Sunday, June 9, 2013

பொறுத்து போதும் புறப்படு



சங்கு முரசொலி எங்கும் பரவிட
சொந்தமண் ஆண்ட இனம் - இன்று
சிங்கமழைத்திடச் சென்ற முயலென 
கொண்ட உயிர் தரவா
எங்கள் சிறுவரை இன்பமழலையை
இம்சை வதைபுரிந்தே - பகை
செங்குருதி யெழச்செய்பவர்கண்டுமே
சோர்ந்து கிடந்திடவோ

எங்கும் பரந்ததாம் இன்பத் தமிழெனில்
இன்னும் இழிமைசெய்து அவர்
எங்கள் தமிழினம் இல்லையென்றாக்கிட
ஏழையென் றாவதுவோ
சங்கதமிழ் சொல்லும் மங்கையர்வீரமும்
சற்றும் இளைத்தல்ல என்று
செந்தமிழர் இனம்சேரும் உரிமையை
சேர்ந்தொன்றாய் கேட்டிடவா

பொங்கி யெழு இன்னும் என்னதடையிது
பென்னம் பெரிதுயிரோ - கடல்
வங்கமெழும் புயல் என்றுமனம்கொண்டு
வீழ்த்த எழுகுவையோ
மங்கை இளையவர் மட்டுமல்ல முது
மாந்தர் மழலைகளும் இனி
செங்கனல் கண்ணொளி சீறத் துடித்துடன்
சேர்ந்து எழுந்திடுவீர்

தங்கம் கிடைத்திடத் தாயெனும் மண்ணையும்
தாஎன விட்டிடவா -நாமும்
அங்கம் குறைந்த அறிவிலியோ எங்கள்
அன்னையை விற்றிடவோ
எங்களினம் குடிகொண்ட நிலமதில்
ஏவல் பிசாசுகளும் -வயல்
தங்களுடையதென் றோடிவிதைத்திட
தந்து மகிழுவதுவோ

நங்கையர் எந்தமிழ் நாட்டவரை படை
நானிலம் பார்த்திருக்க - அவர்
தங்களின் பேய்மன தாகமும்தீர்த்திட
தந்து கிடப்பதுவோ
செங்குருதி காணச் சேர்த்தவர் கண்டுமே
சோர்ந்த்து படுத்திடவோ - இன்னும்
பங்கம் இழைத்திடப் போகட்டும் என்றுடல்
போர்த்துப் படுத்திடவோ

சொந்தஅரசும் சுதந்திரமும் இவர் சொல்லும்
இறைமையதும் - நம்
முந்தையர் கொண்டு அரசுசெய்த நில
மேன்மைகள் சொல்லிடடா
மந்தைகளாய் மதி கெட்டிடவோ எங்கள்
மண்ணை இழந்த பின்பு - மன
சிந்தனையில் தரம் கெட்டுகிடப்பதோ
சீறி எழுந்திடடா

எந்த சலனமுமின்றி அழிவினை
ஏற்று வணங்கிடவோ - அல்ல
சொந்த உயிர்துடித் தெங்கள் தமிழ் அன்னை
சீருறச் செய்குவையோ
நொந்துகிடந்ததுபோதும் புரண்டெழு
நில்லு புரட்சிஎனும் - ஒரு
மந்திரமன்றி மருந்தில்லை முற்றிய
மாபெரும் நோயிதற்கு

கிரிகாசன்

எழுந்துவா ஈழம் மீட்க!



நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ
நீயெழுந்து எல்லைபோட வேண்டும்
ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து
தூரமில்லைநீ நடக்கவேண்டும்
வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப
பாரமில்லை தோள் சுமக்க வேண்டும்
யாருமில்லை ஈழம்காக்க நின்னையன்றி! பார்த்திருக்க
நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும்

போருமில்லை தீயுமில்லை பூகம்பக்கள் ஏதுமில்லை
பீதிகொள்ள ஒன்றுமில்லை யென்று
யாருமில்லை என்றிருக்க நானுமில்லை என்னறெமக்குள்
வாரிமுள்ளை வீசிசெல்ல வேண்டாம்
வேருமில்லை என்று வெட்டும் கோடரிக்கு கைபிடிக்க
கூடிநிற்பதென்று எண்ணிடாதே
தீருமென்று நீயெழுந்து தேசமண்ணைக் காதலித்துத்
தேவை கொள்ளு தூங்க நேரமில்லை

நேரமில்லை என்று சொல்லி நேரமுள்ளை நீநிறுத்த
நேரம்நிற்பதில்லை அங்குஓடும்
தீரமில்லைச் சாரமில்லை செல்வதற்குப் பாதையில்லை
சேரவில்லை என்று சாட்டுவிட்டு
தூரமுள்ள வானவில்லைப் போலவண்ணம் காட்டி யுந்தன்
சோருமுள்ளம் நீவிடுத்தல் வேண்டும்
ஓரமில்லை நீயும் அஞ்சி ஓடுமெல்லை வாழ்வு விட்டு
ஓர்மையோடு ஈழம் மீட்க வேண்டும்

கிரிகாசன்

Saturday, June 8, 2013

வீரம் தாரும் மைந்தர்காள்!



