Saturday, May 11, 2013

கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.



யாழ்ப்பாணம் அரியாலை ஆனந்தன் வடலி வீதியில் மயில்வாகனம் திலகவதி தம்பதிகளுக்கு 1975 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 அன்று ஆறாவது புதல்வனாக பிறந்தவன் தான் லெப் கேணல் சிந்து. இவனது இயற்பெயர் தயாளன். இவன் ஆரம்பக் கல்வியை அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் பயின்று வந்தவன், இளமைக்காலத்தில் கல்வியில் கணிசமாகவும், விளையாட்டில் மிகச்சிறந்தும் விளங்கினான்.

இவன் பாடசாலை இல்ல விளையாட்டுகளிலும் சரி, கழக விளையாட்டுக்களிலும் சரி தனது தனித்திறமையை வெளிக்காட்டினான். தாச்சிப்போட்டி, கரப்பந்தாட்டம் போன்றவற்றில் தன் திறமையை பெரிதும் வெளிப்படுத்தினான். தயா இறங்கி தாச்சி மறித்தால் யாரும் கோடுதாண்டி போகமாட்டார்கள் என்பார்கள் அவனது நண்பர்களும் அயலவர்களும் அறிந்ததொன்று. எல்லோரது கரவொலியும் அவனுக்காகவே ஓங்கி ஒலிக்கும்.

கலைநிகழ்வுகளில் அதாவது தமது ஊர் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக சுய முயற்சியில் உதயகுமாரி (வதனி) அவர்களால் நடாத்தப்பட்ட சரஸ்வதி கலையகத்தில் தானும் இணைந்து படித்துக்கொண்டு அவர்களால் அரங்கேற்றப்படும் கலைநிகழ்வுகளிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான்.


ஊரில் தனது அருணோதயா சனசமூகநிலையத்தின் கலைநிகழ்வுகளிலும் குறிப்பாக “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போன்ற வரலாற்று நாடகங்களிலும் பங்குபற்றிச் சிறப்பித்தான். அது மட்டுமல்ல வதனி அவர்களின் தயாரிப்பில் உருவான ~நாடகம்ஹ என்ற நகைச்சுவை நாடகத்தில் அசட்டுப்பையனாக நடித்து அருணோதயா முன்றலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அத்தனை மனிதர்களையும் வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்தது அவன் கலையார்வத்துக்கு மட்டுமல்ல குருபக்திக்கும் எடுத்துக்காட்டு!

அத்தோடு தனது கலைத்திறமையைப் பயன்படுத்தி இளைஞர்களுடன் சேர்ந்து வாசிகசாலை, கோவில் வளர்ச்சிக்காக கரோல் போன்றவற்றை நடாத்துவதன் மூலம் அவ்வூர் வளர்ச்சிக்காக தானும் பாடுபட்டான். பல பொதுப்பணிகளில் முன்னின்று செயற்பட்டான். இவ்வாறாக இவனது இளமைக்காலம் நகர்ந்து கொண்டிருந்தது.

அவ்வப்போது இவனது குடும்ப பொருளாதார நிலை காரணமாக பாடசாலை செல்லும் வயதிலேயே அரியாலை தபாற்கட்டைச் சந்தியில் அமைத்திருந்த ‘மணியண்ணைஹ (அவன் அப்படித்தான் அழைப்பான்) கடையில் பணிபுரிந்து அதிகாலை வேளையில் பத்திரிகை போடுவதும் உதவி செய்வதுமென சிறிய பணம் ஈட்டி வந்தான். அந்தப்பணத்தில் சீட்டுப்பிடித்து சேகரித்து தன் தாயின் கழுத்தினை சிறிய பொன்னகை போட்டு மகிழ்வித்து மகிழ்ந்த நல்ல மகன் அவன். குடும்பநிலையை மனதில் கொண்டு தனது பெற்றோரின் வாழ்விற்காகவும் ஏனைய சகோதரர்களின் படிப்புக்காகவும் தனது கல்வியை பத்தாம் தரத்துடன் நிறுத்திவிட்டு குடும்ப சுமையை தானே பொறுப்பெடுத்து கடின உழைப்பிற்கூடாக நல்ல நிலைக்கு கொண்டுவந்தான்.

