Monday, May 6, 2013

ராஜீவின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், அன்று ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவின் படையினரை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுக்காதது ஏன்?


ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்பவர்கள், ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவ் காந்தியின் தலைமையிலான போர்க்குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்காதது ஏன்?

தேவேந்திர பால் சிங் புல்லார் என்பவரின் வழக்கில் அவரது மரண தண்டனையை உறுதி செய்திருந்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். இத் தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட ஜி.சி. சேகர் என்ற பத்திரிகையாளர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கப்படவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் தூக்குத் தண்டனை வழங்கவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது உங்களின் குடும்பம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று கூறுவீர்களா? பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களுக்குத் தூக்குத் தண்டனை கண்டிப்பாக வழங்கவேண்டும் என்று புத்திபிசங்கிய நிலையில் புலம்பினார் ஜி.சி. சேகர். இவரைப் போன்றே வடவரின் அடிவருடிகளான தமிழக காங்கிரஸாரும் இன்னும் சிலரும் கூறிவருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடி அவர்களின் வயிற்றில் துப்பாக்கியினால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரின் தலைமையிலான படையினர் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கரவாதப் போர்க்குற்றங்களுக்காக எத்தனை பேர் தூக்கில் போடப்பட்டார்கள் என்று ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரால் கூறமுடியுமா? ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ராஜீவ் காந்தியும் மற்றம் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டு தூக்கில் அவர்கள் போடப்பட்டார்களா? ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை துச்சமாகக் கருதிவிடமுடியுமா?

மஹிந்தவின் பாணியில் குற்றவாளிகளே தங்களின் போர்க்குற்றங்களை விசாரணை செய்துகொள்வதைப் போன்று அன்று இந்தியப் படை மேற்கொண்ட போர்க்குற்றங்களைத் தாங்களே விசாரணை செய்வோம் என்று கூறியவர்கள் எவருக்கும் சிறைத்தண்டனையோ அல்லது தூக்குத் தண்டனையோ ராஜீவ் காந்தியின் காலத்தில் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான கொலைகளும், நூற்றுக்கணக்கான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக எந்த விதமான விசாரணையும் எதிர்கொள்ளாமல் நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதிபதி என்று ராஜீவ் காந்தி உல்லாச வாழக்கையை வாழந்துகொண்டு இருந்தார். அவர் செய்த குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார், இதனைப் போன்ற கருத்தைத் தான் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளும் கூறினார்கள், அதாவது இந்திய படையினர் ஈழத்தில் மேற்கொண்ட செயல்களின் பதிலடியாக ராஜீவ் காந்தியின் கொலை என்றார்கள். இதனைப் பற்றி சிந்தனை செய்யும் போது காசி ஆனந்தன் அவர்களின் கவிதை தான் ஞாபகம் வருகிறது

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

அதனைப் போன்று ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தியின் தலைமையிலான படையினர் ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடி விட்டு அவர்களின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்திருந்தால் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களா? அல்லது விலை மதிக்க முடியாத மாணிக்கமான ராஜீவ் காந்தியையும் அவரின் படையினரையும் மன்னித்துவிடுங்கள் என்று கூறுவார்களா?

அன்று புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தினை ஆரம்பித்த போது தயவுசெய்து சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணை செல்லாமல் உடனடியாக யுத்தத்தினை நிறுத்துங்கள் என்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கோரியும் ராஜீவ் காந்தி அதனைப் புறக்கணித்துவிட்டு புலிகளை அழித்துவிட்டு பிரபாகரனின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார், மேலும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு யுத்தத்திலும் தோல்வியடைந்தும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சிறிய பட்டியல்தான் இது


21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்) படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை யுத்த ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.1987 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள். சுமார் 65 பொதுமக்கள்

அன்று வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு பெருமளவான ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சொல்லுங்கள் யார் குற்றவாளிகள்? குற்றம் செய்வதவரைத் தண்டித்தால் மட்டும் குற்றமா? அரசனுக்கு ஒரு நீதி குடிமக்களுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீதிவான்களே ராஜீவ் காந்தியின் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? இவற்றைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு மறுக்கிறார்கள் அநீதிக்காரர்களான ஜி.சி. சேகர் போன்றவர்களும் மற்றும் தமிழகக் காங்கிரஸாரும். ராஜீவ் காந்தியின் உயிரை விட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும், தமிழ் பெண்களின் மானமும் தாழ்தது அல்ல என்பதை தமிழீழத் தேசியத்தலைவர் உணர்த்தினார்.