நீங்கள் நின்றபோது எங்கள் நிலமிருந்தது - அந்த
நிலமிழந்தபோது உங்கள் நினைவு மீந்தது
தாயிருந்தபோதும் பிள்ளை தனியிருக்குது - இன்று 
தவித்திருக்கும் மக்கள் நெஞ்சு உமைநினைக்குது
பாயிருந்தபோது தூக்கம் வரமறுக்குது - இங்கு
பாய்ந்துவந்துபேய்கள் எமது தலையறுக்குது
நீங்கள் வந்து எங்கள் உள்ளே சேர்ந்திருப்பது -
இனி எந்தநாளிலன்றுதானே பயம் விடுப்பது

மயிரிழக்க மானம் என்று உயிரிழப்பது - கவரி
மானின் எண்ணம் அதனையொத்த தமிழிருந்தது
பெயரிழந்து பேச்சிழந்து பெருமை உடைமைகள் - இன்னும்
பேணிக் காத்த கலைவளங்கள் இவையிழந்துமே
துயரெழுந்து அழுதபோதும் அலறிஓடியும் - பெண்ணின்
துகிலிழந்து உயிரிழந்து துடிதுடிக்கவும்
எவரெழுந்தும் கேட்கவில்லைப் புவனம் மீதினில் - இனி
எது இழக்க உண்டு நீங்கள் எழுந்துவாருங்கள்

கையிழந்து கையில்கொண்ட கனமிழந்ததும் - எம்மைக்
காக்க ஏதுமில்லை யென்று காலம்சொன்னதும்
மெய்யிழந்த புத்தன் நாட்டை பையக் கொள்கிறான் - இந்த
மேதினியில் பலர் இணைந்து பாவம் செய்கிறார்
நெய்யிழந்த தீபமாக நாம் அணைவதா? இல்லை
வெய்யிலாக வான்வீதி உதயமாவதா?
பொய்யிழந்த நேர்மை இன்று வாழமுடியுமா இன்று
பேய்கள்கூடிக் கூத்தடிக்கும் பூமியல்லவா

இடியெழுந்து மேகமின்றி மின்னிக் கொண்டது - அன்று
எதிரிவானில் உங்கள்வீரம் புகையைவைத்தது
துடித்தெழுந்து நடை நடந்தீர் கிடுகிடுத்தது எதிரி
துரத்திஓட செய்தீர் ஈழம் பளபளத்தது
எலிபிடித்துவைக்க பூமி வலையறுத்தது - உலகம்
எழுந்து எங்கள் நெஞ்சின் நேரே இலக்கு வைத்ததும்
கடிகடித்து காட்டு நாய்கள் வேட்டையாடவே - இன்று
கையை விட்டுக் காத்திருந்து காட்சிகாணுது

ஐயோ நானா என்ரு ஐநா பின்னிழுக்குது - அது
அத்தனையும் வைத்திருந்து என்னசெய்யுது?
குய்யோ தானோ என்று கத்திக் குமுறினாலுமே - அது
குடைசரித்து கடமைதன்னை குப்பையாகுது
எய்யும் அம்பு எடுத்த கையை இன்னொருநாடு - மெல்ல
இல்லையென்று பின்னிழுத்து மூடிவைத்தது
பெய்யும் மழை, இடியிடிக்கும் புயலடிக்குமே - நீங்கள்
உங்கள்வீரம் எமக்களித்தால் உயிர் பிழைக்குமே!

செயல்வளர்த்து சீற்றம்கொண்டு சீறும் வேங்கையாய் - நீவிர்
சென்ற பாதை நாம்தொடர்ந்து செல்லும்போதிலும்
புயல் எழுந்தபோது பேய்கள் சிங்களம் யாவும் - பேச
பயமெடுத்து மனம்கலங்கி பதுங்கிச் சோர்ந்தன
கயலெழுந்து வாழுமோடும் அலைகடல்தனின் - கூட
ஊயரெழுந்து ஓடிக் கரும்படைகள் ஆண்டன
தயவெழுந்து இன்று எம்மைக் காக்க வாருங்கள் - எங்கள்
தரை, கடலும் வானும் மீட்கும் திறனைத்தாருங்கள்

கிரிகாசன்

Friday, June 7, 2013

தீ பரவட்டும்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள் 
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு 
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும் 
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன் 
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர் 
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப் 
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட 
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் தவர் தீயும்- பல
கற்றிடும் மாணவர் உள்ளம் பிடித்திடக் 
காற்றினிலே பெரிதாகும் - தீயைப் 
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களே இனி 
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம் 
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக் 
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும் 
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி 
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்திடு 
சந்தண மார்பெடு தீரம் பெண்ணே
பொங்கிப் புறப்படு மாணவர்கள் திசை 
செல்லும்வழி வரும்தீர்வும்

கிரிகாசன்

Thursday, June 6, 2013

தமிழீழ தேசியக்கொடி


வீரத் தேசக் கொடிபறக்குது  விண்ணில்பாரடா - அது
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர்  கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?

என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம்  ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?

தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - ஈழம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?

தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா

தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.