இக்காலகட்டத்தில்தான் பலாலியில் இருந்து வலிகாமத்தை நோக்கி சிங்கள இராணுவத்தால் 1995 ம் ஆண்டு “றிவிறேச’’ என்னும் பாரிய இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பெருமளவில் மக்கள்; கொல்லப்பட்டு பாரியளவில் மக்கள்; இடம்பெயர்ந்தார்கள். அதில் பெரும்பாலான மக்கள் அரியாலைப் பிரதேசங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.

குடும்பநிலை உணர்ந்து சிறுவயதிலேயே தனது குடும்பச் சுமையைச் சுமந்தவனால் மற்றவர்களின் துன்பம் புரியாதா என்ன? எனவே பலஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து சிரமப்படுவதைப் பார்த்துக்கொண்டு இவனால் சும்மா இருக்கமுடியவில்லை. இரவு, பகல் பாராது வெயில் மழைபாராது அவர்களுக்கான உணவுகளை எடுத்துக் கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வூர் அரசியல் துறையுடன் இணைந்து செய்தான்.


இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் “புலிப்பாய்ச்சல்” என்ற பாரிய முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாரிய இழப்புக்கள் மத்தியில் அவனது இராணுவநடவடிக்கை கைவிடப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத சிங்கள ஏகாதிபத்தியம் மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது.

அதன் உச்சக்கட்டம்தான் யாழ் சென்பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத்தாக்குதல். இதில் பல தமிழ்மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள். இதை இவன் பார்த்து கொதித்தெழுகின்றான். ‘‘இப்படி ஈவிரக்கமின்றி எம்மக்களைக் கொல்கிறதே சிங்கள இராணுவம்.. இதுதானே எங்களுக்கும்? இவன் இப்படியே எம்மை அழித்து தனது இன அழிப்பைச் செய்துமுடிப்பான்“ என்பதை உணர்கின்றான். இதைத் தடுக்கவேண்டும் எனின் போராடவேண்டும் என முடிவெடுக்கின்றான்.

தன்னை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்ற குடும்பத்தைவிட ஈவிரக்கமின்றிக் கொல்லப்படுகின்ற தமிழ்மக்களின் அவல நிலை இவனை ஒரு போராளியாக மாற்றுகிறது.

1995ம் ஆண்டு 8ம் மாதம் 8ம் திகதி நல்லூர் அரசியல்துறையில் போராட்டத்திற்காக தன்னை முழுமையாக இணைத்துக்கொள்கிறான். இதன் இடையே இவனுடன் பிறந்த அண்ணன் 2ம் லெப்ரினன் பழனி ஏற்கனவே போராட்டத்தில் இணைந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டதால் இவன் வீடு செல்லுமாறு பணிக்கப்பட்டான். ஆனால் இவன் அன்பாக மறுத்து ஏனைய நண்பர்களுடன் பயிற்சிப்பாசறை நோக்கி நகர்கின்றான்.

மணலாறு மாவட்டத்தின் அதன் காட்டுப்பகுதியில் இயங்கிவந்த ஜீவன் பயிற்சி முகாமில் இம்ரான் பாண்டியன் படையணியின் கெனடி 01 என்ற பயிற்சிப் பாசறையில் புதுப் புலியாக புதுவேகம் எடுக்கின்றான். இவன் பயிற்சிக்காலங்களில் பயிற்சிகளிலும், கலைநிகழ்வுகளிலும, விளையாட்டுகளிலும் திறம்படச் செயற்பட்டான்.

இக்காலகட்டப் பகுதியில்தான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக, சிங்கள இராணுவத்தால் பல நாடுகளிடம் வாங்கிக் குவிக்கப்பட்ட இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்தி “சூரியக்கதிர்’’ என்ற பாரிய இனஅழிப்பு, நில ஆக்கிரமிப்பு யுத்தம் எமது மக்களைக் கொன்று குவிக்க நடாத்திக் கொண்டிருக்கப்பட்டது.

இதனது எதிர்ச் சமரிற்காக இவனது பயிற்சிப்பாசறையில் இருந்து திறம்படச் செயற்பட்ட போராளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் இவனும் தெரிவுசெய்யப்படுகிறான். ஆகவே மீண்டும் யாழ் களமுனை நோக்கி ஒரு புதுப்புலியாக கன்னிச்சமரை T56-2 என்ற AK ரகத்துப்பாக்கியுடன் எதிர்கொள்ளச் செல்கின்றான்.

