Monday, May 20, 2013

தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பால்ராஜ் அவர்கள்




இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.

1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டதாகும். ஆகக்கூடியது 4 மாதங்களே இப்போர், இது நீண்டநாள் நீடிக்காது என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடித்துக்கொண்டே சென்றது. விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 98 "ஓயாத அலைகள் 2" நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சி நகரத்தை முற்றுமுழுதாகத் தங்களின் வசம் கொண்டுவந்து இராணுவத்தினரை வீழ்ந்தினார்கள், ஆயிரத்துக்குமதிகமான படையினர் இதனால் கொல்லப்பட்டனர். இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஐந்து நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதனைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையின் ஊடாக புலிகளால் மீட்கப்பட்டன. புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மகா வெற்றியை நிகழ்த்துவதற்கு மிகமுக்கியமானவராக இருந்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்களே. இப்போர் வெற்றிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளை அடைந்தார்கள். ஜெயசிக்குறு தந்த பாடத்தின் ஊடாக. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறையாக இந்த ஜெயசிக்குறுச் சமர்தான் இருந்தது.

2002 இல் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழத் தேசித்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானதாக எதனை நீங்கள் கருதுகிறீர்கள்"?

பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.

ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு இப்போர் வெற்றியைத் தலைவரும் ஆழமாக நேசித்தார். அதனைப் போன்றே தலைவரும் இவ்வெற்றிக்கு வழிவகுத்த பால்ராஜ் அவர்களையும் ஆழமாக நேசித்தார்.

1983 - 1984 க்கும் இடைப்பட்ட காலம். புலிகள் இயக்கம் வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள். அக்கால கட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாகவும் பகுதி நேரப் போராளியாக மட்டும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நடைபெற்ற சம்பவம் அவரைப் போராட்ட வாழ்க்கைக்காக முழுமையானவராக மாற்றியது.

இயக்க வேலையாக தண்ணீரூற்று முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு மிதிவண்டியில் முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞனாக இருந்த பால்ராஜ் அவர்களை இடைமறித்து அவரைச் சிங்களப் படைகள் கைது செய்து முல்லைத்தீவு முகாமில் மூன்று நாட்கள் சிறை வைத்தார்கள்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும் சிறிலங்காப் படையினர் அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை விதைக்க விளைந்தனர். ஆனால் பால்ராஜ் அவர்களை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்றோ, அல்லது பகுதிநேரப் போராளியென்றோ அடையாளம் காணாத சிங்களப்படைகள் சிறுவன் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி விடுவித்தனர். ஆனால் அதன்பின்னர் "வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்ற தேசியத் தலைவரின் வாக்கின் அடிப்படையாக கொண்டு தன்னை முற்றுமுழுமையாக போராளியாக மாற்றிக்கொண்டு அதன்பின்னர் தளபதியாகி உயர்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தான் சிறைவைக்கப்பட்ட இராணுவ முகாமை பின்னாளில் தாக்கியழித்து வரலாற்றில் பதிவாகினார் மாவீரன் பால்ராஜ் அவர்கள். என்னால் அவரை எழுத முடியாது என்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறுவார். அவரின் வீரத்திறமைகள் அளப்பெரியவை. அவற்றை எழுத்தினுள் அடக்கிவிட முடியாது.

வன்னிப் போர்க் களத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை புறமுதுகு காட்டவைத்து பல மைல்களுக்குத் தப்பி ஓடவைத்த மகாவீரன் பால்ராஜ், போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளைக் கொண்ட சிங்களப் படை உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஒடிய வரலாற்றைச் சிங்களம் மறந்துவிடாது. தப்பி ஓடிய சிங்களப்படை விட்டுச் சென்ற போர்த் தளபாடங்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் மூலமாகவும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்தார்கள். அன்று பால்ராஜ் உயிருடன் இருக்கும்வரை வன்னியை நம்மால் பிடித்துவிட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிங்களம் இருந்தது.

குடாநாட்டைப் பற்றிய நிலப்படமில்லாமலே (Map) முற்றுமுழுதாக அதனை துள்ளியமாக அறிந்து வைத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள் போரின் போது இராணுவம் வன்னியில் உள்ளே நுழைந்தால் அதனை வழிமறித்து போரிடும் உபாயங்களையும், உள்ளே சிங்கள இராணுவத்தை வரவைத்து தங்களின் பொறிக்குள் இராணுவத்தைச் சிக்க வைத்த பின்னர் சுற்றி வளைத்து தாக்கும் தந்திரங்களையெல்லாம் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தி போர்களில் பல வெற்றிகளைப் பெற்று வல்லாதிக்க அரசுகளின் இராணுவத் திட்டங்களையும் தகர்த்தெறிந்த மகாவீரன் தான் பால்ராஜ் அவர்கள். சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்ட வல்லாதிக்க அரசு சிங்களத்தின் மண் ஆக்கிரமீப்புப் போருக்கு உதவிகளை வழங்கி அதன் ஊடாக தமிழீழப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன அவற்றைப் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் கொண்டு சென்றார். இதன் காரணமாகவே அன்று வல்லாதிக்க அரசு யுத்தத்தினால் தீர்வு ஏற்பாடாது சமாதானத்தின் மூலமே தீர்வைப் பெறமுடியும் என்ற நிலைக்கு வந்திருந்தன.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர் மரவுவழிப்படையாக மாற்றியதில் பால்ராஜ் அவர்களுக்கும் பங்குண்டு. ஒருநாள் போரியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு இளம்புலி வீரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தலைவர் விரும்பினார். அதற்குத் தகுதியானவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரை அழைத்தார். பயிற்சிக்கல்லூரியில் கற்கும் போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால் தமிழீழத் தேசித்தலைவர் ஒரு நிபந்தனையும் வைத்தார். அது "நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம் நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்" அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக பால்ராஜ் தலைவரின் பார்வையில் மிளிர்ந்தார்.

போர் ராஜதந்திர முன்னெடுப்புகளில் பிரிகேடியர் பால்ராஜ் மேதையாக இருந்தார். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மிகையாகாது.

விஸ்வா

நெஞ்சைத் தொடுகுது அண்ணா


நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஆனையிறவின் நாயகனே
வன்னிவிக்கிரமவில் புயலவனே..!
தீரத்தின் விளைநிலமே
வன்னியின் செல்வ மைந்தனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

தமிழர் சேனைத் தலைவனின்
வீரத் தளபதியே
தலைவன் செய்திகள் சேருமுன்
சாதிக்கத் துடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

கூவி வந்த யாழ்தேவி
புரட்டி விட்டவனே
திமிரெடுத்து வந்த சிங்களத்தின்
கதை முடித்தவனே..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

சாதனைகள் உன்
சட்டைப் பை ரகசியங்கள்.
சோதனைகள் உன்முன்
பட்டன வேதனைகள்.

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

ஈழக்கனவில் நாம்
நித்தம் அழுகிறோம்..
நீயும் ஏன் அண்ணா
மரணத்தை அணைத்தெம்மை
அழ வைத்தாய்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

விடிவதற்குள் ஏனிந்த அவசரம்
விடிந்த பின்னும்
நிச்சயம்
தமிழரெம் இதயமெங்கும்
உன் பெயர் ஒலிக்கும்..!

நெஞ்சைத் தொடுகுது அண்ணா
உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது
நெஞ்சைச் சுடுகுது அண்ணா
உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது.

