Friday, May 31, 2013

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிக்களும் (Nazi)



சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

1981ம் ஆண்டு மே மாதம் 31 நள்ளிரவு முதல் யூன் மாதம் முதலாம் திகதிவரை தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.

97,000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.
1981ல் தீக்கிரையாக்கப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம்

1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

எரியும் நினைவுகள்

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப் பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு.ளு நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம், மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)



மே மாதம் 31ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப் பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்.?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.


சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இக்கட்டுரைக்கு Tamil Nation, சங்கம் போன்ற இணையத் தளங்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் பெரிதும் உதவின. குறிப்பாக திரு நடேசன் சத்தியேந்திரா, விலானி பீரிஸ், நேசையா போன்றோருக்கு எனது நன்றிகள். திரு சிவநாயகம் அவர்களின் Sri Lanka Witness to History என்ற நூலும் பல அரிய தகவல்களைத் தந்தது.

யாழ் நூலகம் : அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம்


தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர்.

1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம்.

முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர்.

அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர்.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது.




நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது.

மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர்.

ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது.

ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர்.

தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர்.

நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.

தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர்.

நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர!

ஆர். முத்துக்குமார்

Tuesday, May 28, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 6

விரிந்த உங்கள்
வெள்ளைச் சிறகுகள்
ஒப்பந்தச் சாத்துகளால்
கறைப்பட்டதில்லை

தொடரும் இரும்பு நாய்களின்
குரைப்பில்
அவர்களின் பெருமூச்சைக்
கேட்க முடிந்ததோ?
சரசரக்கும் சருகுகளில்
சன்னமாய் ஒலித்த
குரல்களில் இருந்த செய்திகள் என்ன?

பதவி நாற்காலிப்
பந்தய ஒட்டத்தில்
மிதிபட்டு நசுங்கிய
ஈழப் பிரச்சனையோ?

அமைதித் திரையின் பின்பு
குருதியில் குளிக்கும்
அசோகச் சிங்கங்களை
அம்பலப்படுத்த
இனியும் தமிழகம்
எழும் என்ற நம்பிக்கையா?

வடக்கில் எந்த
வளர்ந்த மரங்களில்
அடைவீர் என்பதை
அறியேன்……. ஆயினும்
அமரும் போது கூறுக…….

அந்தக்
கானகச் சருகுகளில்
புதைந்து கிடப்பவை
விடுதலைக்கான விதைகள் என்று…
முளைவிடும்……. வானத்தை
முட்டி வளரும் என்று…
கடந்து வந்த கடல்களின்மீதும்…
வழியனுப்பி வைத்த குன்றுகள் மீதும்…
ஆணையிட்டுக்
கொக்குகளே:
கூறுக!

- மக்கள் கவிஞர் இன்குலாப்.

அடிமைத் தனத்தின் வலி, உணர்ச்சி உள்ளவர்க்கு மட்டுமே புரியும். ஆமையைப்போல் அடங்கி ஓடுங்கி வாழ எந்த ஒரு தன்மானம் கொண்ட இனமும் விரும்பாது. உரிமையை இழப்பது உயிரை இழப்பதைவிட கொடுமையானது. உரிமை இழந்து வாழ்வது நம்மை பிணங்களாக அடையாளப்படுத்தும். நமது உரிமையைக் குறித்த சிந்தனை நமது கடந்தகால நிகழ்வுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. நான் யார் என்று என்னை புரிந்து கொள்ளாதவரை எப்படி நானாக இருக்க முடியும். நான் என்பது ஒரு புள்ளி அல்ல. கடந்த காலத்தின் தொடக்கம். ஒரு புள்ளி தொடக்கத்தை விட்டுச் செல்லும் ஆவணம். என்னிலிருந்து தான் என் சந்ததியினர் என்னைக் கற்றுக் கொள்வார்கள். எனக்கான அடையாளங்கள் என்னுள் ஏராளமாய் புதைந்திருக்கிறது. எனக்கான ஒரு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் வடிவமைப்பு எனது பழக்க, வழக்கம், உணவு முறை, உறவு பின்னல்கள், இவைகள் என்னை மற்றவர்கள் தெரிந்துகொள்ள காரணியாக இருக்கிறது. என்னை அவர்கள் தெரிந்து கொள்வதைப் போலவே என் மூதாதையர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்பது என் மூதாதையர்களின் நிகழ்கால இருப்பு. என் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே என்னை நான் அடையாளப் படுத்த முடியும். இதைதான் வரலாறு என்கிறோம். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவரை நமக்குள் கோபம் வராது. போராடும் உணர்ச்சி துளிர்விடாது. ஆகவே எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்றுப் பதிவுகளோடு அல்லது அந்த வரலாற்றின் பார்வையின் துணை கொன்டு நம்மை நாம் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று விட்டு வீரனாய் வேடம்போடும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக உலகநாடுகள் சபையில் அன்று கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. பல நேரங்களில் வரலாற்றில் பல பிழைகள் இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கியூபாவும் உடன் சேர்ந்திருப்பதை எண்ணி அதிர்ச்சியும், வியப்பும் அடைந்திருக்கிறது. அடிமைச் சிந்தனையை உடைத்தெரியும் தன்மை வாய்ந்த ஒப்பற்ற நாடாக நாம் பலமுறை கியூபாவை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால் கியூபா எப்படி இந்த அநியாயத்திற்கு துணைபோனது என்பது விளங்கவில்லை. ஆனால் நமது சிந்தனையில் கியூபா மட்டுமல்ல, எதிராய் வாக்களித்த எந்த நாடுகளிலும் தமிழர் விடுதலைக்கான தலைவர்கள் தாம் சரியாக பணியாற்றவில்லை என்பதை இந்தியா, பாகிஸ்தான், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தை சரியாக எடுத்துரைக்க தவறியதால், அல்லது அந்த நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் போராளிகளின் தியாகத்தையும் அவர்களின் போராட்ட தர்மத்தையும் சரியாக விளக்கிச் சொன்ன காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான முதலாவது உலகத் தீர்மானம் வெற்றிப் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. எந்த ஒரு போராட்டத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு அமைந்திருப்பதை, நாம் கூர்ந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடியும். அந்த வரலாற்றில் உள்ள நியாயம் அந்த உரிமையை வென்றெடுக்கவேண்டிய தேவை இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைகள் அந்த மக்களின் இதய வலியை வைத்தே அளவீடு செய்ய முடியும்.

சில செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அழுத்தமாய் பதிவு செய்வதற்காகவே நாம் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையை வாசித்து வாசித்துப் பழக்கப்பட்ட இலங்கைத்தீவிற்கு விஜயனின் வருகை ஒரு வீழ்ச்சியைத் தந்தது. அதைவிட மேலாக பௌத்தர்கள் தமது சமயத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயாராக இருந்த காரணத்தினால் சதியாய் ஒரு கதை எழுதி அதை சரி என நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள். இதிகாசங்களை வைத்து இந்தியாவின் வரலாற்றை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே மகாவம்சத்தை வைத்தும் தமிழீழ வரலாற்றை தீர்மானிக்க முடியாது. வயதான தமிழ் மன்னன் எல்லாளனை சதியால் கொன்றொழித்த சிங்கள, பௌத்த இனவெறியர்கள் இன்று தமிழர்களை கருவறுக்கும் கொடுமையை கேவலமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோட்டையை தலைநகராகக் கொண்ட கோட்டைச் சிங்கள அரசு போர்த்துக்கேசியரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கி ஒடுங்கியது. கி.பி. 1605 ல் இந்த நிகழ்வு முடிந்து 14 ஆண்டுகள் கழித்து நிலம் பறிக்கும் கூட்டமாய் காலணி ஆதிக்க அடங்கா பிடாரிகளாய் வலம் வந்து கொண்டிருந்த அதே போர்த்துக்கேசியர்களால் கி.பி. 1619 ஆம் ஆண்டு தமிழீழ அரசு ஒடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அதாவது கி.பி.1815 ல் கண்டியைத் தலை நகராகக் கொண்ட கண்டி உடறந்த அரசு ஆங்கிலேயர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. கிரேக்க புவியியல் வல்லுனர்கள் தாலமி முதல் சமீபகாலங்கள் வரை இலங்கைத் தீவிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் வரை தமது குறிப்புகளில் தமிழர் நிலப்பகுதியையும், சிங்களர் நிலப்பகுதியையும் தனித்தனியே தான் குறிப்பிட்டு வந்துள்ளார்கள் என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து நமக்கு விளங்குகிறது. சிங்கள பேரினவாதிகள் இப்போது பேசும் ஒன்றுபட்ட இலங்கை என்பது இருந்ததில்லை. அது விஜயனின் வருகைக்கு முன்னர் தொல் தமிழர்களால் மட்டுமே அவ்வாறு அறிவித்துக் கொள்ளமுடியும்.

இந்தியாவை ஆளும் சில அரசியல் வாதிகள் அயல் நாட்டின் இறையாண்மைக்குள் தாம் நுழைய முடியாது என்று கூறுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு குறித்து மூச்சுவாங்க பேசுகிறார்கள். தமிழ்தேசியத்தின் மீது சிங்கள, பௌத்த பேரினவாத தேசியம் அடக்குமுறையை ஏவிய வரலாற்றை இவர்கள் அறியாதவர்களா, அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் நடிக்கிறார்களா என்பது எமக்கு விளங்கவில்லை.

சிங்களர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை இரட்டை என்று அழைத்தார்கள். தமிழர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை வன்னிமை என்று அழைத்தார்கள். சிங்களரின் ஆட்சிப்பகுதியாக ராஜரட்டை, மாயரட்டை, உடறட்டை, உரோகனரட்டை என்பவைகளும் தமிழர் தம் ஆட்சிபிரிவுகளாக யாழ்ப்பாணம், வன்னி, கொட்டியாறு, பழுக்கானம், பானம்மை, முத்துச் சலாபம் என்று பகுக்கப்பட்டிருந்தது இவை பெரும்பிரிவுகளாக இருந்தாலும் இவற்றுள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன. இந்த ஆட்சியின் அளவுகளாக பல ஊர்கள் அமைந்திருந்தது.

கி.பி.1796 ல் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள். கி.பி.1815 ல் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கைத் தீவுகள் முழுவதையும் ஒரே கொடையின் கீழ் கொண்டுவந்தார்கள். இரண்டாக, மூன்றாக பிரிந்து இருந்த கட்சி ஒன்றாகி ஒற்றை ஆட்சியாக இருந்தது, ஆங்கிலேய ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கீழ்தான்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 5

Friday, May 24, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 5




விழியினும் மேலான
தாயகம் மீட்க
விடுதலைப்புலிகளாய் எழுந்தோம்.
மீனுக்கு நீராய்
வேருக்கு மண்ணாய்
இருந்தீர்கள்; நாங்கள் நிமிர்ந்தோம்
இனியும் எமது போராட்டம் தொடரும்
விடுதலை எமது எல்லை!
துணைவந்த நீங்கள்
தோளை உயர்த்தினால்
விடுதலை வெகு தூரமில்லை.