கவிஞர்:கிரிஷாசன்

Monday, June 3, 2013

ஒருநாள் வரும்



செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி

உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி

தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழஙுகுமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடி
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி சூடித்தமிழ் தலைநிமிரச் சோழர்வகை
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ

கவிஞர் - கிரிகாசன்

விழித்தெழு



விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்

நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க

பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்

இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழீழம் ஆளும்

கிரிகாசன்

Tuesday, May 28, 2013

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே
இச்சகத்தில் எம்மினத்தின் ஏழ்மைபோய்ச் செழித்திட
அச்சமின்றி உச்சிவான் படையெழுந்த நாளிதே
துச்சமாயுயிர் நினைத்து தூயவர் வெகுண்டெழில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சையோடு எங்கள்மைந்தர் ஏறிவான் பறந்திடில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே
உச்சிவான்ம ழைதிரண்டு ஊற்றிநீரைக் கொட்டினும்
அச்சமில்லை வான்பறந்து சுற்றிமைந்தர் வெல்வரே

பச்சைமஞ்சள் என்றுவான்ப ரப்பை ராடர் காட்டினும்
அச்சமில்லை உச்சிஏய்த்து வான்பறந்து மீள்வரே
கச்சைகட்டிக் காழ்ப்புணர்ந்து காதகர்கள் சூழினும்
அச்சமில்லை உச்சிவானில் ஓடிவேங்கை வெல்லுமே

நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே
குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே

கொச்சைபேசிக் கூடிநின்று குற்றம்மாந்தர் செய்யினும்
அச்சிறுமை பாதகர்கள் அஞ்சவான் எழுவரே
இச்சரித்தி ரத்தைநாமும் ஏட்டிலே பொறிக்கவே
அச்சமின்றி மீண்டும்எழு அத்தனையும் காணுவோம்

நச்சரித்து நீதிகேடு நானிலத்தைக் கூட்டுவோம்
இச்சமயம் ஆதவன் வழிநடந்து வெல்லுவோம்
எச்சிறப்பு கொண்டிருந்தார் எங்கள்வானின் வீரர்கள்
உச்சிக் கண்ணில் மண்ணும்தூவி ஓடிக்குண் டெறிவரே

துச்சர்வானில் பின்துரத்தி தோல்விகண் டரற்றிட
உச்சவீரம் கொண்டஎங்க ளூர்திஊர் திரும்புமே
பிச்சைகேட்டுப் பெற்றுக்கொள்ள லாகுமோசு தந்திரம்
அச்சமில்லை முப்படைக்கும் ஆனவேந்தன் வெல்லுவான்

மச்சம்ஓடும் ஆழ்கனத்த ஆழிவீழ்ந்த ஆதவன்
மற்றநாளில் வானெழுந்து மீண்டொளிர்தல் உண்மையோ
அச்சதாக ஈதுமாகும் அண்ணன் மீண்டும் தோன்றியே
பச்சதாபம் விட்டேபகை தொட்டழித்து வெல்லுவான்!

கவிஞர்:கிரிஷாசன்

Monday, May 27, 2013

காத்திருக்கின்றோம்


கொட்டும் மழையுடன் வெட்டுமிடிதனும்
கூரையில் கொட்டட்டும் -வெளி
தொட்டுப் படரிருள் திட்டென் றுலகினை
தொற்றிக் கொள்ளட்டும்
அட்டத்திசையினில் முட்டும் பகைபடை
விட்டு குவியட்டும் - எமை
மட்டும் நடையெடு என்னும் குறிதரின்
மாளும் பகைமூட்டம்

வெட்டும் மின்னல்கள் வான் விட்டெழுவது
விளையும் தரைமீது - அது
பட்பட் படவென பாயும் கணைகளில்
பகைவன் பலகூறு
தட்தட் தடவென தாய்மண் கொண்டவன்
தலைகள் பந்தாடு - அட
எட்டுத் திசையிலும் இடியாய் வெடித்திட
எழுமோர் புதுவாழ்வு

துள்ளும் கால்களும் துடிப்பைக் கொள்ளுது
தோழா இதுபோதும் - அவன்
வெள்ளம் எனவுடல் வெட்டக் குருதியும்
வெளியே பாய்ந்தோடக்
குள்ளக் குறுநகை கொண்டே உலகமும்
கொள்ளிதீ வைக்க - நாமும்
தள்ளிக் காலமும் தாயின் துயரினைத்
தாங்கிக் கிடப்போமோ

கண்கள் மூடியும் மௌன திரையினில்
காணும் ஓவியமாய் - நாம்
எண்கள் பலவென ஏகும்நாட்களை
எண்ணிக் கிடப்போமோ
பெண்கள் பிள்ளைகள் பெட்டியில் வைத்திட
பேசா திருப்போமோ - உயர்
எங்கள் தலைவனின் ஒருசொல் கேட்டிட
இடரும் தொலையாதோ

சொல்லில் கதைகளும் தொட்டில் தூக்கமும்
துச்சமதை வீசு - இனி
எல்லை வரைபகை ஒட்டிச் செல்வது
எங்கள் பணி கூடு
தொல்லை தரவென துட்டர் குழுமினர்
தூரம் கலைத்தோடு - அவர்
இல்லை எனும்வரை போராட்டம்
தமிழீழம் தனிநாடு