ராஜீவ் காந்தி மிகப்பெரிய தலைவர் அவரைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அவரின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் கொலை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பது போன்று தான் அன்று ராஜீவ் காந்தியின் பொன் உயிரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பொன் உயிர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தி முதல் ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று புலிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் அந்த எண்ணம் இருந்தது. காந்தி தேசமாகவும், நீதியை நிலைநாட்டும் தேசமாகவும் இந்தியா இருந்திருந்தால் ராஜீவ் காந்தியையும் அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளையும் முதலில் தூக்கில் போட்டிருந்தால் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்திருக்கமாட்டார்கள்.

தமிழர்களைக் கொன்று குவிக்கலாம் ஆனால் தமிழர்களைக் கொன்று குவிப்பவர்கள் தண்டிக்கப்படக் கூடாது, அவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது என்பதில் என்ன நீதி இருக்கிறது? என்ன தர்மம் இருக்கிறது? தமிழர்களின் உயிர்கள் இலவசமானது யார் வேண்டும் என்றாலும் சுட்டுப் பழகலாம், கொன்று குவிக்கலாம், பெண்களைக் கறிபழித்துக் கொலை செய்யலாம் இதற்கெல்லாம் நீதி விசாரணையோ அல்லது தண்டனையோ இவற்றுக்கில்லை என்று சிங்களவர்களும் வடவர்களும் நடந்துகொள்ளுகிறார்கள்.

ராஜீவ் காந்தியின் அரக்க ஆனமா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி அது அடங்காமல் மூன்று உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகியவர்கள் ராஜீவ் காந்தியின் கொலையில் சம்பந்தமில்லாதவர்கள் அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதியான சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்டு இன்று தூக்கில் போடுவதற்கு துடிக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள்.

ஈழத்தில் தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள், தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சிகளையும் கொடுத்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதனையும் தாக்குதல் நடத்தப்படுவதனையும் வேடிக்கைப் பார்க்கிறார்கள் வடவர்கள். மஹிந்தவை போர்க்குற்றவாளி என்று கூறி அவனை நீதிக்கு முன் கொண்டு சென்று விசாரணை செய்வதனை தடுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நீதி, உரிமைகள் கிடைக்கப் பெறாமல் இருப்பதனை தொடர்ந்து தடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவனை நீதிக்கு முன் நிறுத்த முடியாது என்று மறுக்கிறார்கள். ஆனால் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கிறார்கள். காங்கிரஸாரே தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? வடவர்களும் சிங்களமும் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ஒன்றாக ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

விஸ்வா

ராஜீவ் காந்தியின் கொலையினைக் கூறி இனி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும்




அடுத்த வருடம் தேர்தல் வரப்போவதனால் தமிழக காங்கிரஸார் மெல்ல மெல்ல ஈழத் தமிழர்களின் நலனைப் பற்றி பேசி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அண்மையில் வட இந்திய எம்.பி.க்களின் குழுவினரின் இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயந்தி நடராஜன் கோமாளித்தனமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதாவது மத்தியரசில் அமைச்சராக இருக்கும் ஜெயந்தி நடராஜன் நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தார், அதனைப் போன்றே நவரச நடிகன் ப.சிதம்பரம் அவரும் ஈழத்தமிழரின் நலனில் அக்கறையுள்ளவர் போன்று நடித்துவருகிறார். இவர்களைப் போன்றே தமிழக காங்கிரஸாரும் ஈழத்தமிழர் விடயத்தில் மிகுந்த அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்து பொய்ப்பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ப.சிதம்பரத்திற்கும், ஜெயந்தி நடராஜனுக்கும் மற்றும் தமிழக காங்கிரஸாருக்கும் தேர்தல் நெருங்குவதனால் இவர்களுக்கு தற்போது போலி ஞானம் ஏற்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=SJr-EG97bOI

இக்காணொளியைப் பாருங்கள் ப.சிதம்பரம் கூறுவதனைக் கேளுங்கள், அன்று இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது சிங்கள அரசு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டோம் (தமிழினத்தை அழித்துவிட்டோம்) என்ற நல்ல செய்தியைக் கேட்க காத்துக்கொண்டு இருக்கிறோம் என்று வட இந்திய ஊடகத்திற்கு கூறியவர்தான் இவர்.