வீரவணக்கம் பிரிகேடியர் பால்ராஜ்



வீரத்தின் தலைவனோ
நீ வெற்றியின் சிகரமோ
ஆருக்கும் அஞ்சிடா
எங்கள் சேனைக்கு அரசனோ

பாருக்குள் புண்ணியம் செய்தோம்
நாம் உன்னையே எவருக்கும் இணையில்லா
சாள்ஸ்அன்ரனி சிறப்புத்தளபதியாய்
பெற்றதால் பெருமிதம் கொண்டிங்கு நிமிர்ந்திட்டோம்

கற்பித்தாய் போர் வித்தை எம்களவீரர் தமக்குத்தான்
பற்றுவைத் துன்னிடம் பயின்றவர் எழுந்தனர்
மற்றதோர் துணை வேண்டாம் உன் மாவீரம் போதுமே
தாயகம் மீட்டிட எனத் தமிழினம் நினைக்கையில்

போய்விட்டாய் வீரத்தின் சுவர்க்கத்தைத் தேடியே
வாய்விட்டுச் சொல்ல முடியாத இழப்பிங்கு
நோயுற்றுத் தவிக்கிறாள் தமிழ் ஈழ மாதாதான்

எமைவிட்டுப் பிரித்தானே எமனவன் உன்னைத்தான்
சுமையது இதயத்தைச் சோகமாய் அழுத்திட
இமைமூடா திங்குநாம் ஏங்கியே அழுகையில்
அமைதியாய்த் தூங்குதல் முறையோதான் சொல்லையா

எதிரியை அழித்திட எழுந்து நீ நடக்கையில்
உதிருமே உன்னிடம் வீரத்தின் முத்துக்கள்
கதிர் அறுத்தறுவடை செய்கின்ற வேளையென்று
எதிர்பார்த்திருந்தோமே எம் விடுதலை விளைச்சலை

தமிழினம் செய்திட்ட பாவம்தான் என்னவோ
அமிழ்தினும் இனிய உன் ஆருயிர் பிரிந்ததே
குமிழ்விட்டு மலுருமே தமிழ்ஈழம் பாரய்யா
உமியல்ல நாங்களும் உன் விளைச்சலின் நெல்மணி

தலைவனின் எண்ணத்தைத் தலை மீது தாங்கினாய்
மலைபோன்ற வெற்றிக ள் குவித்து நீ காட்டினாய்
விலையில்லா உன் வீரம் கண்டஞ்சி எதிரிதான்
தலைதெறித்தோடினன் தலைவனும் மகிழ்ந்தனன்

தாயகக் காற்றிலே உன்உயிர் கலந்ததா
தலைவனின் உயிரிலே உன் உயிர் இணைந்ததா
புலம்பெயர் மண்ணையே தேடியே வந்ததா
புதிதாகத் தமிழ் ஈழம் படை என்று சொனனதா

சிலகண நேரத்தில் சிந்தையில் நிறுத்தி உன்னை
மலர்ப்படுக்கை போட்டு விட்டு மறப்போமா உன்னைஐயா
கடமை முடிந்ததென்று நாம் கை கட்டி நிற்போமா
வீரத் தளபதி உன் கனவை நனவாக்கிடுவோம்

எம் இதயத் துடிப்பிங்கு எழு எழு என்குதே
உதிரத்தின் ஓட்டமோ உணர்வினால் கொதிக்குதே
எதிர்காலம் எம்கையில் என அது உணர்த்துதே
எடுத்தோம் உன் இலட்சியம் நிறைவேற்றிக் காட்டுவோம்
எம்தலை குனிந்துமக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

ஈழத்தின் போரியல் வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்


தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்) அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது.

தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர்

13.02.1985, அன்று கொக்கிளாயில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிறிலங்கா இராணுவத்தின் முகாம் மீதான தாக்குதலின் மூலம் தமிழீழ போரியல் வரலாற்றில் காலடி எடுத்து வைத்த பால்ராஜ். அதனைத் தொடர்ந்து மணலாற்றில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய முயற்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக முந்திரிகைக் குளம், கொக்கைச்சான் குளம், ஆகிய இடங்களில் ஏற்படவிருந்த சிங்களக் குடியேற்றங்களையும், படை நகர்வுகளையும் தடுத்து நிறுத்தி தனது போரியல் யுத்தியினை வெளிப்படுத்தினார்.

தேசியத்தலைவர் அவர்கள் மணலாற்றில் இருந்த காலத்தில் அவரையும் போராளிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் வன்னியில் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவினை நிறுவி மேஜர்.பசீலன், லெப்.கேணல்.நவம், லெப்.கேணல்.கிறேஸி, கரும்புலி லெப்.கேணல்.போர்க், ஆகியோருடன் இணைந்து மிகத்திறமையாகச் செயற்பட்டு வன்னியி;ல் இந்திய இராணுவத்தின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து தனது திறமையை நிலைநாட்டி தேசியத்தலைவரின் நம்பிக்கையையும் றெ;றதோடு இந்திய இராணுவத்தையும் வியப்பில் ஆழ்த்தியவர் பால்ராஜ்.

இந்திய இராணுவம் வெளியேறிய போது வன்னிக்கான ஒருங்கிணைப்புத் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றப்பட்டு வன்னியில் தடைக்கற்களாக இருந்த கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி, முகாம்களைத் தகர்ததோடல்லாமல் முல்லைத்தீவுத் தளத்தை விரிவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட கடற்காற்று போன்ற இராணுவ நடவெடிக்கையை தடுத்த சமருக்குத் தலமை வகித்தவர். மாங்குளம் முகாமிலேயே முதன்முதலில் 50 கலிபர் இயந்திரத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஜூலை யில் இடம்பெற்ற ஆகாயக் கடல்வெளிச்சமரில் (பலவேகய 01) இலங்கையில் இரண்டு இராணுவம் இருக்கின்றது. என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியதில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து முக்கிய பங்காற்றியவர். தென்முனையினூடாக ஊடுருவி சிறப்பான தாக்குதலை ஒருங்கிணைத்து நடாத்தி மரபுவழிப் படையணியாக மாற்றுவதில் பெரும்பங்கெடுத்தவர். இதன்மூலம் இவர் உலக இராணுவ விற்பணர்கள் வியக்கத்தக்க வகையில் புதிய புதிய யுத்திகளை அறிமுகப்படுத்தி தனது போரியல் திறமையை மரபுவழியாக மாற்றுவதில் வெற்றிகண்டார். புலிகள் இயக்கத்தில் புதிய யுத்த தந்திரோபாயங்களை அறிமுகப்படுத்தினார்.

இதன் வெளிப்பாடாக உருவான தேசியத்தலைவரின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்து 1991இல். முதலாவது சிறப்புப் படையணியான சாள்ஸ் அன்ரனிப் படையணியை உருவாக்கி அதன் முதலாவது சிறப்புத்தளபதியாக 1993 வரை செயற்பட்டார். 1991 களில் வவுனியா மாவட்டத்தில் நடந்த “வன்னிவிக்கிரம” படை நடவெடிக்கையை முறியடித்து தமிழீழப் போராட்டத்தில் முதன்முதலான மரபுவழி நேரடித்தாக்குதலை நடாத்தி உலங்குவான ஊர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தி தான் ஒரு தலைசிறந்த போரியல் ஆசான் என நிலை நிறுத்தினார். குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய அனைத்துப் போரியல் வியூகங்களுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. 1995 – 1997 வரை மீண்டும் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாக விளங்கி அதனை பல உத்திகளும் உடைய சிறந்த படையணியாக கட்டியெழுப்பினார்.