மக்கள் திரள் என்ற
மாபெரும் சக்திதான்
எமது தாயகம் மீட்கும்.
மக்கள் யுத்தம் என்ற
மாபெரும் யுக்திதான்
நமது பணியை எளிதாக்கும்.
தோழமைப் புறாக்கள்
நம் துணையாகும்.
கொடிய வல்லூறை எதிர்க்கின்ற போது
தொடர்கின்ற போரில்
மக்கள் துணை கொண்டால்
விடுதலை இனியும் தப்பாது!

மக்கள் கவிஞர் இன்குலாப்

ஈழப்போர் முடிந்து விட்டதாக சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை கொன்றொழிக்க திட்டமிட்டு கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் கொத்து குண்டுகளால் செத்திருக்கலாம் என கதறி கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிஞ்சுகளுக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதன் தடயங்களை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு சிங்கள இனவெறி அரசு துணிந்து இருக்கிறது. துணைபோன இந்திய அரசு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய இளைஞர்கள் இனவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து தாவி குதிக்கிறது.

தமிழினத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை? ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? மறியல்கள் எத்தனை? அத்தனை இன உணர்வுகளையும் மண்ணுக்கு சமமாய் பாவித்தது இந்திய அரசு, ஆனால் இந்திய இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடிதுடித்துப் போகிறதே எப்படி? இனக்காயத்தின் வலி இப்போது தான் புரிகிறதா? இந்நிலையில் சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் ஈழம் என்ற வார்த்தையே இலங்கை வரலாற்றில் துடைத்தெறியப்பட வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார். நம்மவர் ஆண்ட தமிழ் மண்ணில் நின்று கொண்டு நமக்கான பெயரையே அழித்தொழிக்க முனையும் அக்கிரமத்தை என்னவென்று சொல்வது? இனி ஒரே நாடு, ஒரே இனம் என்பதை அங்கீகரிக்க எத்தனை தவறுகள் செய்ய வேண்டுமோ, அத்தனை தவறுகளையும் அடுக்கடுக்காய் செய்கிறார்கள். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை தம்முடைய ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கும் அதே கொள்கையை சிங்கள இனவெறி கூட்டமும் இலங்கையிலே செய்திட முயல்கிறது. சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலம் தமிழினத்திற்கு நிகழ்ந்துள்ளது. இடையூறுகளும், அடக்குமுறை சட்டங்களும், ஈயத்தோட்டாக்களும் வரலாற்று நாயகர்களை அசைத்து பார்த்ததில்லை என்பதற்கு அடுக்கடுக்காய் சான்றுகளை காலம் நமக்கு விட்டு சென்றுள்ளது. அடக்கமுறையாளர்கள் வெல்வதில்லை என்பது தான் வரலாறு. பிரெஞ்ச் காலனியாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நிகழ்த்திய நாடுகளானாலும் சரி, பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆர்த்தெழுந்த வீரர்களானாலும் சரி அவர்களின் போர் குணங்களையும், அவர்களின் தியாக முகங்களையும் காற்றும், கதிரும் பாதுகாத்து நம்முடைய காலங்களுக்கு அவற்றை காணிக்கையாக்குகிறது.

அவர்கள் விட்டு சென்ற காலடி சுவடுகளில் தான் கனத்த இதயமும், கனன்று கொண்டிருக்கும் உணர்வும் அடக்கமுடியாத ஆற்றலும் கொண்டு மீண்டும் மீண்டுமாய் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் மக்களின் விடுதலை போராளி ஹோசிமினை அடக்க முடியாத அமெரிக்கா ‘எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கிறது’ என்று மிரட்டி பார்த்தது. அந்த மகத்தான போராளி, நீ சில அணுகுண்டுகளை வைத்திருக்கலாம் வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் பெரும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளாக களத்திலே நிற்கிறார்கள் என கடுமையாக எச்சரித்தார். அதோடு இல்லாமல் மாபெரும் ராணுவ பலம் பொருந்தியதாக கருதப்பட்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த வரலாறு இனி ஈழத்தில் தொடரலாம். விழுந்த வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த வீரர்கள் வீரியமிக்க அணுகுண்டுகளை வீழ்த்துவார்கள். சீறிப்பாயும் கொத்து குண்டுகள் அந்த மாவீரனின் மார்பிலே சமாதியாகும். தமிழ் இன உணர்வுக்கு எதிராக நிற்பவர்கள் அந்த போராட்டக்களத்திலே கல்லறையாக அடையாளப்படுத்தப்படுவார்கள். வரலாறு ஒரே திசையில் நகர்ந்ததாக இதுவரை நாம் வாசித்தறியவில்லை. விதைகள் மண்ணில் மடிவது முளைத்தெழத்தான். இப்போது மீண்டும் முளைக்கவே ஒரு விதைத்தல் நடந்திருக்கிறது.

தெற்கு நோக்கி ஓட்டம் பிடித்த சிங்களர்கள் அங்கே இருந்து கொண்டு இத்தனை காலமும் பாலி மொழியிலும், தமிழினம் எழுதி வந்த தமது எழுத்துக்களுக்கு மாற்றாக சிங்கள மொழிக்கு வரிவடிவம் கொடுக்க தொடங்கினார்கள். பௌத்தர்களாக, சிங்களர்கள் இலங்கையில் தென் பகுதியையும், மலைப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டு தமது வலிமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, சைவ சமயத்தை சார்ந்த தமிழர்கள் கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழரின் நிலங்களாக உருவாக்கி தம்மை தக்க வைத்துக்கொண்டார்கள். ‘மகா வம்சம்’ நூல் தந்த பொய்யுரைகளால் மீண்டும் மீண்டுமாய் சிங்கள அரசுகள் வலிமை பெற்ற போதும் தமிழர் நிலங்களை அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை. கி.பி 1815 -ல் பாண்டிய அரசு இலங்கை தீவு மீது படையெடுத்தது. சிங்களர்கள் பயந்து நடுங்கி மேலும் தெற்கு நோக்கி பின்வாங்கி நகர தொடங்கினார்கள். அவர்கள் கண்டியிலும், கோட்டையிலும் சிங்கள தலைநகரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களின் தலைநகர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புலநறுவையில் இருந்தது. பாண்டிய அரசு படையெடுப்பின் மூலம் இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்திற்கு தமிழர் ஆட்சியின் தலைநகர் மாறியது.

வரலாறு தெரியாத பலர் ஏதோ தமிழர்கள் வந்தேறிகளாக இலங்கைக்கு சென்றது போலவும் அது தவறு எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். வரலாறு அறிந்த இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர் பிரச்சனையை அக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி தமிழர்களை எதிலிகளாய் தாயகத்திற்கு அழைக்கத் துணை போனார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையாரை தவிர வேறு எவரும் இலங்கை தமிழர் நலன் குறித்து அக்கறை கொள்ளவுமில்லை. அரவணைக்கவுமில்லை. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது. இலங்கை தீவில் அப்போது மூன்று அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தென்மேற்கு கரையோரத்தையும், தெற்கு கரையோரத்தையும் ஆட்சி செய்தவர்களை சிங்கள கோட்டை அரசு என்றும், மத்திய மலைப்பகுதியை ஆட்சி செய்த சிங்கள அரசுக்கு கந்த உடரட்டை சிங்கள அரசு என்றும் பெயர். தமிழர்களோ கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழீழ அரசாய் ஆட்சி புரிந்து வந்தனர். சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் கூறுவதை போல, புலிகள் தான் ஏதோ தமிழீழம் என்ற வார்த்தையை கண்டு பிடித்து பரப்பினார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது.

இப்படி மூன்று அரசுகளாக நடந்து கொண்டிருந்த ஆட்சி முறை மேற்கத்தியர்கள் இலங்கைத் தீவின் மண்ணை மிதிக்கும் வரை மாறாமலிருந்தது. கி.பி 1505 அளவில் அவர்கள் இலங்கை மண்ணை மிதித்தவுடன் சூழ்நிலை மாறியது. முதன் முறையாக விஜயனின் வருகையால் வீழ்ந்த தமிழர்கள் இரண்டாவது முறையாக எல்லாளன் தோல்வியால் துவண்ட தமிழர்கள் மேற்கத்தியரின் வருகையால் முற்றிலுமாய் வீழ்ந்து விடுவார்கள் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் புவியெட்டும் சிறக்க வரலாறு முழுவதும் தமிழ் வாகை சூட இந்த கேடு அப்போது நிகழ்ந்தது.

கண்மணி

Tuesday, May 21, 2013

இன்றைய நாளை நாம் அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்



ராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இரு தசாப்தங்களுக்கு காப்பாற்றியது என்று கூறினால் அது மிகையாகாது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ முள்ளிவாய்க்கால் போன்ற இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கும். அன்று தமிழீழத் தேசியத் தலைவரின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டவர் தான் ராஜீவ் காந்தி.

ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி, அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார். தங்களின் உயிரிலும் மேலாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் நேசிக்கப்பட்டட நிராயுத பாணிகளாக இருந்த அந்தப் போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. தமிழீழப் போராட்டத்தில் ஒற்றுமையுடன் போராடிய போராளிக் குழுக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதவிட்டு பல கொலைகள் இடம்பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவ்வாறு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்குச் செய்திருந்தார் ராஜீவ் காந்தி. மேலும் தீலிபன், அன்னை பூபதி என்று அனைவரின் அஹிம்சைப் போராட்டத்தையும் துச்சமாகக் கருதினார் ராஜீவ் காந்தி.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை தீவிரவாத எதிர்ப்புத் தினமாக காங்கிரஸ் கோமாளிகள் கடைப்பிடிக்கிறார்களாம். முதலில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட போர்க்குற்றவாளியே ராஜீவ் காந்தி. உண்மையான பயங்கரவாதியும் அவரே. இப்போதெல்லாம் இனப்படுகொலையிலும், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபடும் குற்றவாளிகள் பெரிய தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அமெரிக்க எதிர்ப்புக் கொண்ட சில போர்க்குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள்.

சென்றவருடம் லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் சார்லஸ் டெய்லர் இவர் போர்க் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதனைப் போன்று ஆர்மேனிய இனப்படுகொலை நிகழ்த்தியவருக்கும் இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மிகமோசமான ஈவிரக்கமற்ற குற்றவாளி தான் ராஜீவ் காந்தி. இவர் மேற்கொண்ட குற்றங்களை விசாரணை மேற்கொண்டால் அவரின் கொடூரக் குற்றங்கள் உலகின் பார்வைக்கு அறியவரும்.