இவர்களைச் சமருக்காக விடப்பட்ட இடம் யாழ் பல்கலைக்கழகம். அப்போது இவன் “டேய் மச்சான் அம்மா எல்லோரும் அடிக்கடிச் சொல்வார்கள் நீ படித்து கம்பஸ் போகவேண்டும் என்று ஆனால் அதை சிங்களவன் செய்யவிடவில்லை இப்ப இயக்கம் கொண்டுவந்து விட்டிருக்கு‘‘ எனச் சிரித்தவாறே சொன்ன அவன் ‘‘இதை சிங்களவனிடம் விட்டிடக்கூடாது‘‘ என ஆவேசத்துடன் சொல்லிமுடித்தான்.

அதன் ஆவேசம் அவனது கன்னிச்சமரில் ஒரு முதிர்ந்த கள அனுபவமுள்ள போராளியைப் போல் களமாட வைத்தது. இவனது திறமையை இவனது பொறுப்புநிலை அதிகாரிகள் கண்டு வியந்தனர். யாழ்மாவட்டம் முற்றுமுழுதாக நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வரை நின்று திறம்படக் களமாடினான். பின் பயிற்சிகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் பயிற்சிமுகாம் வந்து சேர்ந்தான்.


யாழை இழந்தபின் முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான சமரிற்கு இவனுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர்த்தந்திரங்களில் ஒன்றான புதிய தாக்குதல்களில் புதிய மூலோபாயமாக புதியஇராணுவ வழங்களைப் பயன்படுத்தவது வழமை ஆகவே இத்தாக்குதலின் மூலோபாய வளங்களில் ஒன்றாக புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட 120MM (5 இஞ்சி) எறிகணைகளைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார்.

அந்த வகையில் இம்ரான் பாண்டியன் படையணியின் 120MM எறிகணை அணிகளுக்கு இரகசியம் காப்பதுடன் செயற்திறன் மிக்க போராளிகள் வரிசையில் இவனும் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அதன்படி ஓயாதஅலைகள் 01 நடவடிக்கையில் 5 இஞ்சியுடன் நின்று சிறப்புடன் களமாடுகிறான். இவனது களத்திறமை இவனை ஒரு 5இஞ்சி அணிக்கு பொறுப்பாளராக மாற்றுகிறது.

இவன் அவ்வணிக்கு பொறுப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக இம்ரான் பாண்டியன் படையணியின் கவச அணிக்குள் உள்வாங்கப்படுகிறான்.

இவனிடம் அசாத்தியதிறமை இருப்பதை இனங்கண்ட பொறுப்பதிகாரியால் 23MM கனோன் வகை ஆயுதம் பொருத்தப்பட்ட தென்னாபிரிக்க நாட்டுத் தயாரிப்பின் விசேட பவள் கவச வாகனத்திற்கு சாரதியாக நியமிக்கப்படுகிறான். 106MM(RCL) பின்னுதைப்பற்ற ஆயுதங்களுடனும் களமாடினான்.

போராட்டத்தின் அடுத்தகட்ட எந்தவொரு வளர்ச்சியிலும் தலைவர் அவர்களின் நேரடிப்பார்வை இருக்கும். அந்தவகையில் பவள் கவச அணியின் செயற்திறனை நேரடியாக பார்வையிட்டபோது அவ்வணிப் போராளிகள் தலைவரால் பாராட்டப்படுகிறார்கள.; அந்த அணியில் இவனும் ஒருவனாக இருந்தான்.

23MM ஆயுதம் பொருத்தப்பட்ட கவச வாகனத்தை மிகவும் சாதுரியமாக ஓட்டிச் சென்று ஆயுதச் சூட்டாளருக்கு ஏற்ற வகையில் எந்தக் கடினமான பிரதேசத்திலும் சொல்கிற இடத்தில் கொண்டுசென்று நிறுத்துவதுடன் தனது வாகன இருக்கையில் இருந்தபடி தனது சிறுரக ஆயதத்தால் களமாடி மீண்டும் பவள்கவசவாகனத்தை தனது இருப்பிடம் நோக்கி கொண்டுவந்து சேர்ப்பான். இவ்வாறு மன்னார் களமுனைகளில் பல தாக்குதல்களிலும் ஜெயசிக்குறுவுக்கு எதிரான பல எதிர் சமர்களிலும் பங்கு கொண்டான்.