கிரிகாசன்

Friday, May 24, 2013

நடப்பதென்னடா




நடந்த கால்கள் எங்கே இன்று உடைந்துபோனதோ - இல்லை
உடைந்த உள்ள உறுதி நெஞ்சில் படர்ந்த சோர்விலோ
கடந்த கால திடமும் ஏது முடங்கலாகுமோ - இன்று
மடமை கொண்டு மனமிழந்து கிடந்து தூங்கவோ

அடங்கலின்றி வீறுகொண்ட அண்ணன் தம்பி பார் - நீயும்
கடன் என்றோடி கருமம் ஆற்றக் கலங்கி நிற்பதேன்
திடங்கொள் நெஞ்சும் தெளிவு இன்றி மடங்க லாகுமோ - போகும்
இடங்கள் யாவும் வெறுமைகாண இருக்கலாகுமோ

படங்கள் காணும் வதைகள் தம்மை தடங்கல் இன்றியே - செய்ய
உடந்தையாகும் உனதுமௌனம் தொடர்ந்து காணுமேல்
உடல்கள் மீது குதித்து ஆடும் உதிரம் காண்பவர் - என்றும்
விடங்கொள் பாம்பை விலங்கையொத்த வெறியர் ஓட்டிடு

திடமும் தீரம் கொண்ட சொந்தம் திரும்பிப் பாரடா - சற்றும்
அடங்கலின்றி ஆற்றல் கொண்ட அண்ணன் தம்பிடா
முடக்க என்று முனையும் சக்தி முந்தியெழ முதல் - நீயும்
நடந்து செல்லு நீதி கேட்டு! நடந்துசெல்லடா !

குடங்களாக குருதி மீண்டும் கொட்டமுன் எழு எதிரி
நடனமாடல் எங்கள் சாம்பல் மேட்டில் எண்ணிடு
புடங்கள் போட்டு எடுஉன் உள்ளம் புதிதுஆக்கிடு - மீளத்
திடங்கொள் தோளில் வீரம்பொங்க தொடர்ந்து நடந்திடு

கவிஞர்:கிரிகாசன்

Thursday, May 23, 2013

சத்தியத்தீ ஒன்று எழும்




நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய் அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(காலில் விலங்கிட்டு தள்ளும்)

கிரிகாசன்

பொறுமையின் எல்லை




போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை
உண்மையென்று நம்பி ஓடாதே பக்கம்
தீதும் இனித்திடக் காணும் - அதை
தின்ற பின்பே வலி கொள்ளும் உதரம்
யாதும் பெரும் நிழலாகும் - இந்த
ஞாலம் ஒலிபெற்றும் உள்ளிருள் காணும்

கட்டியே காலுடன் கையும் - சுட்டு
காட்டிய தேகங்க ளெத்தனை கண்டோம்
மெட்டி அணிந்திட்ட மாதர் - உடல்
மீது குதித்திடும் பேய்களும் கண்டோம்
கொட்டிக் குடித்துக் கூத்தாடி - அவர்
கொச்சைமொழி கொண்டு நம்மவர் காட்டி
திட்டித் தமிழினம் சாய்க்க - நாமும்
திக்கெட்டு மோடித் திசைபல கொண்டோம்

அத்தனை தேசங்கள் யாவும் அன்பில்
அத்தை நான் மாமனென் றண்டையில் வந்தார்
கத்திக் கதறி யழுதோம் - அவர்
காப்பது போற்பல வேடங்கள் கொண்டார்
பொத்திப் பிடித்திட வெள்ளம் - அது
பிய்த்துக் கொண்டோடிடும் நம்மவர்நெஞ்சோ
உத்தமம் தானென்ற போதும் - இன்னும்
எத்தனைநாள் பெட்டிப் பாம்பென வாழும்

சத்திய மேமுடி வாகும் - இது
சாத்தியமோ எமைக் கொன்றொழித் தாலும்
வித்தாய் முளைத்தெழும் மண்ணில் - இது
வெட்டி யழித்திட வேர்புதி தாகும்
எத்திசை போயிருந் தாலும் - நாமும்
ஈழமெனும் அன்னை தேசத்தின்பிள்ளை
வைத்த அன்புமனம் கூடும் - எமை
வாரி பிடித்துமண் வைத்துக் கொண்டோடும்

எத்தனை பேச்சுக்கள் கண்டோம் அவை
அத்திப் பழமென சொத்தைகள்தானோ
கத்தி சொருகிட வந்தோர் - பலர்
கட்டிய ணைத்துப்பின் காரியம் கொண்டார்
சொத்திக் கால் பச்சைமரத்தில் - ஏறிச்
சொர்க்கம்நடை கொள்ள உத்தியும் கூறி
வைத்தவர் வாழ்த்த நடந்தோம் வழி
வானமல்லக் கீழே பாதாளம் கண்டோம்

வைத்தியம் பார்த்திட வேண்டும் - தம்பி
வக்கிர உள்ளங்கள் வாதத்தை தீர்க்க
புத்தி கொண்டு திட்டம்போடு - கோடி
புண்ணியமுண்டு நீஒன்றாகக் கூடு
எத்திசைதா னிருண்டாலும் - காலை
ஏறும்சுடர் தன்னில் விண்ணொளி தோன்றும்
மொத்தம் விடிந்திட வேண்டும் - எங்கள்
முந்தைத் தமிழர்பொற் காலமே வேண்டும்