ராஜீவ் காந்தி எப்படி தமிழனுக்கு தலைவன் ஆகமுடியும்? தமிழினத்தை அழித்தும், தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவரை உண்மையில் நல்ல தமிழ் தாயின் மடியில் பிறந்தவன் தலைவன் என்று கூறமாட்டான். T20 உலகக்கிண்ணப் இறுதிப்போட்டியில் சிறிலங்கா தோல்வியடைந்து விட்டதனால் மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த தமிழ் இளைஞன் மனமுடைந்து தூக்குப் போட்டு இறந்தார். இவ்வாறு சில புத்திபிசங்கிய இந்திய தமிழர்கள் நமது இனத்தை அழித்தவர்கள் இவர்கள் என்று உணராமல் அவர்களை ஆதரிக்கிறார்கள். சோனியாவின் எச்சில் எழும்புத் துண்டிற்காக தமிழினத் துரோகிகளாக மாறி காங்கிரஸை ஆதரிக்கும் கொடியவர்களும் உள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சுயரூபத்தை மறைத்தும், அவரினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மறைத்தும், அவரின் கொலையினைக் கூறி தமிழகத்தில் அரசியல் பிழைப்பு நடத்த முடியாத நிலமையுள்ளதை தமிழக காங்கிரஸார் உணரவேண்டும். ராஜீவ் காந்தியின் அரக்க ஆன்மா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி. அவர் இன்னமும் அடங்காமல் உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பெண் இனத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியவர் சோனியா காந்தி.

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும், இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார். இலங்கையில் ஈழத் தமிழர்களோ, அல்லது புலிகளோ தோற்கவில்லை தோற்றது இந்தியாவின் இராஜதந்திரம்தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய வாக்கு இன்று நிஜமாகிவிட்டது. இதனை தற்போது இந்தியாவே ஒப்புக்கொண்டு விட்டது. இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தாங்கள் தோல்வியைக் கண்டுள்ளோம் என்று கூறும் இந்தியா இதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி என்ற உண்மையை உணர்வார்களா? அன்றே தமிழீழத் தேசியத் தலைவர் இவை நடைபெறக் கூடாது என்பதற்காக இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டாம் அதனால் நன்மை அடையப் போவது சிங்களப் பேரினவாதமே என்று ராஜீவ் காந்தியிடம் கூறினார் ஆனால் ராஜீவ் காந்தி அவற்றைத் தட்டிக்கழித்து விட்டு போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்தார். அதன்பின்னரும் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையச் செய்வதற்காக முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்கள் காங்கிரஸார். இன்று பழ.நெடுமாறன் அவர்கள் கூறிய நிலைக்கு வந்துவிட்டார்கள் இந்திய ஆளும்வர்க்கத்தினர். ஆனால் இவர்களின் கொலை வெறியாட்டங்களால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் திருப்பி வந்துவிடுமா? வெகுவிரைவில் புலிகளை அழித்தமையினால் இன்று இலங்கையின் ஊடாக இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் ஆபத்தில் நாங்கள் சிக்கியுள்ளோம் என்று இந்திய அரசே ஒப்புக்கொள்ளும் நிலமை ஏற்படும். உண்மையில் அவ்வாறான நிலமையில் தான் இந்தியா இன்று இருக்கிறது ஆனால் அதனை வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வியைக் கண்டுள்ளது என்ற விடயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமாகிவிட்டார் கண்டிப்பாக உலகத்தமிழினம் இன்றைய நாளை அரச பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விஸ்வா

Friday, May 17, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 4




முடக்கப்பட்ட
உன் முகாம்களில் கேட்டேன்….
துரத்தப்பட்ட
உன் சுவடுகளில் உணர்ந்தேன்…
எனக்கும் வேர்விட இடமில்லை என்பதை

என்சொல் பழகிய
செவிகள் கேட்கட்டும்
உன்னை மறுப்பது
என்னை மறுப்பது.

சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒருபிடி
மண்தேடி.

கவிஞர் இன்குலாப்

தமக்கு எழுந்த விடுதலை வேட்கையால் தமிழனுக் கென்று ஒரு நாடு அமைக்க இழப்புகளையும், துன்பத்தையும், இன்முகத்தோடு தாங்கி தமது இலட்சியத்தை வென்றெடுக்கும் பணியை இடையராது செய்து கொண்டிருந்த தமிழ் போராளிகள் முறியடிக்கப் பட்டதாக வடநாட்டு ஊடகங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி தீர்த்தது. தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்பது வட இந்தியர்களுக்கு ஒர் இனிய செய்தி. சிங்களவன் அதை உணர்ந்ததால் தமது பரப்புரை தளமாக வடநாட்டு ஊடகங்களையேத் தேர்வு செய்தான்.

இத்தனை கேடுகளையும் செய்துவிட்டு சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்த போர் இந்தியாவிற்காக நடத்தப்பட்டது என்று பகீரங்கமாக அறிவிக்கிறான். ராஜபக்சே இவ்வாறு கூறியதற்கு இதுவரை இந்திய அரசிடமிருந்து எவ்வித மறுப்போ, கருத்தோ வெளிபடவில்லை. சோனியா ஆட்சியை அமைத்ததும் தாம் தமிழரை வென்றதும் சமமான வெற்றியாகக் கருதும் ராஜபக்சே ஒரு சிறு போராளி குழுவை எதிர்கொள்ள சீனா, பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆற்றலை ஒட்டுமொத்தமாய் பயன்படுத்தியிருக்கிறான். இது ஒன்றே போதும் புலிகளின் வீரத்தை அடையாளப்படுத்த. நமது ஊர்களில் எணூணிதணீ கீணிதீஞீடிண்ட் என்று சொல்லக் கூடிய குழு போக்கிரிகள் கருவித்தரிக்காத ஒருவரை கூடி நின்று வெட்டி வீழ்த்துவார்களே அப்படி கையில் ஆயுதமில்லா அப்பாவி தமிழர்களை சிங்கள வெறியர்களின் கூலிப்படையாய் மாறி குதறித்தள்ளியது அந்த பன்னாட்டுப் படை. ஆனாலும், கூட அவர்களால் வெற்றியை எட்டமுடியவில்லை என்பது சிங்கள அரசின் செய்தியாளர்கள் தரும் கூற்றுகளில் இருந்து வெளிப்படுகிறது. இவர்கள் தமிழப் போராளிகளை முறியடிக்கப்போவதாக கூறிவிட்டு அப்பாவித் தமிழர்களை அநியாயமாய் பழி தீர்த்து தமது முகங்களிலே குருதியால் கோலம் வரைந்துள்ளார்கள். ஆனாலுங்கூட ஆட்டைக் கொன்ற ஒநாய் ரத்தக்கறையை மறைக்க அப்பாவியாய் நடிப்பது போல இவர்கள் செய்த அத்தனை அநியாயங்களையும் மறைக்க பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்று வசனம் பேசுகிறார்கள்.

அப்பாவி தமிழ்மக்கள் 50.000 பேரை ஒரே நாளில் கொன்றொழித்ததற்குப் பெயர் எவ்வளவு பெரிய பயங்கரவாதம். ஆனால் ‘புத்தநாடு செய்த பெருங்கொடுமையை ஆதரித்து காந்தி நாடு கையெழுத்து போடுகிறது’. இவர்களுக்கு ஆதரவாய் நின்ற நாடுகள் சீனா, திபெத் மக்களின் ஜனநாயக உரிமையை அவர்களின் தேசிய அடையாளத்தை தோட்டாக்களின் முனையில் துடைத்தெறிய துடிக்கும் நாடு. அதனால்தான் வேறெந்த தேசிய அரசும் தமது அடையாளத்தை வெளிக்கொணரகூடாது என்ற கயமையோடு செயல்படுகிறது. அதோடில்லாமல் மேற்காசிய நாடுகளில் தமது பேரரசை நிலவ பல புதிய வழிகளை தேடி வருவதால் இலங்கையின் கடல்வழிகள் அந்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எத்துனை பெரிய அச்சுறுத்தல் என்பது இந்தியா ஏன் உணரமறுக்கிறது என்பது புரியவில்லை.

ரஷ்யாவை பொறுத்தமட்டில் கட்டிக்காக்கப்பட்ட மாந்தகுல மேன்மைகள் முதலாளித்துவ வெறியால் முறியடிக்கப்பட்டதன் விளைவாக சுகபோக வாழ்வுக்கு ஆசைப்பட்ட சில பூஷ்வா சிந்தனையாளர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள, ஒப்பற்ற மாமனிதன் லெனின் கட்டியமைத்த சோவியத் ஒன்றியத்தை சிதறடித்தார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுக்குள் கொண்டுவர அளவிட முடியாத போர்கருவிகளால் ஆப்கானிஸ்தானை நிரப்பினார்கள். ஆப்கானிய மக்களின் தேசிய அடையாளத்தையும் லெனின் கூறியதைப்போல அவர்கள் பிரிந்து போகும் உரிமையையும் மறுத்தவர்கள் தான் இந்த ரஷ்யர்கள். இப்படி இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் ஒவ்வொன்றும் தனிமனித உரிமைகளை மட்டுமல்ல தேசிய மொழி, சிந்தாந்தம், கலாச்சாரங்களை, கல்லறைக்கட்ட துடிக்கும் நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்ததுதான் இலங்கையை இந்த ஒநாய் ஆடுகளைக் கொல்லாது என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள்.

தமது பெயரிலேயே துட்டன் என்ற அடைமொழி கொண்ட இனவெறியன் எல்லாளனோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒடினான். வயது முதிர்த்த எல்லாளனை எப்படி கொல்வது என திட்டமிட்டு குறுக்கு வழியிலே துட்டகாமினி எல்லாளனை வெட்டிக் கொன்று தமிழரசைக் கைப்பற்றினான். சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும், தமிழர்களுக்கு ஏனோ வராமலேயேப் போனது. தமிழர்கள், சிங்களர்கள் எதிர்ப்பு என்பது இந்த நிகழ்வின் மூலமே தொடங்கியது. தமிழர்களின் தலைநகராய் இருந்த அனுராதபுரத்தை பௌத்த சமயத்தினர் கைப்பற்றி தமது தலைநகராக மாற்றியமைத்தார்கள்.

