மை, நியாயம், நீதி வழுவா நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் வழி நடத்தலில் செயற்பட்ட காவல்துறையும் நீதித்துறையும் இந்த நீதி பரிபாலிப்பை செவ்வனே நிறைவேற்றின. ஆனால், இப்போது இங்கே நடைபெறுகின்ற சிறீலங்கா அரசினதும் படைகளினதும் செயற்பாடுகளை நோக்கினால் உலகத்திலேயே கிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற கொடூர ஆட்சியாளர்கள் வரிசையில் மகிந்த ராஜபக்சவும் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

மகிந்தவின் ஆட்சிக்காலம் ஈழத் தமிழ் மக்களுக்கு கொடிய காலமாக, இருண்ட காலமாக மாறியிருக்கின்றது. இதனாலேயே தமிழர் தாயகப் பகுதியில் அராஜகங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கெங்கும் இந்த படையினரினதும் படைப் புலனாய்வாளர்களதும் அராஜகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி அறிவகம் மீதான காடையர்களின் தாக்குதல் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலானது இராணுவ மற்றும் காவல்துறைப் புலனாய்வாளர்களால் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகும். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகைக்கு எதிரான தாக்குதலாகவே இந்த தாக்குதல் சித்தரிக்கப்பட்டது. வன்னியில் கடந்த சில தினங்களாக உதயன் பத்திரிகைக்கு எதிரான போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் நடைபெற்று வருகின்ற ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பாக அண்மையில் உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் ஒரு கவிதை பிரசுரமாகியது.

அந்தக் கவிதையில் ‘யாழ்ப்பாணத்திலிருந்து பல கஸ்டங்களைக் கடந்து வன்னிக்கு வந்து எப்படி நான் மாடு மேய்ப்பேன்?’ என்ற வரிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதில் மாடுகள் என்ற பதம் மாணவர்களைக் குறிக்கின்றது என்றும் உதயன் பத்திரிகை வன்னி மாணவர்களை மாடுகள் என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வன்னி மக்களால் கோரப்பட்டது. ஆனால், உதயன் அவ்வாறு செய்யவில்லை. இதனால் வன்னி மக்களில் சிலர் ஒன்று கூடி மாணவர்களையும் இணைத்து உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது சில தினங்கள் தொடர்ந்தது.

இந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாலுள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சியின் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக படைப் புலனாய்வாளர்கள் அறிந்து அந்தக் கலந்துரையாடல் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஏற்கனவே, உதயன் பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேளை பயன்படுத்திய பதாகைகள் மற்றும் கோசங்கள் அடங்கிய அட்டைகள் போன்றவற்றைத் தேடியெடுத்த படைப் புலனாய்வாளர்கள் கிளிநொச்சியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து தாக்குதலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் தொண்டர்களாகிய குண்டர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிறைந்த மதுபானம் வாங்கிக் கொடுத்து உதயன் பத்திரிகைக்கு எதிரான பேரணியாக சிங்கக் கொடிகளையும் தாங்கியதாக போராட்டம் நகர்ந்தது. அனைவருக்கும் போதை. தாங்கியிருந்த பதாகைகளிலோ தூக்கிப் பிடித்திருந்த அட்டைகளிலோ எழுதப்பட்ட கோசங்களை எழுப்பாமல் போகாதே போகாதே ஜெனிவாவிற்கு போகாதே என்று உரத்துக் கோசமிட்டனர். அந்த நேரத்தில் கிளிநொச்சியிலுள்ள அறிவகத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சிறிதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் போன்றோர் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில், சுமார் 350 வரையான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தில் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியவர்கள். பத்து வரையானோர் அங்கவீனர்கள். நூற்றுக்கணக்கான விதவைகள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இடத்திற்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களான இராணுவ, காவல்துறைப் புலனாய்வாளர்களும் சிவில் உடையில் நின்ற இராணுவத்தினரும் முதலில் குறித்த அலுவலகத்தின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். பின்னர் மது போதையில் நின்ற ஏனையோர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அங்கு ஒரு யுத்தம் நடப்பது போன்றே சத்தங்கள் கேட்டன. கூட்டத்தில் கலந்துகொண்டோர் கல்வீச்சால் நிலைகுலைந்தனர்.

அறிவகத்தின் உள்ளேயும் வளாகத்திற்குள்ளேயும் ஓடி ஒதுங்கினர். இந்த நிலையில் திடீரென்று அலுவலகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு நின்ற பொது மக்களை மரக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். பின்னே கல்லெறித்தாக்குதலும் முன்னே மரக்கட்டைத் தாக்குதலும் நடைபெற்றதால் பத்திற்கு மேற்பட்ட பொது மக்களும் இரு ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர்.