செந்தமிழ்ப் பாவெழவேண்டும் - பெண்கள்
சிந்துபடித் தின்ப நாட்டியம் செய்ய
வந்திருந்து குழலூதிச் - சிலர்
வாயசைத்தே தமிழ்க் காவியம்பாட
சந்தணமும் மலர் சோலை - தனில்
சார்ந்த மலர்மணம் வீசிடும் காற்றில்
சொந்த நிலம் என்றுஆடி - மக்கள்
சுந்தரமாய் விளையாடிட வேண்டும்

கிரிகாசன்

Tuesday, May 21, 2013

தீயாய் பொசுக்கு!



தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
வாழ்விலேதும் மீதமாகுமா
பாயெடுத்து தூங்கவா பாவைமேனி ஆளவா
பட்டுடுத்து ஆடிப்பாடவா
நோயெடுத்து வீழவா நூறுகாலம் ஆயுளா
நிற்பதோ தீமேலே காலடா`

தாயெடுத்துக் கையிலே தீந்தமிழ்ப் பாலூட்டியே
தங்கவிட்ட திங்கு மேனடா
பேயெடுத்த கோலமும் போதைகொண்ட கள்ளரும்
புன்மை செய்யநீ முடங்கவா
காயமிட்டு வெட்டவும் காலினா லுதைக்கவும்
காண இன்னும் பேடி நாமோடா
நீயெழுந்து கேளடா நீதி தேவன் பார்வையை
நீள்கறுப்பு துண்டுமூடுமா

தூயஅன்னை செந்தமிழ் தீங்கில்லாத வாழ்வுடன்
தேசமொன்று தாயகம் அதில்
வேய இட்ட வேலியும் வீடுஎன்ற கோவிலும்
வேண்டுமென்று கூடிநில்லடா
தோயஎன்ன வான்மழை தூங்க என்ன மாவனம்
தேய அன்ன வெண்ணிலாவென
மாய வாழ்வு வாழென மந்திரத்தை போடுவர்
மாற்றமென்று மாண்டுபோவதா

தேய் மனம் துரத்தவும் தேசமெங்கள் மீட்கவும்
தேடிநூறு காலில் வீழ்வதா
பேய்குணத் திலோடவர் பிள்ளையென்று வாயிலே
போடும்லட்டு தின்று வாழ்வதா
மாய்மனத்தின் மாயங்கள் மாறு நீ கரத்தெடு
மற்றதென்ன விட்டெறிந்ததை
தீயென்றாக்குத் தீமைகள் தேசம்மீள் சுதந்திரம்
தேவை தீயைபோற் பரந்திடு

கிரிகாசன்

Friday, May 17, 2013

ஒன்று சேரடா!


வெட்டும்போது கைகள் தட்டி ஆடவா- குண்டு
வீசும்போது பாசம் விட்டுஓடவா
தட்டி எம்நிலம்பறிக்க தாங்கவா - எங்கள்
தாய்நிலத்தை விட்டு எங்கும் ஓடவா
கட்டிஎங்கள் மாதர் கொல்ல மூடவா - கண்கள்
காணலற்ற பேடியென்று ஆகவா
எட்டியெம் பிணம் உதைக்க ஏங்கவா - இல்லை
எம்நிலத்தை மீட்க ஒன்றுகூடவா

சொட்டி இரத்தம் ஆறுபோலஓடவா - நாமும்
சொல்லதற்ற ஊமையென்று நோகவா
முட்டி எம்மை கீழ்விழுத்த வீழாவா - வீழும்
மூடரென்றவன் இழிக்க வாழ்வதா
தட்டியென்ன வென்று கேட்ட தலவனாம் - அன்று
தலைநிமிர்ந்த வாழ்வுகண்ட தமிழனாம்
பெட்டியுள்ளே பாம்பு அல்ல நாமடா - அவன்
பேசிப் பொய்யை ஊதநின்று ஆடவா

எத்தனையென் றெண்ணும் ஆட்கள் நாங்களா நீயும்
செத்தபின்பு பார்க்கலாம் என்றாரடா
புத்தன்வம்சம் வெட்டவெட்ட பாரெல்லாம் - உளம்
புல்லரித்து கண்ட காட்சி நூறடா
சத்தியத்தை நம்பிநம்பி வீழ்ந்தமோ இந்த
சங்கதிக்கு இன்னம் நூறு வேசமோ
பொத்தி பொத்திவைத்த உண்மை தெரியுதா -இந்தப்
பேய்கள்வாழும் பூமி என்பதுண்மையா

ஒற்றைப்பாதை ஒன்றுசேர்ந்து கொள்ளடா - எங்கள்
உரிமையென்று பகைவிடுத்து சேரடா
வெற்று வாதம்விட்டு உண்மை எண்ணடா - உன்
வேலை எங்கள் ஈழம் காத்தல் தானடா
கற்றும் வாழ்வில் தூய்மைகெட்ட உலகடா - எம்
காக்கும் தெய்வமென்று எண்ணல் பொய்யடா
சொற்களோடு சென்று பேசு பேசடா - உன்
சொல்லில் வில்வளைத்து கொள்ளப் பாரடா