கி.பி. 550- 800 களில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும், வைணவ, சைவ சமயங்களில் மறுமலர்ச்சி பெற மாபெரும் தொண்டாற்றினார்கள். வைணவ சமய கருத்துக்கள் வேகமாய் பரவத் தொடங்கியது. இக்காலங்களில் தான் தமிழர்கள் தம்மை தமிழர்களாக மீண்டும் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி தமிழ்நாட்டில் பேரலையாய் புறப்பட்ட வைணவ, சைவ சமயங்களின் ஆற்றல் இலங்கையில் பேரிடியாய் வந்திறங்கியது. தமிழர்கள் பலர் மீண்டும் தமிழர்களாயினர். தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவ சமயத்திற்கு தம்மை மாற்றிக் கொண்டதால் இலங்கையில் உள்ள பௌத்தசமய தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எங்கே தமது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தால் கூடிப்பேசி திட்டமிட்டார்கள் பௌத்தத்தைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யமுடியும் என்று ஆலோசனை நடத்தினார்கள். அப்போதுதான் அவர்கள் மூளையில் மகாவமிசம் என்ற கற்பனைக் கதைத் தோன்றியது. இந்த கதையிலே தமிழர்க்கு எதிராகவும், சைவ சமயத்திற்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் புகுத்தப்பட்டன. குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக அரசு அமைய வேண்டும் என்பதே மகாவமிச கருத்தோட்டமாக அமைந்திருந்தது. விஜயனின் வழிவந்த அந்த இனத்தினர். தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர், அதோடில்லாமல் பௌத்தத்தைக் கட்டிக் காக்கும் பெரும் பொருப்பு தமக்குண்டு என கூறிக்கொண்டனர். வெறும் வட்டார வழக்காக வரிவடிவமற்ற இந்த சிங்கள மொழி சிங்களர்களின் மகாவமிசத்தின் மூலம் அங்கீகாரம் பெறத் தொடங்கியது. மகாவமிசத்தை படைத்தளித்த சிங்கள அரசன் தாதுசேனன் காலத்தில் இது நிகழ்ந்தேறியது.

இக்காலத்தில் தமிழ்நாட்டை நாயன்மார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அந்த காலத்திலே பௌத்தர்களாய் இருந்தவர்கள், இல்லாவிட்டால் பௌத்த சமயத்திற்கு மாறியவர்கள் சிங்கள மொழியை பௌத்த மொழியாக உள்வாங்கிக் கொண்டனர். ஒன்றுபட்டு கிடந்த மக்கள் மொழியால், சமயத்தால் வேறுபட்டு நின்றவர்கள், அது சிறிதுசிறிதாய் வளர்ந்து தமிழர் நிலப்பகுதி, சிங்களர் நிலப்பகுதி என வேற்றுமை வேரூண்றத் தொடங்கியது. இந்த நிலப்பகுதிகள் எப்படி பிரிந்து கிடக்கிறது என்பதை புவியியல் ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்தோம் என்றால் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்குமான உறவு எத்தனை நெருக்கமானது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள கரையோரங்களும், சமவெளிகளும், தமிழர்களின் நிலப்பகுதியாக இருக்கின்றன.

மலைப்பாங்கான நடுப்பகுதியும் தமிழ்நாட்டிற்கு எட்டாத தெற்கு நிலப்பகுதியும் சிங்களர் நிலப்பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் மிகச் சாதாரண புவியியல் தளத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். கி.பி. 993-1070 காலங்களில் ராஜராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோர் இலங்கையின் மீது படையெடுத்து முழுத்தீவையும் தமிழர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலநடுவையில் சோழரின் தலைநகரம் அமைக்கப்பட்டது. சிங்களர்கள் தெற்கு நோக்கி ஒட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள்.

தொடரும்…

கண்மணி

முகவரி அல்ல முகம் - பாகம் 3

Thursday, May 16, 2013

மொழி காத்த தலைவன்


மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது. ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும் கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள். இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவரின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை 7 கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழக தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது. இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காத்த அந்தத் தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலி நிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

கண்மணி

தேசியத் தலைவரின் அரசிலே…


நாம் சிந்திக்கும் காலங்களிலிருந்து செயல்படும் காலத்திற்கு பெயர்ந்திருக்கிறோம். பழைய நிகழ்வுகளின் பட்டறிவை தேக்கி வைத்து அதை நிகழ்கால போருக்கு பயன்படுத்தப்போகிறோம். நமக்கு பட்டறிவைப் போன்று ஒரு ஆசிரியர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. இப்போதும் கூட நாம் சிதறி இருக்கின்றோம். ஆனால் சிந்திப்பவர்களாக மாறி இருக்கிறோம்.

உலகெங்கும் நாம் சிறுசிறு கூட்டங்களாக பிரிந்து கிடந்தாலும் நம்மை இணைக்கும் ஒரே ஆற்றல் மொழி. நம்மை உறவென்று சொல்லிக் கொள்ள மொழியே பாலமாக இருக்கிறது. நமக்கான சிந்தனைகள், செயல்கள், பணித்தளங்கள், பாடநூல்கள், பகுத்தறிவு சிந்தனைகள், பல்வேறு நிலையில் பிளவுப்பட்டு இருந்தாலும் நாம் மொழியால் ஒன்றுபட்டிருக்கின்றோம். மொழியின் வலிமை மகத்தானது, மாறாதது. ஆகவே தான் நாம் மொழியை நேசிக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மொழியை பேசச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம்.

நாம் வேறு கலாச்சார ஆடை அணிந்து கொண்டு வேறு இனமாக நம்மை காட்டிக் கொள்ளலாம். ஆனால் நாம் பேசும் மொழி நம்மை யாரென்று அடையாளப்படுத்தும். ஒரு மொழியை நாம் காக்க வேண்டுமே அதற்கு என்ன செய்யலாம்? என்று இதுவரை இந்த உலக அரங்கில் தமிழ், தமிழ் தேசியம், தமிழ் மான உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழ் கலாச்சார காப்பாளர்கள் என பல்வேறு அடையாளங்களோடு புறப்பட்டவர்களெல்லாம் ஒரு செடி வளர மண் தேவை என்பதை உணரத் தவறினார்கள்.

ஒரு செடி வளர மண் தேவையைப் போல ஒரு மொழி வளர ஒரு நாடு தேவை. நாட்டை தவிர்த்து நாம் மொழியை காப்போம், அந்த மொழிக்கு செந்தமிழ் என பெயரிடுவோம், கன்னித் தமிழ் என வாழ்த்துவோம், முத்தமிழ் என முழக்கமிடுவோம் என்றெல்லாம் கூறிகொண்டிருந்தோம் என்றால் நம் மொழி நம்மோடு மண்ணில் புதைக்கப்பட்டு சமாதியாக்கப்பட்டுவிடும். ஆனால் மொழி வளர காலமெல்லாம் அம்மொழி செழித்திருக்க பன்னெடுங்காலமாய் நாம் காத்த மொழி நம் மூதாதையர் எல்லாம் பேசிய மொழி, அவர்கள் அந்த மொழியிலே தான் நம்மை கொஞ்சினார்கள். நமக்கான செய்யுள்களை வடித்து வைத்தார்கள். இலக்கியங்களை புனைந்து தந்தார்கள். புராணங்களை எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட நம் மொழி இன்னும் நம் சந்ததியாராலும் காக்கப்பட வேண்டும் என்றால், பேசப்பட வேண்டும் என்றால் நமக்கு நமது மொழி அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மொழி அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த மொழி பேசும் இனத்திற்கான ஒரு நாடு இன்றியமையாதது மட்டுமல்ல, அது கட்டாயமானது. இதை நம் முன்னோர்களை விட நமது தேசிய தலைவரே மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். ஆகவேதான் தமிழீழ தாகம் என்ற ஒரு சொல்லை அவர் பயன்படுத்தினார். இந்த தமிழீழ தாகம் ஒவ்வொரு தமிழனுக்கும் இயற்கையாக வரவேண்டும். இது மென்பானங்கள் அருந்தி தனித்துக் கொள்வதல்ல. களிம்புகளால் சரிசெய்து கொள்வதல்ல. இது உயிருணர்ச்சி. இதன் சொல், செயல் அனைத்தும் நமது உயிருக்கு நிகரானது. உயிர் போனால் திரும்ப வராது. மொழி போனாலும் அதுதான் நடக்கும்.

ஆகவே நம் உயிர் கொடுத்தாவது மொழி காக்க வேண்டிய கடமை நமக்குள் ஆயிரம் ஆயிரம் விருட்சமாய், வீரமாய் வளர்ந்தெழ வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்க நாம் களத்திற்கு வருவதற்கு முன்னால் குடும்பங்களில் பழக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு உண்டியல் வைக்கலாம். யாரெல்லாம் பிற மொழி கலக்காமல் தமிழ் பேசுகிறார்களோ அவர்களை தினமும் பாராட்டலாம். பிறமொழி கலந்து தமிழ் பேசுபவர்களை அவர்கள் வீட்டில் உள்ள உண்டியலில் தண்டம் கட்டச் சொல்லலாம். பின்னர் அப்பணத்தை சேர்த்தெடுத்து ஒரு நல்ல தமிழ் நூலை அந்த வீட்டிற்காக வாங்கலாம். இது மிக எளிதாக தோன்றினாலும்கூட இதனால் முதலில் நம் குடும்பத்தில் மொழி உணர்ச்சி ஏற்பட துணைபுரியும். எந்த ஒரு செயலும் குடும்பங்களிலிருந்துதான் சமூகத்திற்கு மாறுகிறது. ஆகவே நம் குடும்பங்களுக்குள் நமக்கான மொழி அடையாளங்கள் குறித்து விவாதித்து விளக்கம் தரலாம்.

இதன்மூலம் நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழர்கள் என்கிற உணர்ச்சியை ஊட்டி வளர்க்கலாம். இந்த உணர்ச்சி நம் பிள்ளைகளிலிருந்து அவர்களின் பிள்ளைகளுக்கு நகர்ந்து செல்லும். ஆகவே இது ஒரு செயலாக செய்ய நாம் முனைப்பு காட்ட வேண்டும். உலகெங்கும் உள்ள நமது உறவுகள் மற்ற சிறு சிறு இனங்களை காட்டிலும் பெரியது. ஆனால் சிறு சிறு இனங்கள் கூட தமக்கான ஒரு நாட்டை கட்டி, தமக்கான ஒரு அரசை அமைத்து, விடுதலையோடு எவ்வித அடக்குமுறையோ அச்சுறுத்தலோ இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிகப்பெரிய தொகை கொண்ட தமிழினமோ, தமக்கான ஒரு நாடு இன்றி தவிக்கின்றது.

நமது கவலையெல்லாம் என்னதென்றால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது இனத்தை காக்க, தாய் தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்கின்ற சொந்த மண்ணில் நம் இனத்திற்கு எதிராகவே நம் இனப்பகைவர்கள் இருக்கிறார்களே அதுதான். இதை மாற்றி அமைக்க நாம் இந்திய தேசியத்தை உடைத்தெறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்திய தேசியத்தை மறுக்க வேண்டிய ஒரு அவசியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த மொழி காக்கும் சமருக்காகத்தான் நாம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீரவித்துக்களை தமிழீழ மண்ணில் புதைத்திருக்கிறோம்.