மேலும் இக்காணொளியில் ப.சிதம்பரம் கூறுகிறார் ஈழத்தமிழர் விடயத்தில் விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம் என்று ராஜீவ் காந்தியைப் பற்றி கூறுகிறார். நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மையை மறைக்க முடியுமா? அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி என்ற உண்மைகளை மறைக்கமுடியுமா? தமிழர்களின் உயிர்களை துச்சமாக கருதிவிடமுடியுமா? தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் கருதப்பட்ட நிராயுத பாணிகளாக இருந்த போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை செய்திருந்தார் ராஜீவ் காந்தி.

தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாக கருதினார் ராஜீவ் காந்தி. என்னமோ ராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நன்மைகள் பல கோடி செய்த ஒரு உத்தமரை இழந்துவிட்டோம் என்று கூறுகிறார் ப.சிதம்பரம். இவர்கள் கூறுவதனைப் பார்க்கும் போது சோனியா காந்தியை விட ராஜீவ் காந்தி தான் சிதம்பரம் போன்றவர்களுக்கும் தமிழக காங்கிரஸாருக்கும் அதிகமாக எழும்புத் துண்டுகளைப் போட்டு வந்திருக்கிறார் போலவும் அவரைப் போன்று சோனியா காந்தி எழும்புத் துண்டுகளை அதிகமாகப் போடவில்லை என்ற ஆதங்கத்தினால் தான் இவ்வாறு புலம்புகிறார்கள் போல?

ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார். இது மானமுள்ள, முதுகெலுப்புள்ள, ஆண்மையுள்ள மறத்தமிழனின் பேச்சாகும்.

ஈழத்தில் நடந்து முடிந்த யுத்ததினைப் பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேசு வேண்டும்? தற்போது உள்ள ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் பேசுங்கள் என்று கே.எஸ் அழகிரி முதல் தமிழக காகிரஸில் உள்ள அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது சிங்களப் போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றி மீண்டும் அவர்கள் ஈழத்தில் மீதமுள்ள தமிழ் மக்களையும் இனவழிப்புச் செய்வதற்காக இவ்வாறு தமிழக காங்கிரஸார் கருத்துக்களைக் கூறிவருகிறார்கள். ஆனால் நடந்து முடிந்த ராஜீவ் காந்தியின் கொலையை மட்டும் இவர்கள் மறக்காமல் மீண்டும், மீண்டும் பேசி ஈழத்தில் காங்கிரஸ் அரசின் துணையுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், ராஜீவ் காந்தி என்ற விலை மதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்தோம், புலிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்று கூறி தமிழகத்தில் வாக்குகளைப் பெறமுடியாத நிலமை தற்போது உருவாகியிருக்கிறது என்ற உண்மையை காங்கிரஸார் உணரவேண்டும். புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்படுபவர்களை உள்ளே தூக்கிப்போடுகிற காலமும் முடிவடைந்துவிட்டது என்பதை காங்கிரஸார் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் காங்கிரஸார் பெட்டியினுள் பற்கள் புடுங்கப்பட்ட பாம்புகளாக சுறுண்டு கிடைக்கிறார்கள், தமிழக காங்கிரஸாரும் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரித்து செயல்பட்டால் தான் தமிழக அரசியலில் காலூன்றி நிற்கமுடியும் என்ற நிலமை உருவாகியிருக்கிறது.