அதன்பின் மணலாறில் நடத்தப்பட்ட “மின்னல்” படை நடவெடிக்கையை சிறப்பாக முறியடித்தார். அத்துடன் 1993இல் கிளாலியில் இடம் பெற்ற யாழ்தேவி நடவெடிக்கையில் தலமையேற்றிருந்த லெப்.கேணல்.நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய உடனடியாக அங்கு சென்று ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபத்pயாகச் தலமையேற்று அக்களம் தமக்குச் சார்பாக இல்லாதிருந்த போதும் குறுகிய நேரத்தில் எதிரிகளை முறியடித்து எதிரிக்கு பல இழப்புக்களை ஏற்படுத்தி சர்வதேச பேரியல் நிபுணர்களை அதிரவைத்தார். அச்சண்டையில் காலில் ஊனமுற்ற நிலையிலும் தொடந்து நடைப்பயணங்களை மேற்கொண்டு பல நூறு தால்குதல்களை நெறிப்படுத்தினார். அத்துடன் பல ஆயிரம் ஆயிரம் புலிகளையும் உருவாக்கி அவர்களுக்கு போரியல் கலை தொடர்பாக பல பயிற்ச்சிகளையும் வழங்கினார்.

இந்த இடத்தில் பிரபல இராணுவ ஆய்வாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்கள் 2003 இல் வீரகேசரிக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையில் அமெரிக்க இராணுவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிரிகேடியர் பால்ராஜ். அவர்கள் தலமையேற்று நடாத்திய யாழ்தேவி நடவெடிக்கை, குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை, ஆகிய சண்டைகளின் வழிநடத்தல்கள் ஆகியவை ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உலகில் குறுகிய நேரத்தில் படைநடவெடிக்கை ஒன்றை முறியத்த போரியல் வீரர்களில் பால்ராஜ் அவர்களும் ஒருவர் என அவ்ஆய்வுக்கட்டுரை தெரிவித்ததாக சிவராம் அவர்கள் எழுதி அன்றைய தினமே பால்ராஜூக்கு புகழாரம் சூட்டினார்.

அதன்பின் இடம் பெற்ற முன்னேறிப்பாய்தல் நடவெடிக்கையையும் தலமையேற்று முறியடித்து தலைவர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பின்னர் முல்லைத்தீவு தளம் தாக்கியழித்த நிகழ்வில் ஒருங்கிணைப்புத் தளபதியாகவும். பின் இடம்பெற்ற சத்ஜெய நடவெடிக்கையில் நேரடியாக களத்தில் வழிநடத்தினார். பின்னர் தாண்டிக்குளம், பெரியமடு, ஆகிய இடங்களில் இடம்பெற்ற செய் அல்லது செத்துமடி என்னும் ஊடறுப்புத் தாக்குதல் இவரது போரியல் திறமைக்குக் கட்டிளம் கூறி நிற்கின்றன.

பொதுவாக தமிழ|Pழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த ஊடறுப்புத் தாக்குதல் அனைத்தையும் தலமையேற்று சிறப்பாக வழிநடத்தியவர். சிங்கள தேசம் எந்த ஊடறுப்புத் தாக்குதல் நடந்தாலும் அது பால்ராஜின் தலைமையில் நடந்தது அல்லது பால்ராஜ் அந்த இடத்தில் நிற்கின்றது என்று கூறம் அளவுக்கு அவரது போரியல் வல்லமை பாராட்டத்தக்கது. இலங்கையிலேயே தலைசிறந்த பேரியல் வல்லுணன் பால்ராஜ் என்றால் அது மிகையாகாது. தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பராட்டையும் பெற்றிருந்தவர் இவர்.

அதன்பின் நடந்த ஜயசிக்குறூய் இராணுவ நடவெடிக்கைகளின் ஒட்டுமொத்த கட்டளைத் தளபதியாகவும் விளங்கினார். பின்னர் ஓயாதஅலைகள் :03 இடம்பெற்றபோது அதில் பெரும்பங்காற்றியதோடு மட்டுமல்ல ஆனையிறவுத்தளம் மீட்புக்காக விடுதலைப்புலிகள் ஒரு தரையிறக்க மூலம் தமக்குச் சாதகமில்லாத எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடாத்தி வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் ஊடறுப்புச் சமரும் நடாத்தி அங்கு 34 நாட்கள் அங்கு எதுவித வழங்கல்களும் இல்லாமல் எதிரியின் தளங்களுக்குள்ளேயே நின்று புலிகள் ஆனையிறவை மீட்டு பளை வழியாக இத்தாவிலில் வந்து கைகுலுக்கும் வரை நின்று புலிகளின் போரியல் வியூகத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் நிகழ்த்தி ஆணையிறவு வெற்றியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். பால்ராஜ் தீச்சுவாலையின் ஒருங்கிணைப்புத் தளபத்pயாகவும் இவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் வரை போர் அரங்கில் கட்டளைத்தளபத்pயாக விளங்கியவர்.

சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகர் பால்ராஜ். உதாதரணமாக பூநகரி, யாழ்தேவி, ஆகாயக்கடல் வெளிச்சமர் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவர் முதுபெரும் போரியல் ஆசான் மட்டுமல்ல ஒரு தலைசிறந்த மனிதனும் கூட போராளிகளுடன் அன்பாக பழகும் சுபாவம் மூலம் அனைத்துப் போராளிகளையும் அன்பால் கட்டிப் போட்டவர். அவர் களமுனையில் நிற்பது அறிந்தால் போராளிகள் உறுதியுடனும் உத்வேகத்துடனும் போராடுவார்கள். அடேல் பாலசிங்கம் அவர்கள் கூட பால்ராஜ் அவர்களை தனது சுதந்திர வேட்கை நூலில் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட முதுபெரும் போரியல் ஆசானை நாம் இழந்திருப்பது மாபெரும் துயரமே இதனால் சிங்கள தேசம் மிகவும் மகிழ்ந்திந்தது. இப்படிப்பட்ட சரித்திர நாயகனுக்கு தலைதாழ்ந்த வீரவணக்கத்தை தெரிவிப்போம்.
























பிரிகேடியர் பால்ராஜ்


பிரிகேடியர் பால்ரரஜ்
பிறப்போடு வந்த வீரம் உனக்கு!
பிறவியிலே கர்னனுக்கு
கவசகுண்டலம் போல!

மணலாற்று மண்ணில்
மன்னவனைக் காக்க
மற்றும் இருவருடன்
மா வீரனே நீ செயற்பட்டாய்!

சிங்களப் படைகளை
துடைத்தொழிக்க
தளபதியானாய் வன்னியிலே!

கொக்குவில் மாங்குளம்
கிளிநொச்சியில்
தகர்த்தழித்தாய்
சிங்களப்படைத்தளங்களை!

வழிநடத்தினாய்
தலைமைத்தாங்கி
"கடற்காற்று’’ க் கெதிராய்படையை
முல்லை மண்ணில்!

முதல் சிறப்பு
தளபதியானாய்
சார்ள்ஸ் என்ரனியின்
சிறப்பு படையணியில்!

வன்னி விக்ரம்’’ வை
முறியடித்த நீ
பேரிடி கொடுத்தாய்
உலங்கு வாணுர்தியை
சுட்டு வீழ்த்தி!

சுற்றுலா விடுதிபடைமுகாமை
தகர்த்தெரிந்தாய்
தலைமைத்தாங்கி
ஆகாய கடல் வெளிச்சமரில்!

மணலாற்று மண்ணில்
தலைமைத்தாங்கினாய்
மின்னல் நடவடிக்கையைமுறியடிக்க!

எங்கும் எதிலும்
துணை நின்று நீ
துணை தளபதியானாய்!

காலையும் முறித்துக்கொண்டு
களத்திலே மோதி
முதல் தடவையாக
அழித்தொழித்தாய்
அன்னியன் டாங்கிகளை!

யாழில் முன்னேறி பாய்ந்த
மோட்டு சிங்களப் படைகளை
முறியடிப்பு தாக்குதலாய்
புலிப்பாச்சல் கொண்டு
புகுந்து விளையாடினாய்!