நாம் நமது இனத்தை காக்க வேண்டும் என்பதற்காகத்தான் முப்பது ஆண்டு காலமாக கருவி ஏந்தி களத்திலே இருந்திருக்கின்றோம். நாம் நம் உயரைக் குறித்து எந்த நிலையிலும் சிந்தித்தது கிடையாது. எமது நாட்டிற்கு, எமது இனத்திற்கு, எமது உயிரிழப்பால் ஒருத்துளி நன்மை கிடைக்கும் என்றால் நாம் ஓராயிரம் முறை உயிரிழக்க தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதுதான் தமிழீழத்திலே தேசிய தலைவரின் தலைமையில் நிகழ்ந்த போரின் ஆன்ம நிகழ்வு. இதுதான் நமது தேசிய தலைவரின் அடிமனதில் உறைந்து கிடந்த இன சிந்தனை. அவர் அந்த மண்ணை காத்து அரசாள விரும்பவில்லை. அந்த மண்ணை காப்பதின் மூலம் நம் மொழியை காக்க விரும்பினார், நம் இனத்தை காக்க விரும்பினார்.

ஆனால் இன துரோகிகள் தலைவரை மட்டுமல்ல, நம் இனத்தையும் காட்டிக் கொடுத்தார்கள். எப்போதெல்லாம் இயேசுவைக் குறித்துப் பேசுகிறோமோ அப்போதெல்லாம் யூதாசைக் குறித்தும் பேசுவோம். எப்போதெல்லாம் கட்டபொம்மனைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் எட்டப்பனைக் குறித்தும் பேசுகிறோம். நாம் எப்போதெல்லாம் நம் தேசியத் தலைவரின் ஆற்றல்மிகு செயல்பாடுகளைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் இந்த இன துரோகிகளைக் குறித்து பேசிக் கொண்டே இருப்போம். நாம் பேசுவோம், காலாகாலத்திற்கு வரலாறு அதை பேசிக் கொண்டே இருக்கும்.

நிகழ்காலத்தில் கேவலம், பதவிக்காகவும், சுகத்திற்காகவும் இனத்தை அழிவுக்குள்ளாக்கிய இந்த அயோக்கியர்கள் நாளை வரலாற்றில் வாசிக்கப்படும் போது அவமானப்பட்டு அவர்களின் சந்ததி தலைகுனியும். அதைக்குறித்த கவலை இவர்களுக்கு இருக்கப்போவது கிடையாது. காரணம் இவர்களுக்கு சுகமும் மகிழ்ச்சியும் பணமும்தான் தேவை. இந்த மானங்கெட்டவர்கள் இனமானத்தை மட்டுமா கெடுத்தார்கள். தன்மானத்தையும் இழந்து தரம்கெட்டு போனார்கள்.

இதை எப்படி சமன் செய்வது? எப்படி முறியடிப்பது? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னதென்றால் நமது தேசிய தலைவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதாகும். அவரின் உயரிய ஆற்றல் வாய்ந்த தன்மான, இனமான உணர்வுகளோடு நாமும் வளர்கிறோம். நமது உறவுகளும் வளர்கின்றது. சில துரோகிகள் தோன்றுகிறார்கள். இது வரலாற்றெங்கும் காணப்படுகின்ற நிகழ்வுகள் தான். ஆனால் வெற்றியை மட்டும் வரலாற்று நாயகர்கள்தான் தக்கவைத்துக் கொள்வார்கள். அந்த வரிசையிலே நமது தேசியத் தலைவர் ஒரு வரலாற்று நாயகன்.

தமிழ் வாழும் மட்டும் அந்த தலைவரின் பெயர், அவரின் உயரிய சிந்தனை, அவருக்கான உள் கட்டுமான அமைப்பு, அவரால் விளைந்த சீரிய தமிழ் சிந்தனை, அவரிடமிருந்து பிறந்த வீரம், அவரால் அளிக்கப்பட்ட தமிழ் எழுச்சி, அவரோடு வாழும் தமிழினம் என்றும் அவரை மறுதலிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ முயற்சிக்காது. காரணம் தமிழனுக்கான அடையாளத்தை அவர் பெற்றுத்தர களத்திற்கு வந்தார். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை காடுகளிலேயே கழித்தார். தமது வாழ்க்கையின் பெரும் நாட்களை ஆயுதங்களிலே செலவழித்தார்.

அவருக்குள் எப்போதும் ஒரே ஒரு தத்துவம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அது விடுதலை தத்துவம். அந்த விடுதலை தத்துவம் தான் நம்மை விடுதலை பாதைக்கு அழைத்து வந்தது. இதுவரை நமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்கின்ற சிந்தனை எவருக்கும் எழாதபோது அவருக்கு மட்டும் எழுந்ததே! எப்படி? அது அவர் இந்த இனத்தின் மேல் கொண்ட பற்று. இந்த இனத்தின்மேல் கொண்ட பாசம். இந்த இனத்தின்மேல் அவர் வைத்த அன்பு. அதைவிட மேலாக இந்த இனத்தை காக்க வேண்டும் என்கின்ற ஆவல். ஆகவேதான் இதுவரை எந்த தலைவரும் செய்யாத பெரும் செயலை அவர் செய்துகாட்டினார். நமக்கான ஒரு நாட்டை கட்டியமைத்தார். போரிலே மண்ணிழப்பதும், மீண்டும் பெற்றுக் கொள்வதும் மிகச் சாதாரண நிகழ்வு. நமது மண் நமக்கானது.

மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் வீழ்த்தப்பட்டு பின்னர் சொந்த மக்கள் அதை வெற்றிக் கொண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பதிவுகளாய் இருக்கிறது. ஆகவே இப்பொழுது சிங்கள பேரினவாத பாசிசம் தமது கொடும் கரங்களால் கருவிகள் தரித்து ஒரு இனத்தை அழித்து போட்டுள்ளது. இப்போதல்ல, எப்போதுமே தமிழினத்தை வெல்ல எந்த ஒரு அடக்குமுறையாளனாலும் முடியாது. இது ஒரு சாதாரண சொல் அல்ல. தமிழினம் என்பது காற்றோடு கலந்த உயிராதாரம். ஆகவே இதை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகெங்கும் வாழும் தமிழுறவுகள் தயார் நிலையில் இயங்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். தொடர்ந்து செயல்படுவோம், தமிழீழம் மலரும். தமிழ் தேசியம் வெல்லும்.

தமிழ் தேசியத்தின் தலைவரோடு நாம் அரசமைப்போம். அந்த அரசிலே அடக்குமுறை இருக்காது. அதிலே பாசம் இருக்கும், பரிவு இருக்கும், அங்கே சாதியம் இருக்காது, பெண்ணடிமை இருக்காது, ஆண்டான் அடிமை இருக்காது, நாம் தமிழர் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அங்கே ஓங்கி உயர்ந்து காணப்படும். நம்முடைய வாழ்வின் உயர்வு இருக்கும். அது நாம் காணாத ஒரு சொர்க்கத்தை கண்டதைப்போன்று நிகழ்வாக இருக்கும். அந்த காலம் இதோ மிக மிக அருகில் இருக்கிறது. அது நிச்சயம் அடைந்தே தீருவோம். நம்முடைய செயலால் அதை விரைவுப் படுத்துவோம். விரைவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நாம் செயலாற்றுவோம்.

கண்மணி.

தேசியத் தலைவரின் ஆன்ம பலம்


இலங்கையின் போக்கு உலகப் பார்வையாளர்களை தமது பக்கம் ஈர்த்துள்ளது. இலங்கையின் விடுதலை தமிழர்களின் வாழ்வியல் தன்மைகளைத் தடமாற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கையின் இறையாண்மை, தமிழர்களை அடிமையாக்கத் துணை புரிந்தது. இலங்கையின் விடுதலைக்குப்பிறகு தான் தமிழினத்தின் அடிமை வாழ்வு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்மை வாய்ந்த ஒரு இனம் தம்முடைய வாழ்வுரிமைக்காக அமைத்தக் களங்கள், அழித்த உயிர்கள், இழந்த செல்வங்கள், அளவிடமுடியாதவை. ஆனாலும் தமக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள தாம் எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருந்துகொண்டு வருகிறோம்.

வரலாறு என்பது ஆற்றைப் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். தமிழீழ மக்களின் போராட்ட வரலாறும் அவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஓடாத ஆறு தேக்க நிலையை அடைந்து குட்டையாகிவிடும். ஆகவே வரலாறு என்பது ஆற்றைப் போல இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். எந்த ஒரு இயக்கமும் தமது தேவையை கருத்தில் கொண்டே அமைகிறது. தேவைகளே படைப்புகளின் தாய் என்கிற கூற்றின்படி விடுதலை என்னும் தேவையை போராட்டம் என்கிற வடிவங்களை படைத்தளிக்கிறது. தமிழீழ போராட்ட வரலாறும் தேவையை முன்னிருத்தியே தொடங்கப்பட்டதால் அது தமக்கான தேவையை அடையும் வரை தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாது. நிறுத்திக் கொள்ளாது என்று சொல்வதைவிட நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் போராட்டமென்பது சாதனைகளின் தொகுப்பல்ல. சாதித்தப் பின்னர் ஓய்வெடுக்க முடியாது. தமிழீழ மீட்பு என்பதும் மீட்புக்குப்பின் ஓய்வெடுக்கக் கூடிய இயக்கமல்ல. மாறாக தமது மக்களின் விடுதலையை வென்றெடுத்தப் பின் தாம் இழந்த இன மான அடையாளத்தை மீண்டுமாய் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த தமது மொழி அடையாளங்களை, இலக்கியப் பதிவுகளை பண்பாட்டுத் தன்மைகளை, கலாச்சார உருவகங்களை, அழுத்தமாய் சந்தேகத்திற்கு இடமின்றி வழிவழியாய் காக்கப்படுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அரிய அறிவியல் படைப்புகளாலும், பன்னாட்டு மயத் தன்மைகளாலும், உலக முதலாளித்துவ சுரண்டல்களாலும் தேசிய இனங்களின் தன்மைகள், உலகெங்கும் சிதைவடைந்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் தேசியம் உயர்ந்தோங்கி நிற்பதற்கும் தமிழ் தேசிய தலைவரே காரணம். கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்கள் மட்டுமின்றி அவர்களுடைய தனிமனித வாழ்வும், பொருளாதார தேடல்களும், அவர்களுக்கானத் தேவைகளும் நிறைவாக்கப்பட வேண்டும். இதுதான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அடையாளமாகத் திகழும். இந்த அடிப்படையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் நமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தார்.