இந்த அராஜகத் தாக்குதல் இடம்பெற்றவேளை அந்தக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த ஆறு காவல்துறையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காவல்துறையினருமாக பத்து வரையான காவல்துறையினர் அங்கு நின்றுள்ளனர். அவர்கள் கைகளில் ஏ.கே 47 துப்பாக்கிகளை வைத்திருந்தனர். ஆனால் அந்தத் தாக்குதலை நிறுத்துவதற்கு இவர்கள் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதனால், மிக அண்மையிலேயே இருந்த கிளிநொச்சி காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக அறிவித்த போதிலும் அவர்கள் உடனடியாக அங்கு வரவில்லை. தாக்குதலாளிகள் சென்று விட்டார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தான் காவல்துறையினர் வந்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் எதனைக் காட்டுகின்றதென்றால் சிறீலங்கா படைகளின் ஆதிக்கம் தான் வடக்கு கிழக்கில் நிலைத்திருக்கின்றது என்பதை துல்லியமாக எடுத்து விளக்குகின்றது. மக்களை மந்தைகள் போன்று நினைத்து எப்படியும் தாக்கலாம். அவர்கள் எதிர்த்து குரல்கொடுத்தால் கைது செய்து நாலாம் மாடியில் கொண்டு சென்று உதைக்கலாம் என்ற நிலையே இன்று சிறீலங்காவில் இருக்கின்றது. இந்த நிலை நீடிக்குமாயின் தொடர்ந்து தமிழ் மக்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக் கோடுகள் உள்ளன. அந்த எல்லைக் கோடுகளை அடையும் போது மீண்டும் இங்கே ஒரு யுத்தம் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நாங்கள் எமது பிரதேசத்தில் நிம்மதியான வாழ்வையே விரும்புகிறோம். இதற்கு சிறீலங்காவும் சர்வதேசமும் தடையாக இருந்தால் நாம் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

தாயகத்தில் இருந்து வீரமணி
நன்றி : ஈழமுரசு

Thursday, March 28, 2013

முத்தையா முரளிதரன் என்னும் சிங்கள அடிவருடியின் சிங்களப் பாசம்

Muttiah-Muralitharan-sri-lanka (1)

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது பெரும்பான்மையான தமிழக மக்களின் முடிவாகும், இது தொடர்பாக சிறிலங்கா அணியில் விளையாடிய முத்தையா முரளிதரன் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டு, அதன்பின்னர் விழாக்களையும நடத்தி சிங்களப் பேரினவாதிகள் கொண்டாடிய போது மஹிந்தவை வாழ்த்தியவர் தான் முத்தையா முரளிதரன். தற்போது தான் சிறிலங்காவில் மக்கள் நிம்மதியாக வாழுகிறார்கள் என்று சில ஆண்டுகளாக கூறிவருகிறார் முத்தையா முரளிதரன்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்த தமிழர், முதலில் அவருடைய மனச்சாட்சியைத் தொட்டு சொல்லட்டும் சிறிலங்காவில் மலையகத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிறார்களா என்று? சிங்களப் பேரினவாதிகள் பல உரிமைகளை வழங்காமல் அவர்களை பல ஆண்டுகளாக அடிமைகளாக மலையகத் தமிழர்களை வைத்துக் கொண்டு ஆண்டுவருகிறார்கள். தனது மலையகத் தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவரும் முத்தையா முரளிதரன் சிங்களப் பேரினவாதிகளைப் போற்றுகிறார். முதலில் தன்னுடைய மலையகத்தைச் சேர்ந்த தமிழர்களே நிம்மதியாக வாழமுடியாமல் சிறிலங்காவில் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைக்கிறார் முத்தையா முரளிதரன். நேற்றைய தினம் லக்பல சேனா அமைப்பின் தலைவரான சிங்களப் பேரினவாதி சுதத் மல்லிக்காராச்சி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிரட்டல் விடுகிறார் அதாவது ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு வேண்டுமா? அப்படி வேண்டுமென்றால் 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை (மலையகத்தைச் சேர்ந்த தமிழர்) ஜெயலலிதா அழைத்துச் செல்லட்டும் என்கிறார். அப்படியென்றால் முத்தையா முரளிதரனும் வெளியேற வேண்டிய நிலமை வருமே? இதனைக் கண்டிக்க முதுகெலும்பிருக்கிறதா முத்தையா முரளிதரனுக்கு?

சிறிலங்காவில் சிங்களவர்களும், சிங்களவர்களின் அடிவருடிகளும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்ற கருத்தைத்தான் முத்தையா முரளிதரன் கூறுகிறார், மலையகத்தைச் சேர்ந்த தமிழர்களும், வடகிழக்கில் உள்ள தமிழர்களும் அடக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சுதந்திரமில்லாமல் அவல நிலமையில் வாழுகிறார்கள் என்ற உண்மையை மறைத்தும் தமிழருக்கு நடைபெற்ற கொடுமைகளையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கொடுமைகளையும் மறைத்து சிறிலங்காவில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறி சிங்களப் பேரினவாதத்தைக் காப்பாற்றும் முயற்சியைச் செய்கிறார் சிங்கள அடிவருடியான முத்தையா முரளிதரன். தன்னுடைய மலையகத் தமிழர்களுக்கு நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுமைகளை எண்ணி வருந்தாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கும் முத்தையா முரளிதரன் போன்ற சிங்கள அடிவருடிகள் வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி வருந்தி அதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