இவனது வாகனம் செலுத்தும் திறமையை மட்டுமல்ல போரிடும் ஆற்றலையும் கண்ட பொறுப்பாளர்கள்;, எம்மால் பூனகரி “தவளைப்பாய்ச்சல்”; நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட T55 டாங்கிக்கு, இவனை சாரதியாக நியமிக்கின்றார்கள். அதன் பின் அவன் சாரதியாக மட்டுமல்லாது டாங்கியின் சகல பகுதிகளையும் கற்றுத் தேறுகிறான். இக்காலகட்டத்தின் போது எதிரியின் குகைக்குள் உள்நுளைந்து தாக்குதலை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணிக்கும், விசேட அணி போராளிகளுக்கும் ஒரு டாங்கியை கைப்பற்றினால் அதை எவ்வாறு ஓட்டிக்கொண்டு வருவது தொடர்பான பட்டறிவுகளையும் வழங்கினான்.

இவனது விடுதலைப்போராட்ட வாழ்க்கையில் டாங்கியோடு களமாடிய சமர்களே அதிகம். ஓயாத அலைகள் 02,03,04 ,போன்ற எமது வெற்றிச் சமர்களில் எல்லாம் டாங்கியைக் கொண்டு சென்று எதிரியை திகைப்பூட்டி கொன்றான். அதே போல் எதிரியின் ராங்குகள் எம்மவர்களால் தாக்கியழிக்கப்பட்டால் அவ்விடத்திற்கு சிந்துவும் சென்றுவிடுவான். ஏனெனில் எங்களது ராங்கிற்கு ஏதாவது பாகங்கள் களற்றமுடியுமா என பாhர்த்து அதை எவ்வளவு எதிரியின் தாக்குதலுக்கும் மத்தியிலும் களற்றிவருவான். இவ்வாறு தனது பொறுப்பாளருடன் சேர்ந்து தங்களது கவச அணியை எவ்வளவுதூரம் விடுதலைப் போராட்டத்தில் வளர்க்கமுடியுமோ அந்தளவுக்கு வளர்த்தும் பாதுகாத்தும் வந்தான்.

ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தின் மீது நாம் டாங்கித் தாக்குதலை மேற்கொண்டபோது அவ்விடத்தில் டாங்கி புதைந்து விடுகிறது. அப்போது எதிரிக்கும் டாங்கிக்கும் இடையே சொற்ப தூரம்தான் இருந்தது. எதிரியும் பலவழிகளில் எமது டாங்கியை அழிக்க முயன்றான். அவற்றிற்கெல்லாம் எதிராக களமாடிக்கொண்டு சக போராளிகளுடன் இந்த டாங்கிக்கு ஏதாவது நடப்பதாக இருந்தால் தனது வீரச்சாவிற்குப் பிறகுதான் நடக்கும் என அவ்விடத்தில் இருந்து நகராது பலமணி நேர சிரமத்தின் மத்தியில் அந்த ராங்கியை பாதுகாப்பாக ஏனைய போராளிகளுடன் வெளியே எடுக்கிறான்.


அந்த அளவிற்கு தனது உயிரிலும் மேலாக தனது டாங்கியை நேசித்தான். காலை எழுந்ததும் பிள்ளையாரைக் கும்பிட்டுத்தான் ஏனைய கடைமைகளைச் செய்வான். நான் இங்கு பிள்ளையார் என்று கடவுளைக் கூறவில்லை டாங்கிக்கு எம்மவர்களால் வைக்கப்பட்ட பெயர்தான் பிள்ளையார்.

இவ்வறாக இவன் பல சமர்களை சந்தித்த பின்பும் கடலோரத்தில் எதிரியின் கடற்கலங்களின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே கடற்கரைப் பாதுகாப்பிற்காக ஏனைய காலங்களில் கண்விழித்து ராங்கியுடன் கடமையாற்றினான்.

இக்கால கட்டத்தில்தான் இவனைத் திருமணம் செய்யுமாறு பணிக்கப்படுகிறது. அதன்படி 18.05.2005 அன்று திருமணம் செய்து கொள்கிறான்.

இதன் பின் எம்மவர்களின் பாரிய தாக்குதல் திட்டத்திற்காக மாசார்பகுதியில் நிலைகொண்டிருந்த போது டாங்கியைப் பயன் படுத்துவதற்காக முகமாலையில் எதிரியின் முன்னணிக் காவலரணைப் பார்வையிட்டு வரும் வழியில் இவனையும் இவனைப் போன்ற பலரையும் டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான லெப்.கேணல் பார்த்திபன் என்ற தான் நேசித்த ஒரு தளபதியை விபத்தின் போது இழக்கின்றான்.