சூரிய கதிரெனப் புறப்பட்ட
சிங்களப்படைகளை
எதிர் கொண்டாய் யாழில்!

ஓயாத அலைகள் 01ல்
ஒருங்கிணைப்பு தளபதியானாய்!

தொடங்கியதும்
வன்னியில் ‘’ஜெயசிக்குரு’’
தொடக்கத்திலேயே
எதிர்த்து நின்றாய்!

ஓயாத அலைகள் 02க்கு
உறுதுணையாக நின்று
ஊடறுப்பு தாக்குதலில்
ஓடஓட விரட்டி எதிரியை
வெற்றி பெற்றாய்!

பெரும் அணிக்கு தலைமைதாங்கி
கடல்வழிசென்று தரையிறங்கி
இத்தாவில்’’ ஊடறுத்து
எதிரியின் கோட்டையின்
முற்றுகைக்குள் நின்றாய்
முப்பத்துநான்கு நாட்கள்!

எதிர்த்து விளையாடி
இழப்புக்களை
ஏற்படுத்தினாய் எதிரிக்கு!

ஓயாத அலைகள் 3க்கு
ஓத்தாசையாக இருந்து
ஆனையிறவை அடிமைப்படுத்தியது
உனது வீரம்!
நான்கு தளபதிகளை சிங்களம்
மாறி மாறி நியமித்தபோதும்
அசைக்கமுடியவில்லை வ_ரனே
உன்னை இத்தாவிலில்!

முதன்மை பங்கை வகித்தாய்
முகமாலையில்
த_ சுவாலை தாக்குதலில்!

ஆழிப்பேரலைக்கூட
அழிக்கமுடியவில்லையே உன்னை
அதுகூட பயந்ததாமே
உன் வீரம் கண்டு!

போர் பயிற்சிகளையும்
போர் உத்திகளையும்
புரியும்படி சொல்லிக்கொடுத்தாயே
போரரளிகளுக்கு வன்னியில்!

மதயானையைக் கண்ட
மனிதர்களைப்போல்
சிதறி ஓடியதே சிங்களப்படை!

வரத்தையும் விவேகத்தையும் சேர்த்து
விளையாடியவன் நீ!

உன்னையே பிழிந்து
உன் உடன்பிறப்பிற்கு
கொடுத்து விட்டு
சக்கையாகப் போனாயே!
உன்னைவிட உயர்ந்தவன்
உலகில் உன்டோ?
மன்னவனே!
உன் சக்கையும்
உயர்தர விதையாகி
உன் மண்ணில் விருட்சமாகும்!

கவிஞர்:வே. குமாரவேல்

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு


பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.

அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்ற போது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.

போரின் நாயகனாக போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.

எம்மை ஆக்கிரமித்தவர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.

கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.

தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-

போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் அவர்.

போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும் இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.

மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்கை அவருக்கு பிடித்திருந்தது.

ஆனால் அந்த கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.



படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.

தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.

பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.

அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம் பெருமைப்படும் விடயம்.

ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்கள தளபதியாக இல்லாது வீழ்ந்து விட தாயாராக உள்ள போர்க்கள தளபதியாக செயற்பட்டார். பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்

பால்ராஜ் வரலாற்றை படைத்தவர். வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர். அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று போராடி வழிநடத்தியவர்.

சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார். அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம். அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.

எமைவிட்டுப் போனதேன்?


மணலாற்றுக் களமதில் - பசீலனுடன்
பகைமேல் பாய்ந்த புலியே
கொக்குத்தொடுவாய் எமக்குக்
கொணர்ந்துதந்த கோவே
உன்குரலில் பகையினை 
குலைநடுங்க வைத்த
மட்டற்ற வீரனே பால்ராஜ் அண்ணா
உம் வீறுநடை வெற்றிபல தருமென
நாம் பார்த்திருக்க
விழிமூடிப் போனதேனோ!

ஓயாத அலையாய் - பகைமேல்
ஓங்கியடித்த ஓர்மத்தீயே
இத்தாவிலில் இறங்கி - பகைமேல்
இடிபோளிந்த ஈழவனே
பால்ராஜ் அண்ணா
அலைகளாகப் பகைமேல் பாய்வாய்
என நாம் பார்த்திருக்க - நீ
கண்ணீரில் எமை கலங்கவிட்டுப்
போனதேனோ!

எம் தலைவன் - உன்
திறன்கண்டு வளத்திட்ட
தீரமிகு தளபதியே - நீ
உருவாக்கிவிட்ட உறவுகள்
உன் கட்டளைக்காய்க் காத்திருந்தன
பால்ராஜ் அண்ணை - நீ
எமைக் கைவிட்டுச் சென்றதேனோ!

அச்சத்தின் எதிர்பொருளே
கட்டளையின் ராஜாவே
கரிகாலன் சொல்லின் செயல்வடிவே
உம் வீர நடைக்காக எம் வீழிகள்
ஏங்கியிருக்க - நீர்
எமைவிட்டுப் போனதேனோ!

உம் வீரமரணச் செய்தியில் - எம்
விழிகள் ஈரமண்ணா
கொடியவன் கொல்லமுடியா உனை - அக்
கொடிய நோய் எப்படிக் கொன்றது?
பால்ராஜ் அண்ணா
உமக்காக ஏங்கும் - உம்
உலகத் தமிழினத்திற்காக - ஒருமுறை
எழுந்து வாருங்கள் அண்ணா!

போராளி இ. நக்கீரன்

நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: வைகோ



நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் அன்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் சென்னையில் வைகோ அன்று வெளியிட்ட அறிக்கையில்:

ஈழ விடுதலைப் புலிகளின் முதல் வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது.

மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும்.

பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப் புலிகள்.

பெரும் தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக்கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ராஜ்.

1989 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 23 ஆம் நாள், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளை என்னிடம் விடுதலை வேங்கைகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த போது, அவர்களுள் முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ்.

குத்திக்கிழிக்கும் கூரிய முள்மரங்கள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கையில், எந்த நேரத்திலும் இருநாட்டு இராணுவமும் தாக்குகின்ற அபாயத்தின் ஊடே என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்ந்து எடுத்து உடன் அனுப்பி வைத்த வீரர்களில் சிலர் அதன்பின் நடைபெற்ற சமர்களில் வீரமரணம் எய்தினர்.

முக்கிய தளபதிகள் பல சமர்களில் சாகச வெற்றிகளைக் குவித்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து வன்னிக்காடுகள் ஊடே நடக்கையில் கிளிநொச்சிக்குச் செல்லும் சாலையை நாங்கள் கடக்க நேர்கையில், இராணுவத்தினர் அந்த வழி வருவதை அறிந்து, அருகில் காட்டுக்கு உள்ளே நாங்கள் பதுங்க நேர்ந்தது. அப்பொழுது பல மணி நேரம் பால்ராஜ் அவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய உடலில் குண்டுகள் பாயாத இடமே இல்லை. பலமுறை படுகாயமுற்று, அதில் இருந்து மீண்டு, களங்களில் படை நடத்தி உள்ளார். ஒவ்வாரு சண்டையிலும் அவருக்கு நேர்ந்த மயிர்க்கூச்செரியும் அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். என் பாதுகாப்புக்காக உடன் வந்த புலிப்படைத் தம்பிகள், தளபதி பால்ராஜ் மீது கொண்டு இருக்கிற பாசம் மிக்க விசுவாசத்தையும், மதிப்பையும், அவர்கள் சொல்லச்சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன்.