தமிழீழ குடியரசு அமையும்போது தமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக பாசன வழிமுறைகளை விவசாய நிலங்களின் பாதுகாப்பை உழவுத் தொழிலின் அடிப்படைக் கட்டமைப்புகளை மறுசீரமைப்புச் செய்ய இத்துறை குறித்த பல்வேறு அறிஞர்களை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். இயக்க உறுப்பினர்களை உலகெங்கும் பரவலாக அனுப்பி அவர்களை விண்வெளி ஆய்வு, ஆழ்கடல் ஆராய்ச்சி, அதி நவீன தொழில் நுட்பங்களை அறிந்துவர கட்டளையிட்டிருக்கிறார். சட்டம், அறிவியல், புவியியல், வேதியியல், இயற்பியல், கல்வித் தொடர்பான பாடத்திட்டங்களை முழுக்க முழுக்க தமிழிலேயே கற்றுத்தரத் திட்டம் வகுத்து அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை சிந்தித்து பாடதிட்டங்களை உருவாக்கியிருந்தார். போராளிகளை மட்டுமல்ல, நாட்டின்மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவனும், போராளியாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக தமிழீழ மக்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தார்.

இந்த தொலைநோக்கு ஏதோ இனம் புரியாத பரவசத்தால் தோன்றியது அல்ல. இது மக்கள் மேல் கொண்ட அக்கறையால் பன்னெடுங்காலத்திற்கு தமிழீழம் என்கிற மண், அந்த மண்ணின் பாரம்பரியம், அந்த மண்ணிற்கே உரிய ஒழுக்கம் ஆகியவை எக்காலத்திலும் அழியாதவாறு ஒரு தெளிவான சித்தாந்தத்தை நமது தேசிய தலைவர் வகுத்து வைத்திருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தின் அரசு இருக்கும்போது இந்தியாவில் இருந்து சென்ற ஒரு கணித மேதை அங்கு பள்ளிகளை பார்வையிடச் சென்றார். அங்கு நான்காம் வகுப்பு அறைக்குச் சென்று அங்குள்ள மாணாக்கரை கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு மாணவனை எழுப்பி ஒரு ஆப்பிள் நான்கு ரூப்பிள் வீதம் என 5 ஆப்பிள்களை வாங்கி, அதை ஆறு ரூப்பிள்கள் வீதம் விற்பனை செய்தால் நமக்கு எத்தனை ரூப்பிள் லாபம் கிடைக்கும் என கேட்டாராம்.

அதற்கு அந்த மாணவன் குறைந்த பட்சம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 500 ரூப்பிள் தண்டமும் செலுத்த நேரிடலாம் என கூறினானாம். கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சி. ஏன் என்று அந்த மாணவனைக் கேட்டபோது, அந்த மாணவன் கூறினான். பொருளிற்கான விலை நிர்ணயம் செய்ய நமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த ஒரு பொருளுக்கும் விலையை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. ஆகவே இதுதான் கிடைக்கும் என்றான்.

ஆக சிறு குழந்தைகளுக்குக் கூட ஒரு பொருளின் விலையை மட்டுமல்ல, அந்த நாட்டின் தன்மைகளை கற்றுத் தந்து தமது நாட்டின் மேல் மரியாதையையும், நேர்மை மீது நம்பிக்கையையும், உருவாக்கி வைத்திருந்த மாமனிதன் லெனினுக்குப் பிறகு தமது நாட்டில் இந்த நேர்மையும், உண்மையும் செழித்தோங்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவராக நமது தேசிய தலைவர் திகழ்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். இதுதான் நம்மை தமிழீழ மண்ணின் மீது பற்றுக் கொண்டவர்களாக உருமாற்றும்.

அதைப்போன்று வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தோழர் ஹோசிமின்னுக்கு எதிராக சவால் விடுத்தது. எங்களிடம் இத்தனை அணுகுண்டுகள் இருக்கின்றன. இனி நடக்கும் போரில் நாங்கள் அணுகுண்டுகள் வீசுவோமென ஹோசிமின் பதிலளித்தார். எங்கள் மண்ணில் வாழும் ஒவ்வொரு வியட்நாமியனும் அணுகுண்டுகள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் என. இதைத்தான் தேசியத்தலைவரும் சிங்கள பேரினவாதத்திற்கெதிராக அறைகூவல் விடுத்தார்.

நாங்கள் கருவிகளின் பலத்தால் களத்தில் இருக்கவில்லை. மாறாக எங்கள் ஆன்ம பலத்தால் களமாடிக் கொண்டிருக்கிறோம் என. ஆக விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று நிகழ்வுகளோடு தமிழீழ மீட்புப் போராட்டமும் இணைந்து போனதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசியத் தலைவரின் ஆன்ம பலம் தான் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து முறியடித்தது. எந்த நிலையிலும் தம்மின மக்களுக்காகத் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாத அச்சமற்ற மனநிலைதான் நமது தேசியத் தலைவரோடு வெற்றியாய் தொடர்ந்து நடந்தது. நமது தேசியத்தலைவரின் சிந்தனைப் போக்கே இப்போது வெற்றி வாகை சூடியிருக்கிறது. சரத்பொன்சேகவின் துணைவியார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இலங்கை மக்கள் அனைவரும் ராஜபட்சேவின் அடக்குமுறைக்கெதிராக போராட முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் போட்ட ராஜபக்சேவின் அடக்குமுறைகளை, அநியாயங்களை, குருதி வெறியை சிதறடித்து அந்த பேரினவாதியின் குடைசாய்க்க எலி, புலிகள் முன் கருவியேந்த வேண்டியதில்லை. நமது தேசிய தலைவரின் ஆன்ம பலமே அந்தக் கொடுங்கோலனை வீழ்த்த போதுமானது.

நமது தேசியத்தலைவரும், தமிழீழ மக்களும், இணைந்து குரலெழுப்பி அறிவித்த போது, அறியாமல் வாழ்ந்த உலகச் சமுதாயம், இப்போது மஹிந்தவின் கொடூர குணத்தை அறிந்து வருகிறது. இப்போது உலகிற்கு தெரியும், நமது தேசியத் தலைவரின் ஆன்ம பலம்.

கண்மணி.

தமிழீழத்தை படைத்தளிப்போம்



2009 ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.

இப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோடு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது.

நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும். அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே சர்வதேச அரசியல் களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிய எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.

கொன்றுவிட்டார்கள், கொன்றுவிட்டார்கள், லெனினை கொன்றுவிட்டார்கள் என்ற கூக்குரல் ஸ்தெப்பான் கில் காதில் விழுந்தபோது தடுமாறி விட்டார். அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த தோழர் லெனினின் மகிழ்வுந்து ஓட்டுநரான அவருக்கு இந்த ஓசை நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலை உயர்த்தி பார்த்தபோது, இளம் பெண் ஒருத்தி தோழர் லெனினுக்கு நேராக தமது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தாள். தாம் வாசித்துக் கொண்டிருந்த இதழை வீசி எறிந்துவிட்டு, அவளை நோக்கி ஓடுவதற்குள்ளாக அவள் மூன்று ரவுண்டுகள் லெனினை நோக்கி சுட்டிருந்தாள். பின், தமது துப்பாக்கியை அவரின் காலுக்கு அடியிலே வீசி எறிந்துவிட்டு ஓடினாள்.

அவளை பிடிக்க ஓடிய கில், தோழர் லெனின் அடிப்பட்டு கிடப்பதை நினைவு கூர்ந்து பின்நோக்கி திரும்ப வந்தார். அங்கே குழுமியிருந்த தொழிலாளர்கள் லெனினை தாங்கிப் பிடித்து காருக்கருகே கொண்டு வந்தார்கள். அந்த கார் உலக வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமான அழுக்குச் சட்டை போட்டவன் ஆள முடியுமா? என்கின்ற முதலாளித்துவ நையாண்டிக்கு முடிவுக் கட்டிய உலக வரலாற்றிலே தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டியமைத்த விலைமதிப்பற்ற ஒரு உயிரை சுமந்து கொண்டு அதைக் காப்பாற்றும் முகமாக பறந்தது. ரஷ்ய புரட்சியின் தலைவன் தோழர் லெனின் புரட்சி நடைபெற்று ஓராண்டு முடிவதற்குள்ளாக கொல்ல முயற்சி செய்த அந்த பெண்ணின் பெயர் ஃபான்னி கப்ளான் என்று தெரிய வந்தது.

சோசிலிட் ரெவல்யூசனரி என்னும் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அவள், 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று அந்த விலைமதிப்பற்ற உயிரை கொல்வதற்கு முயற்சி செய்தாள். மகத்தான அக்டோபர் புரட்சியை தகர்க்க, எதிர் புரட்சியாளர்கள் தொடர்ந்த முயற்சிகளில் ஒன்றுதான் இது. லெனின் செய்த தவறென்ன? ரஷ்ய மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி அவர்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருந்த ஜார் என்னும் எதேச்சதிகாரியை அவனின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அகற்றி ஒரு புதிய தொழிலாளி வர்க்கத்தினுடைய ஆட்சியை கொண்டு வந்தார். வேலை செய்பவர்களின் கடினங்களை அகற்றினார். 1917 அக்டோபரில் கடும் காற்றும் மழையும் கொண்ட ஒரு நாளில் லெனின் கிராடில் மோல்னி என்னும் கட்டிடத்தை தலைமையிடமாகக் கொண்டு புரட்சிக்கு தலைமைத் தாங்கினார்.

அதன்மூலம் உலகத்தின் வரலாறு தலைகீழ் மாற்றமடைந்தது. ரஷ்யாவின் வரலாற்றை மாற்றி அமைப்பேன் என்று தாம் ஏழாம் வயதில் உறுதி எடுத்த அவர், ஜாரின் எதார்த்த முகத்தை அந்த வயதிலேயே புரிந்து கொண்டிருந்தார். தமது அண்ணன் அலெக்ஸாண்டரை 1877 மே 8ஆம் நாள் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கிலிட்டு கொன்றது. அவன் செய்த தவறு, நரோத்னிக்குகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதுதான் அவனின் மரண தண்டனைக்கு காரணமாக அமைந்தது.

வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை தகர்த்தெறிவதின் மூலம்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை லெனின் போன்ற சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதே பாதையில்தான் எமது தேசிய தலைவரும் உணர்ந்தார். விடுதலையை எப்படி வென்றெடுக்க வேண்டும். வென்றெடுக்கப்பட்ட விடுதலையை எவ்வாறு மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்கின்ற மகத்தான சிந்தனை கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

அவரைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்தது. அது துப்பாக்கி குண்டுகளால் நடைபெற்ற முயற்சி மட்டுமல்ல. கருத்துக்களால் நடைபெற்ற முயற்சி. துப்பாக்கிக் குண்டுகளால் நடக்கும் முயற்சிகளைக் கூட மிக எளிதாக முறியடித்துவிட முடியும். தோழர் லெனின் காப்பாற்றப்பட்டது போல, காப்பாற்றப்பட்டு பின்னர் தமிழீழம் கட்டியமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கள பேரினவாத அரசு, இந்திய பார்ப்பனிய அரசோடு இணைந்து கொண்டு எமது தேசிய தலைவரை பரப்புரையால் கொன்றுகொண்டிருக்கிறது. இதுதான் கடந்த 2009 மே திங்களில் நடைபெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி ஒரு தகவலை சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டது.