டாங்கியணிக்காக வளர்த்தெடுத்த தளபதியும் டாங்கியணியின் முதல் மூத்த உறுப்பினரும், இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியுமான பார்த்திபன். லெப் கேணல் சிந்து.


ஒரு விடுதலை வீரன் வீழ்கின்றபோது அவனது கடமைகளை ஏனைய போராளிகள் தாங்குகின்றார்கள். அதே போன்று அத்தளபதி விட்டுச் சென்ற கடமைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகல் பாராது தனது புதிய குடும்பத்திற்கும் மேலாக கடமையில் தீவிரம் காட்டுகிறான்.

இதற்காக எம்மைக் குறிவைத்துக் காத்திருக்கும் சூனியப் பிரதேசத்திற்குள்ளும் சென்றுவந்தான். சத்தம் கேட்டால் உயிர் போகும் என்று அறிந்திருந்தும் எம்மவர்களால் தாக்கி சேதமாக்கப்பட்டு எம்மாலும் எடுக்கமுடியாமலும் அவனாலும் எடுக்க முடியாத இடத்தில் இரவில் சென்று சத்தம் இன்றி ஏனைய போராளிகளுடன் மிகச் சாதுரியமாக பாகங்களைக் களற்றி வந்தான். இவனது திறமையையும் ஆர்வத்தையும் கண்டுகொண்ட சிறப்புத்;தளபதி இவனை கவச அணியின் எமது தாக்குதல் உத்திக்கு ஏற்ப தயார்ப்படுத்தப்படும் கவசவாகனப் பகுதிக்கும், அதன் திருத்தப் பகுதிக்கும் பொறுப்பாக நியமிக்கின்றார்.

VMB கவசவாகனத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளைத் திருத்தி அதில் உள்ள ஆயதத்தை தாக்குதலுக்காக தயார்ப்படுத்தி எமது தேசியத்தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கவேண்டும் எனத் துடித்தான். அதற்காக பலதரப்பட்டவர்களை அணுகி பலதரப்பட்ட பொருட்களைத் தானே தேடி அதை செய்துமுடித்தான். அதே நேரம் பவள் கவசவாகனத்தில் விசேடவகை கனோன் கனரக ஆயுதத்தை பொருத்துவதற்கு ஏற்றவகையில் அதை வடிவமைத்து அதில் கனரக ஆயுதத்தைப் பூட்டி அதைத் தாக்குதலுக்காக கொடுக்கும் பணியை பொறுப்பேற்று அதை பலதரப்பட்ட படையணிகளின் போராளிகளுடன் அணுகி திறம்படச் செய்துமுடிக்கிறான். அப்போதுதான் இவனது நிர்வாகத்திறமையையும், ஆளுமையையும் நாம் கண்டுகொள்கின்றோம்.

இக்காலகட்டத்தில்தான் பல நாட்டு உதவிகளுடன் எம்மை அழிப்பதற்கான பாரிய யுத்தத்தை எதிரி மன்னாரில் இருந்து தொடங்குகின்றான். இதன்போது எமது பிரதேசங்கள் இனஅழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தம் அரங்கேற்றப்பட்டது. இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இதனால் மக்கள் ஒரு நேர உணவுக்குக்கூட அவதிப்பட்டார்கள். இதனைப்பார்த்து மிகவும் வேதனைப்பட்டான். இவன் தன்னிடம் இருப்பவற்றை மக்களுக்குக் கொடுத்தான்.

இதன் போது தொடர்ந்து டாங்கியுடனும், MBயுடனும் இவ்வினவெறி இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டான். அதே நேரம் எதிரியால் மேற்கொள்ளப்படும் விமானத்தாக்குதலில் இருந்தும், எறிகணைத்தாக்குதலில் இருந்தும் எமது கவசவாகனங்களை மிகந்த சிரமங்களுக்கும் மத்தியில் இயன்றளவு ஏனைய போராளிகளுடன் சேர்ந்து பாதுகாத்துவந்தான்.