25 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில், பேசாலை பகுதியில், கடற்கரை மணலில் என்னைப் படகில் ஏற்றி விடை கொடுத்து அனுப்புவதற்கு முன்பு, பால்ராஜ் அவர்களைக் கட்டித்தழுவிக் கொண்டேன். அவரது காலணிகள் கிழிந்து போயிருந்ததால், என்னுடைய புதிய காலணிகளை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கொடுத்தேன். அந்த இரவில் தொடுவாய் கடற்கரையில் நாங்கள் இறங்கத்திட்டமிட்டு இருந்ததால், மறுநாள் காலையில் 900-க்கும் அதிகமான இராணுவத்தினைர் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தப்போவதும், சீறிப்பாய்ந்த குண்டுமழையில், நூலிழையில் நான் உயிர் தப்புவேன் என்பதும், என்னுடன் வந்த வீரத்தம்பி சரத் என்ற பீட்டர் கென்னடி, உடல் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதையும் நான் கற்பனைகூடச் செய்யாத சூழலில் பால்ராஜிடம் இருந்து விடைபெற்றேன்.

அதன் பின்னர், கடந்த 19 ஆண்டுகளில், ஈழத்துப் பிள்ளைகளிடம் தொலைபேசியிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் பேச நேரும்போதெல்லாம் பால்ராஜ் அவர்களைப் பற்றி விசாரிப்பேன். நலமாக இருக்கிறார். போர்க்களங்களில் சாதிக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதை அறிந்ததால், அண்மையில் நான் நோர்வே சென்றபோது, பால்ராஜ் அவர்களைப் பற்றி வினவினேன். "நலமாக இருக்கிறார்" என்றே சொன்னார்கள்.

நிகரற்ற அந்த ரணகளச் சூரன் மறைந்துவிட்டார். எந்தத் தாயக மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தாரோ, அந்த மண்ணில், இதோ, அமைதியாக உறங்குகிறார். அவரது வீரமும், தியாகமும், தமிழ் ஈழ விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டன.

இம் மாவீரர்கள் துயில்கின்ற தமிழ் ஈழ மண் விடுதலை பெற்று, சுதந்திர இறைமை உள்ள நாடாக மலரும்போது, அந்த மண்ணிலே உறங்குகிற பால்ராஜின் உடலும் சிலிர்க்கத்தான் செய்யும்.

வாழ்க, மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் புகழ் என்று என் மனம் மானசீகமான முழங்கும் வேளையில் அம்மாவீரனின் கல்லறைக்கு, தாய்த்தமிழகத்தில் இருந்து என் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறேன்

வைகோ

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம்


நீக்கமற நிறைந்த பொருள் நீ
நீத்தாரில் நீங்காப் பெயர் நீ
போரில் புதிய பாடத்தினை
புதுப்பித்த சூரியன் நீ
விடுதலை விரும்பி நீ
வஞ்சிக்கப்பட்ட வாழ்வினை
வசமாக்க உழைத்தவன் நீ
பகை முகாம்களைப் பிளந்து
பீறிட்ட நெருப்பாறு நீ
வெல்லவென உருவெடுத்து
பலமெடுத்தாடிய போர்ச் சூறாவளி நீ
எண்ணிவிடும் நாட்களுக்குள்
வன்னிபிடிக்க வந்தவரை
வாரிச்சுருட்டிய புயல் நீ
இடர்கள் நடுவே வேருன்றி
போரிடை பகைவீழ்த்தி
பார்புகழ உச்சத்திலேறி
விடுதலை அரசனின் வலமாகி
வாழ்ந்துபோன வல்லமை நீ
காலம் இன்றுனை சுமக்கிறது வீரா
காலங்கள் நூறு வாழுவாய் வீரா

பால்ராஜ் என்ற சொல் வீரத்திற்கு ஒத்த சொல்லாக எங்களது போராட்ட அகராதியில் இடம்பிடித்து விட்டது - கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை




இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர்.

இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது.

இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

வடமராட்சியின் கரையோரமாக கால்நடையாக நகர்ந்து கொம்படி, சுண்டிக்குளம் வழியாக நாம் மணலாற்றுப்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும்.

தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்குள்லிருந்து போரை வழிநடாத்திக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட இந்தியர்கள் மணலாற்றைச் சுற்றி இறுக்கமான இராணுவ முற்றுகையிட்டு தலைவரை அழிக்கும் நோக்குடன் 'செக்மேற்" இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருந்தனர்.

பெருந்தொகையில் ஆளணியையும், ஆயுதங்களையும் ஒன்று குவித்து மணலாற்றுக்காட்டுக்குள் புலி வேட்டையாட இந்தியர்கள் முயன்றனர்.

முல்லைத்தீவிலும் அதற்கப்பால் பதினைந்தாம் கட்டையிலும் பாரிய படை முகாமை அமைத்து மணலாற்றுக் காட்டை வளைத்து அவர்கள் நின்றனர்.

இதனால் மணலாறு, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களைப் போலல்லாது இந்தியர்களின் தீவிரமான கண்காணிப்புக்குள் உட்பட்டிருந்தது. அத்துடன் அங்கு நெருக்கமான இராணுவக் காவலரண்களையும், படை முகாம்களையும் நிறுவி இந்திய-புலிகள் போரின் முதன்மையான போரரங்கை திறந்திருந்தனர்.

இத்தனை கண்காணிப்பு வலைக்குள்ளும் அகப்படாது நெளிந்து சுளிந்து நாம் காட்டுவெளிப்புறம் ஒன்றை சென்றடைய வேண்டியிருந்தது.

இத்தனை படை முகாம்களையும் இந்தியர்களின் ரோந்து அணிகளையும் கடந்து நாம் மணலாற்றை சென்றடைவது இலகுவான காரியமல்ல ஆயினும் நாம் சென்றடைந்தோம்.

இனி மணலாற்றின் வெளிப்புறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தினூடாக அதாவது அடர் காட்டினூடாக நாம் பயணத்தை மேற்கொண்டு தலைவரின் தளத்தை அடைய வேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் காட்டுப் பயணம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. எங்களுக்கு முன்னமே அனுபவமானதுமல்ல. காடு நாம் அறியாத ஒரு புதிராக விரிந்து கிடந்தது. அது அனுபவசாலிகளுக்கு மட்டுமே வழிவிடும். இல்லாதவர்களை அது வழிமாற்றி விடும் கடலைப் போல.

இந்தியர்களின் முற்றுகைக்குள்ளால் தொடரவேண்டிய பயணம். இரவு முல்லைத்தீவு கரையோரக்காட்டை அடைந்து எம்மை அழைத்துச் செல்ல தலைவரின் இடத்திலிருந்து ஒரு அணி வந்திருந்தது. அந்த அணிக்கு ஒருவர் பொறுப்பாக வந்திருந்தார். அவ்வாறு வந்தது வேறு யாருமல்ல அவர் தான் பால்ராஜ்.

நான் முதன் முதலில் சந்தித்த பால்ராஜ்.

அந்த இரவின் கரிய பொழுதில் பால்ராஜ் எங்களோடு கதைக்கத் தொடங்கினார்......

எல்லா இடமும் ஆமி இறங்கிட்டான்..... நாங்கள் காடு முறிச்சுத்தான் போகவேணும். அவங்கள் எந்த இடத்திலயும் எங்களுக்கு அடிக்கலாம். ஆனால், ஒருத்தரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அணியிலிருந்து விலகவோ சிதைஞ்சு இடம் மாறவோ வேண்டாம்... என்ற அறிவுறுத்தலோடு பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

எதிரி உள்ளே நிற்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டே மேற்கொள்ளும் ஒரு துணிவுப் பயணம். காட்டை ஊடறுத்து கால்கள் தூரத்தை மிதித்து மிதித்து பின்தள்ள காட்டின் ஆழமான உற்பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம்.

