Monday, May 6, 2013

ராஜீவின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், அன்று ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவின் படையினரை தூக்கில் போடவேண்டும் என்று குரல் கொடுக்காதது ஏன்?


ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்பவர்கள், ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட ராஜீவ் காந்தியின் தலைமையிலான போர்க்குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுத்து ஒற்றைக்காலில் நிற்காதது ஏன்?

தேவேந்திர பால் சிங் புல்லார் என்பவரின் வழக்கில் அவரது மரண தண்டனையை உறுதி செய்திருந்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். இத் தீர்ப்பு பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பல விவாதங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்படப் பேசு என்ற நிகழ்ச்சியில் இது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட ஜி.சி. சேகர் என்ற பத்திரிகையாளர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கப்படவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் தூக்குத் தண்டனை வழங்கவேண்டும், ராஜீவ் காந்தியின் கொலையின் போது உங்களின் குடும்பம் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று கூறுவீர்களா? பயங்கரவாத செயலில் ஈடுபடுவர்களுக்குத் தூக்குத் தண்டனை கண்டிப்பாக வழங்கவேண்டும் என்று புத்திபிசங்கிய நிலையில் புலம்பினார் ஜி.சி. சேகர். இவரைப் போன்றே வடவரின் அடிவருடிகளான தமிழக காங்கிரஸாரும் இன்னும் சிலரும் கூறிவருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடி அவர்களின் வயிற்றில் துப்பாக்கியினால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர் ராஜீவ் காந்தி அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரின் தலைமையிலான படையினர் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கரவாதப் போர்க்குற்றங்களுக்காக எத்தனை பேர் தூக்கில் போடப்பட்டார்கள் என்று ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரால் கூறமுடியுமா? ஈழத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ராஜீவ் காந்தியும் மற்றம் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டு தூக்கில் அவர்கள் போடப்பட்டார்களா? ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை துச்சமாகக் கருதிவிடமுடியுமா?

மஹிந்தவின் பாணியில் குற்றவாளிகளே தங்களின் போர்க்குற்றங்களை விசாரணை செய்துகொள்வதைப் போன்று அன்று இந்தியப் படை மேற்கொண்ட போர்க்குற்றங்களைத் தாங்களே விசாரணை செய்வோம் என்று கூறியவர்கள் எவருக்கும் சிறைத்தண்டனையோ அல்லது தூக்குத் தண்டனையோ ராஜீவ் காந்தியின் காலத்தில் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான கொலைகளும், நூற்றுக்கணக்கான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்காக எந்த விதமான விசாரணையும் எதிர்கொள்ளாமல் நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதிபதி என்று ராஜீவ் காந்தி உல்லாச வாழக்கையை வாழந்துகொண்டு இருந்தார். அவர் செய்த குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார், இதனைப் போன்ற கருத்தைத் தான் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரணை செய்த நீதிபதிகளும் கூறினார்கள், அதாவது இந்திய படையினர் ஈழத்தில் மேற்கொண்ட செயல்களின் பதிலடியாக ராஜீவ் காந்தியின் கொலை என்றார்கள். இதனைப் பற்றி சிந்தனை செய்யும் போது காசி ஆனந்தன் அவர்களின் கவிதை தான் ஞாபகம் வருகிறது

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

அதனைப் போன்று ராஜீவ் காந்தியின் கொலையல்ல, அது கொலை என்று சொல்லக்கூடாது, அது மரண தண்டனை, நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது இருந்திருந்தால் அவனே ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலையை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் அது குற்றம் என்று கொளத்தூர் மணி அவர்கள் அன்று முத்துகுமாரின் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தியின் தலைமையிலான படையினர் ஜி.சி. சேகர். மற்றும் தமிழக காங்கிரஸாரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடி விட்டு அவர்களின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்திருந்தால் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களா? அல்லது விலை மதிக்க முடியாத மாணிக்கமான ராஜீவ் காந்தியையும் அவரின் படையினரையும் மன்னித்துவிடுங்கள் என்று கூறுவார்களா?