வாயிருக்க ஆயுதங்கள் வேண்டுமா - உன்
வார்த்தை என்ப இறைவ னீந்த வேலடா
போயிருந்து பேசு உண்மை கூறடா - உன்
பேச்சுவன்மை வெல்லும் உள்ளம் நூறடா
தேயிதென்றே எண்ணி திங்கள் சோர்வதா- அது
தேறும் மீண்டுமென்ப தென்ன அறியடா
ஆயிரமென் றேயுன் கைகள் இணையடா - அதில்
அன்னைத் தமிழ் ஈழம் வெல்லும் பாரடா

கிரிகாசன்

Wednesday, May 15, 2013

மே 18, கூடுவோம் வா



தேகம் துடித்திட வேண்டும் உந்தன்மன

திண்மை கொதித்தெழ வேண்டும் சுதந்திர
தாகம் வருத்திட வேண்டும் ஈழமது
தாங்கும் துயர் எண்ண வேண்டும் நிலமதின்
பாகம் பிரித்தொரு எல்லை வகுத்திடும்
பாங்கு மனம் கொள்ளவேண்டும் எதற்கென
வேகம் விடுத்துமே தோழா காலமதை
வீணாய் கழிப்பதோ சொல்லு!

மேனி பதைத்திடவேண்டும் மனதினில்
மின்னல் வெடித்திடவேண்டும் உந்தன்மன
வானின் இடியெழும் சேதி வந்துஉந்தன்
காதில் ஒலித்திடவேண்டும் சுதந்திர
ஆணை யுடன் திருநாட்டை ஆளுமொரு
ஆசை பிறந்திடவேண்டும் இதைவிட்டு
ஏனோ தயங்கினை தோழா பகைவனை
ஏனென்று கேட்டிட வாடா

கெட்டியாகக் கைகள் பின்னே பிணைத்துமே
கீழ்மன தோடவர் சட்டை கழற்றியே
கட்டியவர் கண்கள் மூடிக் கொடியவர்
காலாலு தைத்தவர் மெய்யை இழிசொல்லு
கொட்டிச் சிரித்தவர் சுட்டு உயிரது
கூட்டைவிட்டுவெளியேறத் துடித்திட
விட்டு வெறுமனே வீட்டில் இருந்துநாம்
வேடிக்கை காண்பதோ தோழா

ஓடி நரம்பினில் சூடு எழுந்துன
துள்ளமதில் வீறு கொண்டு சுதந்திரம்
தேடி நீதிதனைக் கேட்க மறந்துமே
தின்று படுப்பதோ தோழா பலருடன்
கூடிக் கதைகளைப் பேசி உறவுடன்
கொஞ்சிப்பேசி விளையாடிப் படுத்துமே
ஆடித்திரிந் தனையாகில் வருவது
ஆக அவலமென் றாகும்

உற்ற வரையறை யெல்லாம் விட்டேஅவர்
உண்மைதனைப் போர்வையிட்டு நேர்மையதை
விற்று விலைதனைக் கொண்டு தமிழனை
வெட்டி அழித்திட விட்டு செய்யுமந்த
குற்றந்தனை கேட்க நீயும் தெருவினில்
கூடிஎழவில்லை என்னில் உனதரும்
சுற்றம் உறவுகளோடு சேர்ந்துநீயும்
சொல்லாத் துயருற நேரும்

கவிஞர்:கிரிஷாசன்

Monday, May 13, 2013

இன்னும் எத்தனை விருத்தன்களோ?



பேய்களின் ஆட்சி முடிவதெப்போ எங்கள்
பிள்ளைகள் தப்பிப் பிழைப்பதெப்போ
ஆயிரமாய் பலர் தந்துவிட்டோம்இன்னும்
ஆனதுயர் தனுக் அந்தமில்லை
நீஎழுந்தே இப் பேய்கள் பிசாசுகள்
நீதியின் முன்நிறுத் தும்வரை
ஓயுமென்றே நினையாதே உடன் எழுந்
தாவன செய்திட வேண்டுமடா

எங்கள் விருத்தனாய் எத்தனை பிள்ளைகள்
இன்னும் உயிர்விடப் போகினரோ
கண்ணைக் கசக்கிய கை எடடா இனி
காரியம் ஆற்றப் புறப்படுவோம்
துன்பம் இழைத்தவர் அத்தனை பேரும்
என்ன அதுவெனக் கண்டிடணும்
இன்னுமவர் கரம்கொண்ட விலங்குடன்
எண்ண வேண்டும்சிறைக் கம்பிதனை

கொன்றவன் மாளிகை பஞ்சணைமீது
பாலை அருந்திப் படுத்திடவும்
நெஞ்சம் சகித்து விடுவதுமோ அவன்
நித்திரை யின்றி அலைந்திடணும்
செய்தபாவமெல்லாம் எண்ணி இருட்டினில்
கல்லில் படுத்துக் கலங்கிடணும்
சங்கில்போட்டு இழுத்து நடந்திட
சக்தி யற்றவனென் றாக்கிடணும்