ஒரு பொய்யை நிரூபிக்க அது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது. சிங்கள நாட்டின் பொய்யை நம்பிக் கொண்டிருக்க உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைக்கான போர்க்களத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தயாராக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சர்வதேச தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. உலகமே தலை கிறுகிறுத்து இது சரியா? இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா? என்றெல்லாம் வெறும் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள். கடும் சமரில் பாதிக்கப்பட்டிருந்த எமது உறவுகளுக்கு உலகெங்கும் வாழும் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து, உடைகளை ஏற்றிக் கொண்டு வணங்கா மண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கிச் சென்றபோது, சிங்கள ராணுவம் இப்படித்தான் தமது அடங்காப்பிடாரித் தனத்தை காட்டியது. பல்வேறு அச்சுறுத்தலுக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகும்கூட அவை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழீழ மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்திலிருந்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உணவையும், மருந்தையும் இந்திய பாசிச அரசு தமிழ் விரோத கருணாநிதி அரசு தடை விதித்து, அது எம் மக்களுக்கு சென்றடையாமல் சிதைவடைந்து போனது. கோடிக்கணக்காக கொட்டிக் கொடுக்கப்பட்ட எம் உறவுகளின் உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கு இந்திய பார்ப்பனிய அரசும், அதன் காலடிகளில் வீழ்ந்து கிடக்கும் கருணாநிதி அரசும் காரணமாக இருந்தார்கள். உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்கா மண் கப்பலை தடுத்தது சிங்கள பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளின் அரசுமாகும்.

இப்போது காட்டு கத்தல் போடுகிறார்களே, இதே தான் இலங்கையிலே தமிழீழ மண்ணில் வசிக்கும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க அன்றே சர்வதேச சமூகம் முன்வந்திருக்குமேயானால் இன்று சிங்கள அரசிற்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. ஆகவே, எங்கு தீமை நடக்கிறதோ, எங்கே அநியாயக்காரன் வசிக்கிறானோ, அங்கே அவனுக்கெதிராக நாம் கொதித்தெழும்போதுதான் ஒட்டுமொத்த உலகச் சமூகமும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் மனநிறைவுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியும். இது தமிழீழ மக்கள் தானே என்று அசட்டையாக இருந்த காரணத்தினால் இன்று வேறொரு அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த உலகம் மிக சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தாலும், அறிவியல் காரணங்களாலும் வேகமாக கருத்துப் பாறிமாறிக் கொள்ளும் களம் இருப்பதால் மிக விரைவாக ஒரு நிகழ்வு அடுத்தவர் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்று எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தால், இன்று சிங்கள அரசிற்கு இந்த திமிர் வந்திருக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை தடுத்தால், உலகமே எழுந்து நிற்கும் என்று அன்று சிங்கள பாசிச வெறியன் ராசபக்சேவுக்கு அவனை தோள்மீது வைத்துக் கொண்டு சமருக்கு அழைத்துச் சென்ற இந்திய பார்ப்பனிய அரசுக்கு இந்த உலகம் எச்சரிக்கை விடுவித்திருக்குமேயானால், இன்று இஸ்ரேலும் அமைதி காத்திருக்கும். ஆகவே, இனி வரும் காலங்களிலாவது நாம் எங்கு அநீதி நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்பட உறுதியாக பணியாற்ற வேண்டும்.

எமது தேசிய தலைவரின் மரணத்தைக் குறித்த செய்தியாகட்டும், இதையெல்லாம் கடந்துதான் தமிழீழம் வரலாறு படைக்க இருக்கிறது. இந்த பரப்புரைகளை எல்லாம் உடைத்தெறிந்துதான் நமது தேசம் உயிர்பெற இருக்கிறது. நாம் பதிவு செய்யும் தகவல்கள் நமது உயிரை பிழிந்து வடிக்கும் எழுத்துக்கள். இவற்றிற்கு உயிர் இருக்கிறது, இவை உலகெங்கும் விழிப்பூட்டும். அது நமது விடுதலையை வென்றெடுக்க பெரும் துணை புரியும்.

தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுக்க முடியாது.

பரப்புரைகளை உடைத்தெறிவோம்.

கருத்துறைகளால் களம் படைப்போம்.

நாம் தமிழீழத்தை படைத்தளிப்போம்.

அதுவரை தொடர்ந்து இடைவிடாமல் தொடர் பயணம் செய்வோம்.


கண்மணி

Wednesday, May 15, 2013

குமுதினிப்படகு கோரப்படுகொலை – 28வது வருட நினைவறா நாள்!



சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 28 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை உலகம் கண்டும், கண்டுகொள்ளாததைப் போல்மௌனித்திருக்கிறது.

குமுதினிப்படகின் கொடுமை நடந்து சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின்னால் அதே மே மாதத்தில் ஒட்டுமொத்த வன்னித் தமிழினமும் பிய்த்தெறியப்பட்டு உயிரோடு எரித்தும், உயிரோடு மண்ணுள் புதைத்தும், எஞ்சியவர்கள் நடைப்பிணங்களாகவும் ஆக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடிய வலிகளைத் இன்னமும் தாங்கி,மனதை விட்டகலாத் துயரோடு அந்த மண்ணின் மலர்களுக்கு கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.
இன்றைக்குப் போலிருக்கிறது அந்த அனர்த்தம்.

28 ஆண்டுகழிந்து விட்டது என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
கடல் வெளியில் பிணந்தின்னிப் பேய்களினால் அனாதரவாய்க் கிள்ளியெறிந்த எம் ஊரின் உறவுகளுக்கு எம் கண்ணீரைக் காணிக்கையாக்கத் துடிக்கின்றோம்.
எம்மிடமிருக்கும் கடைசிச்சொட்டுக் கண்ணீராலும்,
உங்கள் காலடியை நனைக்கத் துடிக்கின்றோம்.
இன்னமும் மானிட இருத்தலை மறுதலித்தெறிந்து
சுடுகாடாய்க்கிடக்கிறது இத் தேசம்.
திரும்பும் திசையெங்கும் மரண வலி.
ஊருக்காய் உயிர் கொடுத்த உத்தமர்களே,
உங்களை எங்கள் மனதினுள் பத்திரப்படுத்துகின்றோம்.
இதைத் தவிர உங்களுக்கு உறுதியாகச் சொல்லவல்ல
வார்த்தைகள் எதுவும் இன்று எம்மிடம் இல்லை..


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இறுமாப்போடு தனித்த தமிழ்த் துண்டாய் நீண்டு கிடக்கும் நிலம் தான் நெடுந்தீவு. ஒல்லாந்தியரும், போர்த்துக்கேயரும், பிரித்தானியருமாய் நெருக்கிப் போட்ட நெருக்குவாரப் பிடிகளிலிருந்தெல்லாம் தப்பித்து தனித்துவமாய் நிலைத்து நிற்பது நெடுந்தீவு. இந்துமாக் கடலினுள் செருக்கோடு நீட்டி நிமிர்ந்து கிடக்கிற இந்த நெடுந்தீவைப் பட்டணத்தோடு இணைப்பதற்கான பாலமாகத் திகழ்வன படகுகள்தான். இவ்வாறான படகுகளின் வரிசையில் குமுதினியும் ஒன்று. இந்தப்படகினைத்தான் 28 வருடங்களுக்கு முன்னர் அரச கூலிப்படைகள் நட்டநடுக் கடலில் வைத்துத் துவம்சம் செய்தார்கள்.

குமுதினிக் கோரக்கொலைகளின் கடைசிச் சாட்சியமாயும்,சத்தியமாயும் ஓடிஓடிக் களைத்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம். குமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் அவர்.அந்த வாக்குமூலங்களால் இத்தனைகாலமாக அரச படைகளால் துரத்தப்பட்டு தலைமறைவாயிருந்தவர். தன் அன்பு மனைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவர் இப்போ இலண்டனில் அகதியாகியுள்ளார்.

ஈழநேசனுக்காக அவரிடம் தொடர்பு கொண்டபோது, ‘குமுதினிப் படுகொலை யென்பது ஒரு தனிமனிதப் படுகொலையல்ல. அது ஒரு ஊரின் மரணம். அது ஒரு இனத்தின் மரணம் பூவும் பிஞ்சும் காயுமாய் குதறியெறிந்த ஒரு நந்தவனத்தின் முற்றுப் புள்ளி. பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல் குதறித் தின்ற கொடிய பேய்களின் கோரத்தாண்டவம்.

நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.

பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்ற நம்பிக்கை கூட அரசப் பேய்களின் வன்னி வெறியாட்டத்திற்குப் பிறகு வற்றிப் போய்விட்டது.என்றார் அவர். நெடுந்தீவிலிருந்து அன்று புறப்பட்ட குமுதினியை கடல் பேய்களிடமிருந்து தப்பித்து வைப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது. இயலாமையோடு, அந்த அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் மட்டுமே எழுப்பினர். ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின.

கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடிப் பெருமையுடன் சூட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது. பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள்,கணவன் முன்னால் மனைவி எனத் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று எவருக்கும் தெரியாது போயிற்று.

புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணத்தில் 7 மாதப் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ….? என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் J.R.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் முதல் 70 வயது தெய்வானையம்மை ஆகியோரோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். கசப்பான அந்த அனுபவப் பதிவில் என்னப்போல் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.


ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகம் இதனைக் கொடுரங்களாக நோக்காது வெறும் காட்சிப்படங்களாகப் பார்த்து மகிழ்ந்தது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த ஒட்டுமொத்த அவலமாகக் கடந்த வருடமும் அமைந்து போனது.. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் குமுதினியின் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்…. ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது.

உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா….? நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா…? கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா…? 28 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி தினமும் ஓடிகொண்டிருந்த குமுதினி 28 ஆண்டு கடந்து இன்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த காட்சிக்கு சாட்சியாக ஓடிக்களைக்கிறது. 28வது ஆண்டு குமுதினிப் படகு படுகொலையின் நினைவு நாள் மே 15 ந் திகதியாகும்.

துவம்சம்” அல்லது நினைவறா நாள் – ( 15-05-1985 )

குமுதினி ………
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்
இனிய தீவினை ……..
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்…….
ஓலையும், ஒடியலும் ………
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்……..
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
“மனிதமே, நேயமென்று”
தன் மடிமீது சுமந்து ……
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..
காலில் நசிபடும் செருப்பு ……..
தீபாவளிப் புத்தாடை …..
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….
எல்லாமே …… எல்லாமே ……….
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் – என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….
மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……
அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ……….
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..

பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….
குடவிலி, குவிந்தா …….
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..
பெருந்துறையீறாய்………
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் …….
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ……..
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..
அலைகடலின் மடியிருந்து ……
வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!


“மா.சித்திவினாயகம்” – மாவிலி” மலரிலிருந்து …

Monday, May 13, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 3




ஈழத் தமிழர்க்குக்
கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர்
கரங்கள் நீளுக…

ஈழத் தமிழர்க்குத்
தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள்
தளங்கள் ஆகுக…

ஈழத் தமிழர்க்கு
ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ஆயுதம் செய்க…

ஈழத் தமிழர்க்கு
ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ரத்தம் பாய்க!…

ஈழத்திலிருந்து நீளும் கரங்களை
தோழமை கொள்வதெம் பிறப்புரிமை
கோழியின் செட்டைக்குள்
குஞ்சுகள் அடங்கும்.
பாழும் கழுகுக்கு பாசமா புரியும்?

ஈழம் வெல்வது புலிகளின் உரிமை
ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை.
வாலை ஆட்டாதே இந்திய அரசே
வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே!

மக்கள் கவிஞர் இன்குலாப்.

ஒரு இனத்திற்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படக் கூடாது. எத்தனை மறுப்புகள், எத்தனை இழப்புகள். தமிழ் மக்கள் சிந்திய கண்ணீரை எடுத்தால் கரிப்பு மிக்க ஒரு கடலையே உருவாக்கலாம். ஒரு இனத்தின் விடுதலைக்காக அவர்கள் நடத்திய போராட்டம் தான் எத்தனை? தம்முடைய எண்ணங்கள் முழுக்க லட்சியங்களை சுமந்து கொண்டு விடுதலை வேள்வியில் தம் உயிரையே எரித்துக் கொண்ட இளம் கொழுந்துகள் எத்தனை பேர்? விடுதலைக்கான களத்தில் கதற கதற வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வன்னித் தமிழச்சிகள் எத்தனைபேர்? அதனையும் மீறி விடுதலைக்கான நியாயத்தை நெஞ்சினில் சுமந்து. வாழ்க்கையை விடுதலை பயணத்திற்காய் ஒப்புவித்து ஈகையுடன் வாழ்ந்த இளம் வீரர்கள் எத்தனை பேர்? தாம் வார்த்தெடுத்த வரலாற்று ஆவணத்தை சிதைந்து போன தமது பண்பாட்டு அடையாளத்தை மறு உருவாக்கிய ஒரு மாபெரும் இயக்கத்தை, தமிழர்களின் மனசாட்சியை கொன்றொழித்த பெரும் பழியை சிங்கள இன வெறியன்களோடு சேர்ந்து இந்தியாவும் பகிர்ந்து கொண்டது. தமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் ஆவணத்தை பாதுகாக்க முனைந்த ஒரு திறன்மிக்க ஆற்றலை அடக்கிவிட பல நாடுகளின் துணையோடு பாரிய படை நடத்தி நசுக்கிப்போட்டதாய் கர்ச்சனை செய்கிறது சிங்கள இனவெறி அரசு.

இன்றைய மக்கள் குடிதண்ணீருக்காய் வரிசையில் நிற்கிறார்கள். கால்வயிறு கஞ்சிக்காய் காத்திருக்கிறார்கள். கதறிஅழும் பச்சிளங்குழுந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் பரிதவிக்கிறார்கள். காற்றின் புழுதி எமது தமிழச்சிகளின் தலையை சீரழிக்கிறது. திறந்த வெளி சிறைச்சாலையாய் பாதுகாப்புவலையம் என்ற பெயரிலே உயிருக்கு பாதுகாப்பற்ற ஒரு முகாம் அங்கே. பசிக்கு ஏங்கும் சிறுவனுக்கு, நமது பாட்டன் காலத்து கதை தெரியுமா? அவன் அந்த மண்ணை கீறி சீர்படுத்தி வயலாய் மாற்ற பட்ட வதை தெரியுமா? காடாய் இருந்தவைகளை கழனியாக்கி, நிலமாக்கி, ஊராக்கி உறவுகளை வளர்த்த நிலை தெரியுமா. இதையெல்லாம் கற்றதினால் தான் புலிகள் கரம் உயர்த்தினார்கள். இன்று தேசியம் பேசும் துரோக முகங்களுக்கு அங்கே தோன்றிய தமிழ்தேசியத்தின் வரலாறு தெரியாதா என்ன ஆனால், எல்லோரும் ஒன்று கூடி தமிழின அடையாளத்தை சிதைக்க முயற்சிப்பதேன்? எமது தமிழ்தாயின் அழுகுரல் ஓசை கடல் தாண்டி வந்து நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள இரவையும், இருளையும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மினப் பெண்கள் உங்களுக்குத் தெரியுமா நம்முடைய வரலாறு.

புத்தரின் போதனை தமிழர்மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயல்பாக பிற உயிர்களை நேசிக்கும் பண்பு தமிழரிடையே உயர்ந்தோங்கி இருந்ததனால் பௌத்த சித்தாந்தங்கள் அவர்களை வெகுவாய் ஈர்த்தது. இதுவே பல தமிழர்கள் பௌத்தத்திற்கு மாறிட காரணமானது. சாத்தனார் எழுதிய மணிமேகலையிலும் மாகராமர் கபாலி மொழியில் எழுதிய மகாவமிசத்திலும், ஒத்த செய்தி ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியான யாழ்நாட்டை அராசாண்ட அரசரின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு அரியணை மோதலுக்காய் புத்தர், மன்னரிடமும், பிணக்கு ஏற்பட்ட மருமகனிடமும் பேசி சிக்கலை தீர்த்து வைத்ததாக அறிகிறோம். இந்த வரலாற்றுச் செய்தியை இங்கே பதிவு செய்ததற்கான காரணம் இலங்கை சென்ற புத்தர் தமிழ் மன்னர்களின் அரவணையிலே தான் தமது பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்காகத்தான். இதைப்போன்றே தென்மேற்கே களனி ஆற்றங்கரையில் அரசாண்ட தமிழ் மன்னன் புத்தரை தமது பகுதிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தான். அங்குவாழ்ந்த தமிழர் பலர் பௌத்தத்திற்கு மாறினர்.

தமிழ் நாட்டிலும், இலங்கைத்தீவிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நாகர்கள் என்று அழைத்துக் கொண்டனர். “மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு என்கிற நூலில் அண்ணல் அம்பேத்கர் இந்த வரலாற்றுச் சான்றை உறுதிபடுத்துகின்றார். கி.மு.550 களில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனை அமைந்தது. இக்காலத்தில்தான் இலங்கைத்தீவிற்கு விஜயன் என்னும் இளவரசன் இந்தியாவில் இருந்து வருகை புரிந்தான். அதுவரை ஒரே மொழியை கொண்டிருந்த தமிழர்கள் முதல் முறையாக ஒரு புதிய மொழியை கேட்கத்தொடங்கினர். இது அவர்களுக்கு புதிய அனுபவத்தையும், இனம்புரியா உணர்வுகளையும் தந்திருக்கவேண்டும். கி.மு.269-227 அளவில் தமிழகத்திலும் இலங்கையிலும், பௌத்தத்திற்கு மாறுவதற்கு அரசு துணைபுரிந்ததால் ஏராளமான மக்கள் சமயம் மாறத் தொடங்கினார்கள். இக்காலகட்டத்தில் கலிங்கத்து அசோக பேரரசரின் சார்பாக புத்தபிக்குவான மகேந்தர் இலங்கைக்கு வருகிறார். அவர் இலங்கை அரசரின் மனம்மாற்றி அரசரோடு சேர்த்து மக்களையும் பௌத்தத்தில் இணைத்தார். ஆக புத்த சமயம் படர்ந்து விரியத் தொடங்கியது. இந்நேரத்தில் சங்கமித்திரை என்னும் பௌத்த மத பிக்குனி கயாவில் இருந்து அரசமரக்கிளை ஒன்றை இலங்கைக்கு கொண்டு வந்து அரசரின் ஆதரவுடன் அனுராதாபுரத்தில் அதை நட்டு வைக்கிறார். அவர் நட்டு வைத்த அரசமரம் இன்றுவரை அனுராதாபுரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பௌத்தம் பரவிய போது பௌத்த பீடத்தின் மொழியாக பாலி மொழி இருந்தது சிறிதுநாளில் பிராகிருதமும் பாலிமொழியோடு இணைக்கப்பட்டது. இவை இலங்கைத் தீவின் பயன்பாட்டிற்கும் வந்தன. மண்ணின் மொழியான தமிழ் பிற்காலத்தில் இத்தனை இன்னல்களை அனுபவிப்பதற்கு இந்நிகழ்வே காரணமாக இருந்தன. கலிங்கச் சொற்களுடன் விஜயன் வந்தான். பாலி மொழியைக் கொண்டு மகேந்தர் வந்தார். இவை இரண்டும் இணைந்து வட்டார வழக்குகளாக உருமாறத் தொடங்கின. இப்படி வளரத் தொடங்கிய இம்மொழிச்சொற்களையே பிற்காலத்தில் சிங்கள மொழியென அழைக்கத்தொடங்கினர்.

வரலாற்றில் தமிழன் இலங்கையின் தொல்குடி என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. கரிகால சோழன் காலத்தில் சோழப் பேரரசு இலங்கையின் மீது படையெடுப்பு நிகழ்த்தி அங்கிருந்தே ஆற்றை மறைத்து அணை கட்டும் தொழில் நுட்பத்தை கற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கரிகாலன் கல்லணையைக் கட்ட இலங்கையில் இருந்தே 12 ஆயிரம் பேரை அழைத்து வந்ததாக வரலாற்று நிகழ்வுகள் அழுத்தமாய் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரிகாலனின் படையெடுப்பிற்கு பின்னர். சோழ சிற்றரசுகளின் தன்னிகரற்ற அரசனாக தலைநிமிர்ந்து நின்றான் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அவன் இலங்கைத்தீவு முழுவதையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி மிகச்சிறப்புற வழிநடத்திக் கொண்டிருந்தான்.
எல்லாளன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலம் கி.மு. 161-117 இந்த சிறப்புமிக்க ஆட்சியை பொறுக்க முடியாத துட்டகாமனி என்ற விஜயன் வழி வந்த அரசன் தெற்கே கடல், வடக்கே தமிழர் நான் எப்படி கால் நீட்டிப் படுக்கமுடியும்! என்று கேட்டான்.

தொடரும்…

- கண்மணி


முகவரி அல்ல முகம் - பாகம் 2