சில மணிநேர நடைப் பயணத்திற்குப் பின்னே அணியின் முன்னே சென்று கொண்டிருந்த போராளி, காற்றில் கலந்து கிடந்த இந்தியர்களுக்கேயுரிய அந்த அந்நிய நாற்றத்தை மூக்குத் துவாரத்தின் வழியே நாசி வரை உள்ளிழுத்துவிட்டு அவங்கள் கிடக்கிறாங்கள்... என எச்சரிக்க.... இந்தியர்கள் எம்மை நோக்கித் தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

கடுமையான சண்டை... காட்டு மரங்களுக்கிடையே பாதுகாப்பாக நிலையெடுத்துக் கிடந்த இந்தியர்கள் காப்பு எதுவுமின்றி நகர்ந்து வந்து கொண்டிருந்த எம்மை நோக்கித் தாக்கினர்.

அந்தக் காட்டிற்குப் பழக்கப்பட்ட பல போராளிகள் அணியிலிருந்த போதும் பழக்கப்படாதவர்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் அணியின் ஒழுங்கிலிருந்து விடுபடுவார்களானால் மீண்டும் ஒன்றிணைப்பது கடினம்.

இந்தியர்கள் எந்த வேளையும் தாக்கலாம் என்ற எதிர்பார்க்கையை முன்னமே அறிவுறுத்திய பால்ராச் எதிரி தாக்குதலைத் தொடுத்த அதே வேகத்தில் எதிரியின் மீது ஒரு பதில் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே அணியை எதிரியின் கொலை வலயத்திலிருந்து சற்றுப் பின்னகர்த்தி உடனடியாகவே அணியை மீள் ஒழுங்குபடுத்தினார்.

அது சண்டை பிடிக்கும் களமல்ல. நாம் சண்டையொன்றைப் பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருக்கவுமில்லை. எமது பயணமும் நோக்கமும் வேறு.

அணி நகர்ந்து கொண்டிருக்கும் வேளை நான் பால்ராச்சிற்கு அருகாகவே நடந்துசென்று கொண்டிருந்தேன். அவ்வேளை எதிரி தொடுத்த தாக்குதலில் ரவையொன்று எனக்குக் காயத்தை ஏற்படுத்தியதால் குருதி அதிகமாக வெளியேற எனக்கு உடல் குளிர்ந்து கொண்டு வருவதை உணரக்கூடியதாக இருந்தது. என்னுடைய உடல் நிலையை அறிந்து கொண்ட பால்ராச் அந்த இடத்திலேயே சாக்கு ஒழுங்குபடுத்தி காட்டுத்தடி வெட்டி 'ஸ்ரெச்சர்" உருவாக்கி என்னைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்ல ஆட்களை ஏற்பாடு செய்தார்.

அதன்பின் காடு முறித்துப் புதிய பாதையெடுத்து நாம் தலைவர் அவர்களின் இடத்தையடைந்தோம். அங்கு எனக்குச் சிகிச்சையளித்த போதும் மேலதிகச் சிகிச்சை பெறவேண்டியிருந்தது. தலைவர் என்னுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தபடி அந்தப் பொறுப்பை நம்பிக்கையோடு பால்ராச்சிடம் ஒப்படைக்கப் பால்ராச்சின் கால்கள் மீண்டும் அந்தக் காட்டினூடே ஓய்வின்றிய அந்தப் பயணத்தைத் தொடக்கியது.

அளம்பிலில் படகு எடுத்து என்னை அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பால்ராஜிடம். நாயாற்றுச் சிறுகடலைத் தவிர்த்து இந்தியர்களின் கண்களுக்குள் முட்டுப்படாது பயணிக்க வேண்டும். செம்மலைக்கும் அளம்பிலுக்கும் இடையில் முழுக்காலளவுக்குப் புதையும் அந்தச் சேற்று வெளிக்கால் என்னைச் சுமந்து வந்து படகில் ஏற்றிவிட விடைபெற்றேன் பால்ராச்சிடமிருந்து முதல் பிரிவாக. மீண்டும் சந்திக்கும் வரை.

1989 க்குப் பின் வன்னிப் பிராந்தியத்தின் சிறப்புத் தளபதியாக பால்ராஜ் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளின் வெளியேற்றமும் இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கமும் நிகழ பால்ராச்சின் சுறுசுறுப்பால் வன்னி சூடு பிடிக்கத் தொடங்கியது.

1990 களில் கொக்காவில் இராணுவ முகாம் பால்ராச்சின் தலைமையில் வெற்றிகொள்ளப்பட்டு; சிறிது காலத்திலேயே மாங்குளம் இராணுவ முகாமைக் குறிவைத்து பால்ராஜூம் போராளிகளும் செயற்படத் தொடங்கியிருந்தனர்.



அப்போது போராளிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஊட்டத்தக்க வகையில் மாங்குளம் இராணுவ முகாமை வெற்றிகொள்வதில் பால்ராச் சிறந்ததொரு ஒருங்கிணைப்புத் தளபதியாகச் செயற்பட்டார்

எம்மவரிடம் அந்த இராணுவ முகாம் வீழ்ந்து பெரியதொரு இராணுவ வெற்றியைப் பெற்றபோதும் எதிரியிடமிருந்து பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதில் எம்மவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

தப்பியோடிய படையினர் தம்வசமிருந்த பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை மாங்குளம் இராணுவ முகாமைச் சூழவிருந்த ஆழமான கிணறுகளினுள் எறிந்துவிட்டு எஞ்சியவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

நீருக்கடியில் அமிழ்ந்து கிடக்கும் இந்த ஆயுத தளபாடங்களை மீட்பதில் நெருக்கடி நிலை காணப்பட தலைவர் அவர்கள் என்னை அழைத்து சுழியோடியைக் கொண்டு அந்த ஆயுத தளபாடங்களை மீட்டெடுக்குமாறு பணித்தார்.

வடமராட்சியில் நின்ற வைரப்பாவையும்; அழைத்துக்கொண்டு வன்னியில் பால்ராச்சோடு இணைந்து செயற்பட மீண்டும் இனிமையான எங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

கடமை முடிய மீண்டும் நாம் பிரிந்தோம்..... மீண்டும் ஒரு களத்தில் சந்திக்கும் வரை.

1991 ஆனையிறவுப் பெருந்தளத்தை வீழ்த்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். ஆனையிறவின் தென்பகுதியூடான படை நடவடிக்கைகளுக்கு தளபதியாக பால்ராஜ் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.

பால்ராஜின் தலைமையில் அந்தத் தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வடமராட்சியிலிருந்து வந்த எம்மை ஒன்றிணைத்து ஆகாயக் கடல் வெளி நடவடிக்கையில் அவர் ஈடுபடுத்தினார்.

அது ஒரு தொடர் தாக்குதல் பல முகாம்களையும் வீழ்த்தி ஆனையிறவைக் கைப்பற்ற எடுத்த பாரிய முயற்சி இதற்காக நாம் பல சிறு முகாம்களையும் படைநிலைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டியிருந்தது. பால்ராச் ஓய்வின்றி உழைத்தார்.

சுற்றுலா விடுதி மீதான தாக்குதல் முதல் அந்த உப்புவெளிக்குள் நீண்டு கிடந்த ஒவ்வொரு காவலரண்களையும் காட்டி அதை வீழ்த்தும் வழி வகைகளை உரைத்து தாக்குதலை மேற்கொள்ள முழுச் சுதந்திரமும் தந்து செயற்பட்ட ஒரு தளபதிக்கேயுரிய அந்தவிதம் பால்ராஜின் மீதான நட்பை மரியாதையை அதிகம் உயர்த்திவிட்டது.