கட்டியமனைவி பிள்ளைகுட்டி சொந்தம்
அத்தனை யும்மறந் தேதனியே
வெட்டிமனிதனாய் வீதியிலே வெறும்
பைத்திய மாகித் திரிந்திடணும்
வெட்டி அழித்தவன் செய்தவினை தனை
மொத்தமாக அறுத் தெடுத்தே
கொட்டிஅனுபவித் தேகொடும் செந்தணல்
பட்ட புழுவாய் துடித்திடணும்

நாயும் நரிகளும் நம்மினம் சப்பிட
நாமென்ன வாய்பொத்த ஊமைகளோ
போய் இவரைபிடி த்தேஉள்ளே வைத்திட
பொங்கி எழுந்து புறப்படடா
நீஉன் சகோதரன் என்று நினைத்து
நெஞ்சு நிமிர்த்தி புறப்படணும்
நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டால் இந்த
நீதியைக் கேட்பது யார் மகனே?

கவிஞர்:கிரிஷாசன்

மே 18



வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம் 
வெடிவெடி தெங்கணும் அதிர 
முட்டுதே புகையும் மூளுதே தீயும் 
மேகமே வீழ்ந்திடத் தோன்றி 
தட்டியே சிதறி தடதட வென்றே 
தாவுதே துண்டுகள் அய்யோ 
சுட்டுமே தீயில் துடித்ததே உடல்கள் 
சூழ்பெருந்தீ எரித்திடவே! 

கொட்டிட வானில் குண்டுகள் நூறாய் 
குடிசைகள் வீடுகள் கூரை 
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே 
படுத்தவர் எழுந்துமே பதறிச் 
சட்டென ஓடித் தப்புவோம் என்று 
சற்றொரு கணமதில் எண்ண 
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி 
விழுத்தியே உடல்கருக் கியதே! 

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா 
வசந்தங்கள் தேடிய பூக்கள் 
கந்தகம் தூவி கருகியே முறுகி 
கால்கை துடித்திடச் செத்தார் 
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும் 
எரிந்திடும் தீவிட்ட தில்லை 
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி 
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார் 

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு 
பதுங்கிய குழிகளே சிதையாய் 
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி 
எரிந்திடக் கொள்ளியும் வைத்து 
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற 
தீயெனும் குண்டுகள் போட்டு 
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து 
மூடிஓர் சுடுகாடு செய்தார் 

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க 
என்றவர் நம்பிய போதும் 
சுந்தர தேசம் சுழல்புவி யாவும் 
செத்துநீ போஎன விட்டார் 
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை 
மரம்செடி கொடிகளை விடவும் 
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு 
இதையும்போய் யாரிடம் கேட்போம் 

கிரிகாசன்

Friday, May 10, 2013

இருந்தது போதும் எழுந்து கேளடா!



நீரள்ளி ஊற்றி நெருப்பை அணைக்கலாம்
நெஞ்சின் சுதந்திர தீயை அணைக்குமோ
வேரள்ளி வெட்டி மரத்தைச் சாய்க்கலாம்
வீரரைக் கொன்று விடுதலை சாயுமோ
ஊருள்ளே தீயிட்டு உயிரோ டெரிக்கலாம்
உள்ளமெடுத்த உறுதி குலையுமோ
கூருள்ள கத்தி கொடியை அறுக்கலாம்
கொண்ட மனத்திடம் கொள்கை அறுக்குமோ 

சேறள்ளிப்பூசிச் சுவரைக் கெடுக்கலாம்
சொல்லிடும் பொய்கள் சுதந்திரம் கொல்லுமோ
பூக்கிள்ளிப்போட்டு அழகைக் கெடுக்கலாம்
பொங்குதமிழ் உரம்கிள்ளிக் குறையுமோ
தேனள்ளிக் கூட்டைச் சிதைத்து அழிக்கலாம்
தீந்தமிழ் காக்கும் சிந்தனை போகுமோ
போரள்ளி ஓரினம் பாதி புதைக்கலாம்
போய்ச்சுதே யென்றுபுற முதுகாவமோ 

வீரத்துணிவு கொண்டே நீயும் வென்றிட
மார்பை நிமிர்த்தி மனத்திடம் கொள்ளடா
போரைவிட்டே யொருநீதிவழி கண்டோர்
போகும் திசையினில் காலைப்பதியடா
சாரமெடுத்தெம்மை சக்தியில்லாதாக்கி
ஊரைப்பறித்திட தூங்கிகிடப்பதோ
நேரே எழுந்தவன் நீசச்செயலினை
நீதிமுன்னே நிறுத்தி நீகேளடா 

பெற்றவள், நீயும்மக னெனநிற்கையில்
பிச்சையெடுக்கவும் விட்டுக்கிடப்பதோ
நெற்றியில் பொட்டழிந்தே அவள் கண்களில்
சொட்டென நீர்வர சுற்றித்திரிவியோ
உற்றவழி ஒன்று கண்டுநீயும் அவள்
குற்றுயிர் காத்துகொள்ள வருவியோ
விட்டு அயர்ந்து இவ்வேளைபடுத்திடில்
வீரசரித்திரம் உன்னைப் பழித்திடும் 