அன்று புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தினை ஆரம்பித்த போது தயவுசெய்து சிங்களப் பேரினவாதிகளுக்குத் துணை செல்லாமல் உடனடியாக யுத்தத்தினை நிறுத்துங்கள் என்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் கோரியும் ராஜீவ் காந்தி அதனைப் புறக்கணித்துவிட்டு புலிகளை அழித்துவிட்டு பிரபாகரனின் தலையைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார், மேலும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு யுத்தத்திலும் தோல்வியடைந்தும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான சிறிய பட்டியல்தான் இது


21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்) படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை யுத்த ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.1987 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள். சுமார் 65 பொதுமக்கள்

அன்று வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு பெருமளவான ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சொல்லுங்கள் யார் குற்றவாளிகள்? குற்றம் செய்வதவரைத் தண்டித்தால் மட்டும் குற்றமா? அரசனுக்கு ஒரு நீதி குடிமக்களுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீதிவான்களே ராஜீவ் காந்தியின் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தக் குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? இவற்றைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு மறுக்கிறார்கள் அநீதிக்காரர்களான ஜி.சி. சேகர் போன்றவர்களும் மற்றும் தமிழகக் காங்கிரஸாரும். ராஜீவ் காந்தியின் உயிரை விட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களும், தமிழ் பெண்களின் மானமும் தாழ்தது அல்ல என்பதை தமிழீழத் தேசியத்தலைவர் உணர்த்தினார்.

ராஜீவ் காந்தி மிகப்பெரிய தலைவர் அவரைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும், அவரின் கொலையின் போது சிலர் கொல்லப்பட்டார்கள் அதனால் கொலை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பது போன்று தான் அன்று ராஜீவ் காந்தியின் பொன் உயிரைப் போன்று ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பொன் உயிர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தி முதல் ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று புலிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் அந்த எண்ணம் இருந்தது. காந்தி தேசமாகவும், நீதியை நிலைநாட்டும் தேசமாகவும் இந்தியா இருந்திருந்தால் ராஜீவ் காந்தியையும் அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளையும் முதலில் தூக்கில் போட்டிருந்தால் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்திருக்கமாட்டார்கள்.

தமிழர்களைக் கொன்று குவிக்கலாம் ஆனால் தமிழர்களைக் கொன்று குவிப்பவர்கள் தண்டிக்கப்படக் கூடாது, அவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது என்பதில் என்ன நீதி இருக்கிறது? என்ன தர்மம் இருக்கிறது? தமிழர்களின் உயிர்கள் இலவசமானது யார் வேண்டும் என்றாலும் சுட்டுப் பழகலாம், கொன்று குவிக்கலாம், பெண்களைக் கறிபழித்துக் கொலை செய்யலாம் இதற்கெல்லாம் நீதி விசாரணையோ அல்லது தண்டனையோ இவற்றுக்கில்லை என்று சிங்களவர்களும் வடவர்களும் நடந்துகொள்ளுகிறார்கள்.

ராஜீவ் காந்தியின் அரக்க ஆனமா சாந்தியடைவதற்கு பல லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் சோனியா காந்தி அது அடங்காமல் மூன்று உயிர்களைப் பலியெடுக்க நிற்கிறார். பேரறிவாளன், முருகன், சாந்தன், ஆகியவர்கள் ராஜீவ் காந்தியின் கொலையில் சம்பந்தமில்லாதவர்கள் அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அநீதியான சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்டு இன்று தூக்கில் போடுவதற்கு துடிக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள்.

ஈழத்தில் தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள், தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சிகளையும் கொடுத்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதனையும் தாக்குதல் நடத்தப்படுவதனையும் வேடிக்கைப் பார்க்கிறார்கள் வடவர்கள். மஹிந்தவை போர்க்குற்றவாளி என்று கூறி அவனை நீதிக்கு முன் கொண்டு சென்று விசாரணை செய்வதனை தடுக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நீதி, உரிமைகள் கிடைக்கப் பெறாமல் இருப்பதனை தொடர்ந்து தடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவனை நீதிக்கு முன் நிறுத்த முடியாது என்று மறுக்கிறார்கள். ஆனால் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கிறார்கள். காங்கிரஸாரே தமிழக மீனவர்களைக் கொன்று குவிப்பவர்களை உடனே தூக்கில் போடவேண்டும் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று உரக்க குரல் கொடுக்காதது ஏன்? வடவர்களும் சிங்களமும் தமிழர்களைக் கொன்று குவிப்பதில் ஒன்றாக ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

விஸ்வா