இராணுவம் பல நாட்டு உதவி ஆலோசனைகளுடன் பலமுனைகளில் நவீன இரசாயன ஆயுதங்களுடன் எமது மக்களைக் கொன்று எமது சமர்க்களங்களை புதுக்குடியிருப்புவரை பின்னகர்த்தியிருந்தான். இங்கு நாம் எது செய்தாலும் எதிரியின் வேவு விமானம் கண்டுவிடும் அப்படியிருந்தும் எதிரியின் வேவுவிமானங்களுக்குத் தெரியாத வகையில் டாங்கியை சாதுரியமாக நகர்த்தி புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு திரும்ப கொண்டுவந்துவிடப்பட்ட இடம் எதிரிக்கு ஏதோ ஒருவகையில் தெரியவந்து அவ்விடத்தில் கிபீர், மிக்27 ஆகிய விமானத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதலால் டாங்கி மறுபக்கம் கவிழ்ந்து அச்சதுப்புநிலத்தில் புதைந்துவிடுகிறது.

இதை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று இராணுவம் டாங்கியை அண்மிக்கும் வரை ஊணுறக்கமின்றி இடருற்றான். என்ன செய்யமுடியும் அதை வெளியே எடுப்பதற்கான வசதி அப்போது எம்மவர்களின் கைகளில் இருக்கவில்லை எனவே அதை தகர்ப்பது என தலமை முடிவெடுக்கின்றது. இதை கேள்வியுற்றவன் அழுதே விட்டான். இதை தன்னால் பார்க்கமுடியாது என சக போராளிகளிடம் விட்டுவிட்டு தனது மற்ற வாகனமான VMB யுடன் முள்ளிவாய்க்கால் செல்கின்றான்.

அங்கே VMB யை எங்கே விடுவது. நகரமுடியாதஅளவுக்கு மக்கள் கூட்டம். இதை எங்கு விட்டாலும் அந்த மக்களுக்கும் ஏதாவது நடந்துவிடும் என்பது அவனுக்கு தெரியும். எனவே தனது குடும்பத்துடனேயே வைத்திருந்தான். இதை எதிரி வேவு விமானம் கண்டால் நிச்சயம் தாக்கியழிக்க முற்படுவான். இதனால் சுற்றியிருக்கிற மக்களுக்கு பாதிப்புவரும் என்பதால் மிகவும் அவதானமாக இருந்தான்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவம் எமது மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து சரமாரியான முப்படை தாக்குதலினால் பல ஆயிரம் மக்களை கொன்றது. இவ்வாறான இராணுவத்தின் தாக்குதலில் இவனும் இவனது குடும்பத்தில் இரண்டு பேரையும் இழக்கின்றோம்.


அதுமட்டுமல்லாது ஏனையவர்கள் படுகாயமடைந்து யாரை யார் காப்பாற்றுவது என தெரியாது தவித்;தார்கள். இவ்வாறக தான் நேசித்த மக்களுடனும், உறவுகளுடனும் இந்த கவசஅணி வீரன் விதையாகின்றான். ஒரு ஆண்மகவுக்கும் பெண்குழந்தைக்கும் தந்தையான சிந்து தன் இறுதிக்குழந்தையுடன் அதிக நாட்கள் கூட வாழக் கிடைக்கவில்லை.


11.05.2009 அன்று எதிரியின் எறிகணைத்தாக்குதலில் இந்த கவசப் புலி வீரச்சாவைத்தழுவிக் கொள்கிறான். தன்வலியைவிட மற்றவர் வலிகண்டு தன்குடும்பம், சுற்றம், சூழல் துறந்து இவன் போன்றவர்களது போராட்டவாழ்க்கை எமது அடுத்தகட்ட போராட்டத்திற்கான திறவுகோலாகப் போடப்பட்டிருக்கிறது. நிச்சயம் இவன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவுகள் நனவாகும் வரை மீண்டும் மீண்டும் எழுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம்.

Sunday, May 5, 2013

தமிழீழ விடுதலைப் புலிகள் 37-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்



தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 37-வது அகவையில் கால் பதிக்கிறது.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார்.

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.

ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி

03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

விஸ்வா

Tuesday, March 26, 2013

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் நாள்

1195275806_eelamheros_com_well1

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.


skytigers

இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் இன்று...!!

வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.


27_08_08_taf_02 big

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*


27_08_08_taf_01 big


NP2

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை

ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26 மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.

26 ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவை தவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை. வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது

தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கைதாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.

விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றைகருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்றஅவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒருவிமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.

  













வான் புலிகள் பற்றிய முழுநீள விபரணம் காணொளி

Monday, November 19, 2012

தமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்




1991 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன.








பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும்.















1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது.

மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவற்றுயினர் செயற்பட்டார்கள்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை. போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்.

காவல்துறை உருவாக்கம் காணொளியில்