கிரிகாசன்

Thursday, May 9, 2013

சொல்லித் தர வாருங்கள்



நீள் மகுடம் ஏந்திதமிழ் ஈழநிலம் ஆண்ட இனம்
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
ஆள்திறனும் ஆற்றலுடன் அரசுகொண்டு ஆண்டகுடி 
அந்நியர்க்கு அடிமைகளாய் வாழ்வோ
தோள் வலித்த தீரமெழும் தீந்தமிழர் இனமழித்துத்
தூயகுலம் வாழ்வழித்த தீயர்
கேள் நல்லூரில் வாழ்முருகா சூரனைச் சம்ஹாரம் செய்ய
சூழ்வினையைத் தீர்க்க வேலைத் தாராய்

ஊழ்வினையோ ஈழமதில் உள்நுழையும் பாவியினம், 
ஊரழித்துக் காணிநிலம்கொள்ள
யாழெடுத்து மீட்டிடவோ யாரி்டம்கால் வீழ்வதுவோ 
யாரிவர்கள் தொன்மை மறத்தீரர்
வாள் எடுத்துச் சொந்தஇன வாழ்வைவந் தழிப்பவனை 
வீழ்த்தவென வேட்கை கொண்டமைந்தார்
ஆள்கொடுமை வேரறுக்க ஓன்றிணையா நாமிழிந்தோம்
ஓடி யெழுந்தெம்மை காக்க வாரீர்

சேல்விழிகொள் மாதர்குலம் சினமெடுத்து படைநடந்து
சிங்ககுணத்தாரை மோதி வெல்ல
வேல் பிடித்த கையெடுத்து வினைமுடித்த செயலும்கண்டு
வியந்தெழுந்த உலகமொன்று சேர
சூல்தரித்த பெருவயிறும் சுட்டொழிக்கும் கீழ்இனத்தர்
சொல்லிஒன்று சேர்ந்துநிற்கக் கண்டும்
பால்வடித்த வாயினரும் பாவையரும் தாயவரும்
பலிகொடுத்தும் ஒன்றுசேரல் விட்டோம்

உயிர்கொடுத்த மைந்தர்களே உறுதியொன்று போனதய்யா
உள்ளதின்னும் தமிழினத்தின் வாழ்வு
வயிறெரிந்த உலகமிது வயிரமென்னும் ஈரமற்ற 
வாணிகத்து நேசங்களை காத்து 
கயிறெறிந்து காலன்வரக் கட்டிதொகையென்றனுப்ப
கடனுமுண்டோ எழுதி வைத்ததேது
உயிர்பறிக்க மாவுலகும் இசைபடித்து ஆடுகிறார்
எம்கடமை என்ன வந்து சொல்வீர்

கிரிகாசன்

Tuesday, May 7, 2013

எங்கள் தலைவர்


நடந்திட அதிரிடும் நானிலமும் - இவர்
தடந்தோ ளெழும் உயர் தமிழ்உரமும் - அது
படர்ந்தே விரிந்திட தமிழ் நிலமும் - இவ
ரிடமே இருந்தன வாழ்வறமும்

உறுதி மனம்கொண்ட உணர்வெனும் தீ - இவர்
குறுந்தீ யலபெரும் எரிமலை தீ - மையும்
அறு தீர் வெடு என ஆற்றுஞ்செயல்- அதில்
பெறுந்தாய் ஈழமும் பெரிது நலம்

வெள்ளமும் பொங்கிட ஆறோடும் - அது
கொள்விரி கடலென புகழ் பரவும் -நல்
லுள்ளமும் பெரிதெனும் ஆகாயம் அதில்
எள்ளென வும் இலை பயம்சிறிதும்

கண்களும் எதிர்வரும் காலமெண்ணும் - அதில்
எண்களை வகுத்திடும் இளமனதும் - ஒரு
வெண்கல்லின் பளிங்கெனும் விதமுறுவல் - அதில்
மண்கொள்ளும் மகிமையின் திறன் உதிக்கும்

எங்கும் சுதந்திர இசைமுழக்கம் - இவர்
செங்களம் புகின் பகை சிதறி விழும் -மனம்
பொங்கி மகிழ்வொடு உயிரெடுப்போன்- பகை
சிங்கம் மெதிர்த்தவர் திறன் போற்றும்

நாடகமில் இது நடைமுறையாம் இவர்
ஆடலில் சிவனிலை ஆயினும்காண் -பெரு
தேடலில் இவர்கொண்ட விஸ்வரூபம் ப;ல
கூடலில் தேசங்கள் குமுற வைத்தே

படைமூன் றுடன் எழப் படபடக்கும் - உடல்
கிட ஈ தழிவென பகை வன் மனம் - இனி
விடமே வழியென கரமெடுக்கும் - இதை]’
விட நேர் மையதை மனம் மறுக்கும்

கடந்தன நீதியும் நேர்மைகளும் - துயில்
கிடந்தன தெய்வமும் திருவருளும் கொல்ல
படமெடுத்தாடின பாம்புகளும் - இனி
இடர் போய் கதிர்கிழக் கெழ விடியும்!

கிரிகாசன்