தமிழக காங்கிரஸார் தமிழகத்தில் உள்ள மக்களிடம் அரசியல் பிழைப்பிற்காக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சிங்கள அரசைக் கண்டிப்பது போன்று பல நாடகங்ளை அரங்கேற்றி வருகிறார்கள் ஆனால் இந்திய பாராளுமன்றத்திலும், மக்கள் அவையிலும் சிங்களப் பேரினவாதிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஆதரித்து வருகிறார்கள். ஈழத்தமிழர் தொடர்பாக தமிழக காங்கிரஸார் கூறும் விடயங்களை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசினால் ஒருபோதும் கூறப்படுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையைக் கூறுவது என்றால் காங்கிரஸ் வரும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது ஏனென்றால் தேர்தலில் போட்டியிடுவதற்காக செலுத்தப்படும் வைப்புத் தொகை இழக்காமல் இருப்பதற்காக.

விஸ்வா

Friday, May 3, 2013

மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)



கருவறைக் குள்ளும்
ஆயுதம் இறக்கி
கருவறுக்கும்…
குரூரத்தின் அடையாளமே!

ஒரு,
பெண்ணுக்குள்ளே
இத்தனை வன்மையா…
என்றென்னும் அவமானமே!!

இந்திய பெண்னென்றால்
இளகும் மனசு.
இத்தாலிய பெண்னுனக்கு
இறுகிய மனசு.

பிள்ளைகளை கொன்ற
முரண் “அன்னை” நீ!

எங்கள் குழந்தைகளுக்கு
ஒப்பாரி பாடவைத்த
ஒப்பற்ற “தாய்” நீ!

குழந்தை இரத்தத்தை
பாலாடையில் நிரப்பிய
பாச “அம்மா” நீ! 

ஈழ மக்களின் வாழ்வை
இருட்டாக்கிய…
இந்திய இறக்கு “மதி” யே! 

தூளிகளுக்கு பதில்
பாடைக் கட்டிய
புண்ணிய”வதி” யே!! 

எங்கள் காந்தி
ஏந்தியது அகிம்சையை!
இத்தாலிய காந்தி நீ
ஏந்துவது ஆயுதத்தை!! 

மக்களை கொன்ற மகராசியே,
உன்…
கொடூரத்தின்
கொள்ளளவு என்ன?
கொல்லளவு என்ன?

உனக்கு ஓட்டளிப்பவன்
தமிழனில்லை.
உனக்கு ஓட்டளித்தால்
தமிழினமே இல்லை. 

கவிஞர் - சித்தன்

Sunday, April 7, 2013

உருட்டுக்கட்டை அரசியலும், தமிழக காங்கிரசின் இறுதிக் கணங்களும்



தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத்துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை, அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது.

வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து, மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அதாவது, மாணவர் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும், தமிழக மக்கள் மத்தியில், ‘இதுதான் தீர்வு’ என்று ஆழமாகப் பதியப்பட்ட கருத்துருவத்தை அழித்து, புதிதாக ஓர் அரசியலை எந்தக் கட்சியும் ஈழ விவகாரத்தில் இனி அடையாளப்படுத்த முடியாது. இங்கு ஏனைய கட்சிகளை விட, தமிழக கொங்கிரஸ் கட்சியினருக்கே இப் புதிய அரசியல் பரிமாணம் பெரும்தலைவலியாக இருக்கப்போகிறது.

தமிழக முதல்வர் அண்மையில் சட்டசபையில் கொண்டு வந்த தனி ஈழத் தீர்மானத்தை, இந்திய நடுவண் அரசின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவசரமாக நிராகரித்த விடயம், தமிழக கொங்கிரசிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கொங்கிரசின் ஆதரவுத் தளம், பூதக் கண்ணாடியை வைத்துத் தேடிப்பார்க்கும் அளவிற்கு புள்ளியாகிப் போனதால் சினம் கொண்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இத்தனை ஆண்டு காலமாக, ராஜீவ் காந்தியின் படுகொலையை வைத்து, ஈழமக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தை, அரசியல் களத்தில் ஒளித்து வைத்திருந்த கொங்கிரசாரின் மறைப்பு அரசியலை, மாணவர் போராட்டம் அம்பலமாக்கி விட்டதே என்கிற அதிர்ச்சிதான் இந்தச் சாமிகளை புலி எதிர்ப்புக் கோசம் போடவைக்கிறது.