தமிழர் என்ற வகையில் சிறிலங்கா கிரிக்கெட் அணியில் தனக்கு சிங்களவர்கள் எவ்வித பிரச்சனையும் கொடுக்கவில்லை என்று சுயநலத்துடன் முத்தையா முரளிதரன் கூறுகிறார், தமிழர்கள் என்ற காரணத்தினால் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இறுதியுத்தத்தின் போது சிங்களப் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டார்கள் என்பதை மறந்து உளறுகிறார் முரளிதரன். அழிக்கப்பட்ட மக்கள் சிங்களவர்களாக இருந்திருந்தால் அவர்களை சிங்களப் பேரினவாதிகள் அழித்தொழித்திருப்பார்களா? 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்கள் சந்தித்த கொடுமைகளை மறைக்க முடியுமா? தமிழர்கள் என்ற வகையினால் சிங்களப் பேரினவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டோம் என்று சாட்சி கூறுவதற்கு பல லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழர் என்பதனால் சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு தலைவராக ஆகுவதற்கு முடியாமல் இருந்த நிலமையை முத்தையா முரளிதரன் மறைத்துப் பேசுகிறாரா? அல்லது மறந்துவிட்டுப் பேசுகிறாரா? சிறிலங்கா அணியில் விளையாடிய போது ஒவ்வொரு ஆண்டிலும் அதிகமான விக்கெட்டுக்களை முரளிதரன் சாய்த்து வந்திருந்தார் ஆனால் ஒவ்வொரு ஆண்டிலும் கொடுக்கப்படும் ICC யின் விருதை அவரால் பெறமுடியாமல் இருந்த காரணத்தை முரளிதரனுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதற்குரிய காரணம் தமிழர்களுக்கு நன்கு தெரியும். உண்மையில் அன்று முரளிதரன் சிறந்த பந்துவிச்சாளராகத் தெரிவுசெய்திருக்க வேண்டும் ஆனால் அதற்குரிய சரியான பரிந்துரைகளையும், ஆதரவையும் சிங்களக் கிரிக்கெட் சபை கொடுக்கவில்லை மற்றும் முயற்சியிலும் இறங்கவில்லை. இதனால் ICC யின் விருதை பெறமுடியாமல் பல ஆண்டுகளாக இருந்தவர்தான் முரளிதரன். ஆனால் சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு ICC யின் விருதை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு அதனைப் பெற்றுக்கொடுத்தது சிங்களக் கிரிக்கெட் சபை. இந்த உண்மையை முரளிதரன் உணருவாரா? தனது நாட்டின் வெற்றிக்காக மட்டுமே முரளிதரனை சிங்களம் பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும். இதனை உணராமல் முரளிதரன் புத்திபிசங்கிய நிலையில் உளறுகிறார். முரளிதரனால் தான் பல வெற்றிகளை பெற்றது சிறிலங்கா கிரிக்கெட் ஆனால் முரளிதரனால் தான் நாங்கள் வெற்றியைப் பெற்றோம் என்று ஒருபோதும் சிறிலங்கா கூறியதில்லை.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது எனற தமிழக அரசின் முடிவு தொடர்பாக முரளிதரன் மேலும் கூறுகையில் இது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடனான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததற்காக சிங்கள கடற்படை ஆத்திரம் கொண்டு அப்பாவி தமிழக மீனவர்களின் தலையைத் துண்டித்த போது அது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று முரளிதரனால் அன்று கூறமுடியவில்லை. அன்று தென் ஆபிரிக்க அணியை கிரிகெட் இருந்து பல நாடுகள் ஒதுக்கி வைத்த போது அது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று எவரும் கூறவில்லை. அதனைப் போன்றுதான் சிறிலங்காவின் கிரிகெட்டையும் அதன் வீரர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.

முத்தையா முரளிதரன் உண்மைகளை மறைத்தும், உண்மைக்குப் புறப்பான தகவல்களைக் கூறியும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முத்தையா முரளிதரன் என்ற சிங்கள அடிவருடியின் விசமத்தனமான பிரச்சாரங்களின் ஊடாக சிங்கள அரசை நியாயப்படுத்தி காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மஹிந்தவின் அடிவருடியை தமிழகத்தில் விளையாடுவதற்கு தமிழக தமிழர்கள் அனுமதிக்க கூடாது, மற்றும் சென்னை அணியில் ஒருபோதும் முத்தையா முரளிதரனை இணைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நண்பர் எழுதியது போன்று ஒரு டக்ளஸ் தேவானந்தாவைப் போல்... ஒரு கருணாவைப் போல்... ஒரு கே.பியைப் போல்... முத்தையா முரளிதரனும் அவர்களைப் போன்றவர் தான்.

விஸ்வா