ஆகாயக் கடல்வெளி இராணுவ நடவடிக்கையைப் பொறுத்த வரையில் எமது இயக்கம் மேற்கொண்ட முதலாவது மரபு வழிப்போர் நடவடிக்கை. முற்றிலும் எதிரிக்குச் சார்பான அந்தக் களத்தில் பால்ராஜ் தனக்குக் கீழான படைகளை மிக நேர்த்தியாகக் கையாண்டார்.

எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பும் புரிந்துணர்வும் அந்த உப்புவெளிப் பகை முற்றத்தில் தான் வலுப்பெற்றது. சுற்றுலா விடுதி இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், சின்ன உப்பளம் மீதான தாக்குதலிலும் பால்ராஜின் நேரடிக் கட்டளையின் கீழ் கள நடவடிக்கைகள் ஈடுபட்ட அந்த அனுபவம் வித்தியாசமானது.

பால்ராச்சின் ஓய்வின்றிய அயராத அந்த உழைப்பு இரவு-பகலாக நடந்து திரிந்து அவர் காட்டும் அந்தக் கடமையுணர்ச்சியும்; அது உன்னதமான ஒரு தளபதியின் நாட்டுப்பற்றின் உயர் வெளிப்பாடு என்பது மிகையில்லை.

அந்த ஆகாயக் கடல் வெளிச் சமரின் பின் தலைவர் அவர்களின் பணிப்பின் பிரகாரம் கடற்புலிகளின் உருவாக்கப் பணியில் நான் ஈடுபட அந்த உப்பு வெளியிலிருந்து நாம் மீண்டும் பிரிந்தோம், அடுத்த சந்திப்பில் மீண்டும் சந்திக்கும் வரை.....

பின்னர் போராட்டம் வளர வளர எங்களுடைய சண்டைக் களங்களும் சமர் முனைகளும் விரியத் தொடங்கியது. பல்வேறு சமர்களிலும் பால்ராஜ் திறம்படச் செயலாற்றத் தொடங்கியிருந்தார்.

அக்காலங்களில் தளபதி பால்ராஜ் பங்கெடுத்து வழிநடத்திய போர்க்களங்கள் ஏராளமானவை. அவை சரித்திரத்தில் என்றும் அழியாப் புகழ் பெற்றவை.

பின்னர் 1995 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி மூர்க்கமுடன் மோத நாம் தந்திரோபாய ரீதியாக யாழ்ப்பாணத்திலிருந்து விலகினோம்.

யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றிருந்த போராட்டத்தளம் வன்னிக்கு இடம் மாறியிருந்தது.

அந்தக் காலம் இயக்கத்தின் ஆளணி - ஆயுதவளம் மற்றும் இதர வளங்களை எமது புதிய தளத்தை நோக்கி நகர்த்தும் பெரும் பணி எம்மீது சுமத்தப்பட்டிருந்தது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளோடு இறுதி வரை ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது வீரர்களை வன்னி நோக்கிக் கொண்டுவரும் கடமையும் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் புலிகளை தப்பிச் செல்ல முடியாதவாறு தமது முற்றுகைக்குள் இறுக்கி விட்டோம் என இறுமாந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் நின்ற பால்ராஜ் சிங்களப்படைகளுக்கு எதிரான அந்தச் சமரை அவர் எதிர்கொண்டு விட்டு சாதாரண படகு மூலம் எந்தப் பதற்றமும் இன்றி எதிரியின் கடும் தாக்குதலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணக் கடல் நீரேரியூடாக வன்னி திரும்ப அந்தக் கடற்கரையில் நாம் சந்தித்து பிரிந்தோம் மீண்டும் சந்திக்கும் வரை.....

அதன் பின் பால்ராஜிடம்; முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ஓயாத அலைகள் ஒன்று இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை தலைவர் ஒப்படைத்தார். அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமென்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

முல்லைத்தீவு கடலோரமாக அமைந்திருந்த அந்த இராணுவ முகாமை வீழ்த்துவதற்கான வியூகத்தில் கடல் சார்ந்த பெரும் பணியை என்னிடம் தலைவர் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.

முல்லைத்தளம் பெருங்கடலின் கரையோரம் விஸ்தரிக்கப்பட்டிருந்த காலம். அத்துடன் அந்தத் தளத்தை போராளிகள் சுற்றிவளைத்து. தாக்குதலை மேற்கொள்ளும் அந்தவேளை தளத்திற்கான கடல்வழி விநியோகத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அத்துடன் தளத்திற்கு மேலதிகமாக எந்த ஆதரவும் கிட்டாது தடுக்க வேண்டும். அந்தக் கடினப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

மிக முக்கியமான கால கட்டம் ஒன்றில் வெற்றி கொள்ளப்பட்டேயாக வேண்டிய ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் அது.

ஓயாத அலைகள் ஒன்றின் ஒருங்கிணைப்புத் தளபதியாக பால்ராச் செயற்படக் கடலிலும் தரையிலுமாக எமக்கிடையே மீண்டும் ஒரு இணைவு.

நம்பிக்கையை வெற்றியாக்கி படையினரைக் கொன்று பெருந்தொகையில் படைய வளங்களை கைப்பற்றிய அந்தச் சமரில் நாம் பல நாட்கள் இணைந்து பணியாற்றினோம்.

நித்திரையைத் தொலைத்துவிட்டு வரைபடத்தின் மேலேயே குந்தியிருந்து சின்னச்சின்ன உறுத்தல்களை அகற்றி வெற்றியை எமதாக்கிய அந்தச் சமரின் முடிவில் நாம் மீண்டும் பிரிந்தோம் கடமைகளுக்காகக் கடலிலும் தரையிலுமாக... அடுத்தமுறை சந்திக்கும் வரை....

அதற்குப் பின் எத்தனையோ சண்டைகள்.... சமர்கள்.... நீள.... நீள.... நாங்கள் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை பெரு முயற்சி செய்தது.

பலாலியில் இருந்த எறிகணைக் கையிருப்புகள் முடிந்து போகுமளவுக்கு அந்தப் பெட்டிக்குள்ளே குண்டுகளை வாரியிறைத்தன சிங்களப் படைகள்.

குடாநாட்டுப்படையிடமிருந்த டாங்கிகள் அனைத்தும் தூணளவு நீளக்குண்டுகளுடன் பெட்டியைத் துவம்சம் செய்யப் படாதபாடுபட்டன. நாற்பதாயிரம் சிங்கங்கள் நடுவே ஆயிரத்து இருநூறு புலிகளைச் சீறவைத்து - தமிழரின் வீரத்தை உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டினார் மாவீரன் பால்ராச்.

34 நாட்கள் இரவும் - பகலுமாகத் தொடர்ந்து நடந்த அந்தப் பெட்டிச் சண்டையின் முடிவில், ஆனையிறவுத் தளம் இடம்பெயர்ந்தோட வேண்டிய நிலை எழுந்தது. ஓடிய படையினர் வேட்டையாடப்பட்டனர்.

ஆனையிறவுத் தளத்தில் நிலைகொண்டிருந்த சிங்களத்தின் 57 ஆவது டிவிசன் படையணி சிதைந்து - அழிந்து செயற்பட முடியாத நிலைக்குள் செல்லுமளவுக்கு வேட்டையாடப்பட்டது.

ஆனையிறவுப் படையினர் தளத்தைக் கைவிட்டோடிய பின்னர்; அந்த வழியே திரும்பி வந்த பால்ராச்சைப் பெருமிதம் பொங்க இரு கைகளையும் பிடித்து - கைகுலுக்கி வரவேற்றார் தலைவர்.

குடாரப்பில் இறங்கி நடக்கமுடியாத கால்களுடன் சதுப்பு நிலத்திற்குள்ளால் பால்ராச் அவர்கள் நடந்து சென்றபோது பிடித்த ஒளிப்படம் ஒன்றைத் தலைவர் தன் பணிமனையின் சுவரில் மாட்டி இந்த மாவீரனை, அவன் உயிருடன் இருந்தபோதே கௌரவித்துவிட்டார்.