ஒரு சாமி, டெல்லியையும், மகிந்தரையும் காப்பாற்ற அமெரிக்காவிற்கு ஓடுகிறார். மற்றச் சாமி, தமது இருப்பிற்கு ஆபத்து வந்து விடுமெனக் கலக்கமடைந்து, ஈழத்தமிழருக்கு இந்தியக் கொங்கிரஸ் ஆட்சி செய்ததை (?) பட்டியலிடுகிறார். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டித்தர, சீமானோ, தி.மு.க.வோ, அ.தி.மு.க வோ அல்லது முண்டாசு கட்டிய வைக்கோவோ வரவில்லை என்றும், அதனை இந்திய அரசே கொடுத்தது என்று பெருமைப்படும் நாராயணசாமி, அரியாலையில் இந்திய அமைச்சர் அத்திவாரம் இட்டபின், எத்தனை வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன என்கிற புள்ளிவிபரங்களையும் தமிழக மக்களுக்குச் சொல்லவேண்டும்.

இவைதவிர, விடுதலைப் புலிகளை இந்திய அரசு ‘காங்கிரஸ் அரசு’ ஒருபோதும் மன்னிக்காது... மறக்காது என்று ராஜீவ் படுகொலை விவகாரத்தை வைத்து பழைய பல்லவி பாடும் இணை அமைச்சர், திருச்சி வேலுச்சாமி எழுதிய ‘ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்’ நூலைப் படிக்கவில்லை போல் தெரிகிறது. சுப்பிரமணிய சுவாமியுடன் நெருங்கி உறவாடிய வேலுச்சாமியின் சாட்சியங்களை ஆராய்வதற்கும், அதன் ஊடாக தீர்ப்புக்கள் திருத்தப்படுவதற்கும் இவர்கள் விரும்பவில்லை. 2009 இல் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலமும், இனப்படுகொலையும், ஈழ ஆதரவு குறித்தான தமிழக மக்களின் உணர்வுகளை வேறொரு தெளிவான தளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

கதர்ச் சட்டைக்காரர்கள் உருட்டுக் கட்டைகள் ஏந்திச் சன்னதம் ஆடியும் மாணவர் போராட்டம் ஒடுக்கப்படவில்லை. மாநிலக் கட்சிகளின் ஆதரவினை வைத்து ஆட்சியமைக்கும் அகில இந்தியக் கட்சிகளுக்கு, தமிழகத்தின் 40 லோக்சபா நாற்காலிகளும் அவசியமானதுதான். அதேவேளை, மாநிலத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் இணையாமல் 5 ஆசனங்களைக் கூட கொங்கிரசால் பெறமுடியாது.
மாணவர் போராட்டமும், அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளும், இந்திய கொங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் இன அழிப்பு ஆதரவுக் குற்றச் சாட்டுக்களும், தமிழகக் கொங்கிரஸ் பக்கம் இக்கட்சிகளை நெருங்கவிடாமல் தடுக்கிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த தமிழகக் கொங்கிரசினருக்கு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இதை விட மோசமான முடிவுகளைத் தந்துவிடுமோ என்கிற பயம் வாட்டுவது போல் தெரிகிறது. புலிகள் மீதுள்ள வன்மமும், சிங்களத்தின் மீதுள்ள காரியக் காதலுமே போதும் தமிழகக் கொங்கிரசின் அழிவிற்கு. அதேவேளை, தொடரும் மாணவர் போராட்டம், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இருப்பினும் இதனை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் இக் கட்சிகள் ஈடுபடுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்கத் தீர்மானம் மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, சில கட்சிசாரா ஈழ ஆதரவு அமைப்புக்கள், நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப அல்லது மழுங்கடிக்க முனைவதாகவும் செய்திகள் வருகின்றன. மாணவர்களை அவர்கள் வழியில் பயணிக்க விடுவதே சரியான பார்வையாகும். ‘அவர்களை வலுவூட்டுகிறோம்’ என்கிற பேர்வழிகள், தோல்வியடைந்த இணக்கப்பாட்டு அரசியல் போக்குகளை ஒரு கணம் மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது.

இதயச்சந்திரன்
நன்றி: ஈழமுரசு