பால்ராஜ் அவர்களின் இதயம் வீரத்தாலும் - ஓர்மத்தாலும் இறுகிக் கிடந்தது. ஒவ்வொரு களத்திலும் அதை நாங்கள் கண்டோம். கண்டு மெய்சிலிர்த்தோம்.

அந்த வீர இதயத்தில் போதியளவுக்கு ஈரமும் இருந்தது. மக்களை அவர் உணர்வுபூர்வமாக நேசித்தார். இவருக்காக உயிர் கொடுக்கும் அளவுக்குப் போராளிகளின் அன்பைச் சம்பாதித்தார். தலைவரின் நேசத்தையும் வென்றெடுத்தார்.

இவ்விதம் தமிழினம் பெருமையடையும் வீரத்தையும் - போராளிகள் - மக்களின் பாசத்தையும் சம்பாதிக்கத் தெரிந்த அந்த இதயத்திற்குத் தனது துடிப்பைத் தொடரத் தெரியாமற் போய்விட்டது.

அவருக்கு வந்த இதய நோயை நம்பவே முடியவில்லை. கற்கால மனிதன் போல பகல் முழுவதும் ஓடியோடி காடு மேடெல்லாம் நடந்து திரிந்த அந்த ஓய்வற்ற உழைப்பிற்கு இடமளித்த அந்த வலிமையான இதயம், இடைநடுவில் திடீரென இயங்க மறுத்த கதை ஏமாற்றமும் - சோகமும் நிறைந்தது.

இதயம் பலவீனப்பட்ட போதும்; இந்த மாவீரனின் வீரம் பாதிக்கப்படவில்லை. களச் செயற்பாடுகள் சோர்வு நிலையை அடையவில்லை. ஓய்வெடுக்கச் சொல்லித் தலைவர் ஆலோசனை கூறியும் அதை அவர் கேட்கவில்லை.

20 வருடப் போராட்ட வாழ்வில் தலைவர் சொல்லியும் செய்யாத ஒரேயொரு விடயமாக அதுவே இருந்தது.

என்னோடு தோளோடு தோள் நின்று களமாடிய போராளிகளில், எனது வழிநடத்தலில் களமாடிய போராளிகளில் பல நூற்றுக்கணக்கானோர் வீரச்சாவடைந்து விட்டனர். இவர்களில் கணிசமானோரின் வித்துடலை நான் பார்த்து இறுதி வணக்கம் செலுத்தியிருக்கின்றேன்,

அப்போதெல்லாம் நான் கண் கலங்கியதில்லை. சோகத்தை நான் எனது தொண்டைக்குள்ளே அடைத்துக்கொள்வேன். எனது கூடப்பிறந்த தம்பி வீரச்சாவடைந்த போதும் நான் வெளித்தெரிய அழவில்லை.

ஆனால், பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் அவரின் வித்துடலைப் பார்த்தபடி அவருக்கு இறுதிப் பிரியாவிடை கொடுக்கச் சில வார்த்தைகளை உச்சரித்தபோது, நான் அழுது விட்டேன்.

பால்ராஜ் என்ற மாவீரனை இழந்த சோகம் மட்டுமல்ல அந்த அழுகைக்குக் காரணம், நான் என் கண்களால் கண்டு இரசித்த ஒரு வீரத்தின் சின்னத்தை இழந்த துயரமும் சேர்ந்துகொண்டது.

என்னை ஒரு தளபதியாகக் களத்தில் அருகிருந்து வளர்த்துவிட்ட நன்றி உணர்வு எனது மனதில் கொப்பளித்தது. அவர் வளர்த்துவிட்ட வீரத் தளபதிகள் அவரது வித்துடலைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்ததையும் என்னால் சகிக்க முடியவில்லை. எல்லாம் சேர்ந்து என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. அதன் வெளிப்பாடாக அழுகையும் வந்தது.

பால்ராஜ் என்ற சொல் வீரத்திற்கு ஒத்த சொல்லாக எங்களது போராட்ட அகராதியில் இடம்பிடித்து விட்டது. அந்தளவுக்கு எமது போர் வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தைப் பதிவாக்கி விட்டுச் சென்றுள்ளார் பிரிகேடியர் பால்ராஜ்.

அவர் காட்டிய வீரத்தையும் - அர்ப்பணிப்பையும் - ஆளுமையையும் - உழைப்பையும் எங்களுடைய செயற்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வதே; பிரிகேடியர் பால்ராஜிற்கு நாங்கள் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை

தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்


விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.

முழுநீளக் காணொளி HD பிரிகேடியர் பால்ராஜ் 


ஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின்; பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ்குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ்குடாநாடு இருந்தது.

குடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக்கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.

யாழ்குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார். ஏனெனில்;, பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.

இந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர். இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.

எந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார். அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.



எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், ‘ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன், நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது, உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்;. சிக்கலென்றால் உங்களை உடன காப்பாற்றி வர ஏலாது, ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும்;, நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன், நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்’ எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.

குடாரப்பு – இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை, சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம். இந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும். அப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.

இப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள், நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல். சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.

மேலும் ‘இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே’ எனவும் தலைவர் கூறியிருந்தார். எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.

தாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார். ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.

தாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும், குறிப்பாக ‘ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள், ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது, ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்’ என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும். தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது.

போராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை. அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.



26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள். எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் ‘எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்’ என்று கூறினார். தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.

சமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப் பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர். ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

ஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன. தாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது. தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச்சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது. கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.

தரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர். பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்ப்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர்.

பால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே, சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்;குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது. 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது. சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர்.



இத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா? அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா? என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும். சாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன்; குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு.

பால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்தித்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும்; சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது. தனது தளபதிகளிடம் கதைக்கும் போது |என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம், இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்| என்று பால்ராஜ் கூறினார்.

இத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன. அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல், மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை.

பொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவை, காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத்தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து), சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ்; அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான். அதிலிருந்து 75 மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், துருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் |வெலிகதற| எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

கட்டளைமையத்தில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்க, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி, நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும், எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார்.

இராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள், ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தினர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன. இரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது, திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான். இதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல, உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின்; நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார். அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி. இதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு. இறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம்.

எப்போதும்; போராளிகளின் உளவுரணை தனது உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி ‘எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்டதைக் காட்டிப்போட்டு விடவேணும்’ என்று கூறினார். அப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா? காயம், வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார்.

சிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது. இந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன. இறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.

இத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது ‘சண்டையென்றால் இதுதான் சண்டை, குளிக்க ஏலாது, சப்ளை இல்லை, வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே, வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும், காயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும், விமானம், ராங்கி, எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான், அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான செல்லடி, சண்டையும் அப்படித்தான். இன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம், 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம், சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம். மேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100 மீற்றர், 200 மீற்றர், சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர். இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம், சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்’ என்று கூறுவார்.

பால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார். அவருடன் நின்ற போராளிகள் ‘அவர் தூங்கிப் பார்த்ததில்லை, இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார். சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார். சண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்’ அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார்.

இத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ’40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி ‘பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்’ அத்துடன் ‘நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்’ என்றார். ஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர், இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில், தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும்.

இத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு, தமிழர்களின் வீரத்தின் குறியீடு, அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக்கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம்.

அபிஷேகா