Monday, May 27, 2013

தர்மம் மீண்டும்…………


வந்தோரை வாழவைத்து
வீட்டிலே தூங்கவைத்து
வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம்

சண்டை என்று வந்தாலும்
சமாதானம் என்று சொன்னாலும்
சமனாக மதிப்பளித்து
இன்று போய் நாளை வா என
இன மானம் காத்த இனம்

உலக வரைபடத்தில்
யேசு கேட்டதை
காந்தி கனாக்கண்டதை
வள்ளுவன் சொன்னதை
அரங்கேற்றி அரசமைத்த இனம்

நரிக்குண நாட்டவனின்
நடிப்பில் மயங்கி
சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின்
பிடிக்குள் சிக்காது
செய் அல்லது செத்துமடியென
செய்து காட்டிய இனம்

முள்ளிவாய்க்காலில்
தன்னை தானே பெட்டியடித்து
சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன்
சொல்லிய செய்தி
கொன்றால் விடுதலை
விட்டாலும் அது தான்..

தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம்
இனி போராட்டம் உங்கள் கையில்
அவன் கை காட்டியது வெளியில்

எல்லாம் முடிந்தது
முட்டாள் என புலம்பித்திரிந்தவர் உளர்
நெஞ்சுக்குள் தீ

இனத்தை
மானத்தை
காப்பை
இழந்து நின்றது எம்மினம்

சீமான் எனும் ஒரு தம்பி மட்டும்
ஊருராய் அழுது திரிந்தான்
ஒன்றாக பத்தாக
நாம் தமிழராக மெல்ல வளர்ந்தான்
ஒரு ஒளி வீச்சு
கண்ணில் கண்டது எம்மினம்

ஒரு பொறி வெடித்ததுபோல்
மாணவர் வந்தார் எமைக்காக்க
தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது
அடித்த புயலில்
காங்கிரசு அழிய
அத்தனை கட்சிகளும் கண் திறக்க
அம்மா கொண்டு வந்தார்
தமிழீழ வாக்கெடுப்பு எனும்
எமது தாகத்துக்கான திறவு கோலை
இதற்காகத்தானே
இத்தனை வருடம் தவம் கிடந்தோம்

தமிழீழம் பிறக்கும்
அம்மாவையும்
தமிழகத்தையும் போற்றும்
வாழ்த்தும்
தமிழன் நிம்மதியாக தூங்கும் காலம் வெகுதூரமில்லை

தர்மம் வெல்லும்
அதில் மாவீரர் கனவு பலிக்கும்
நெஞ்சை நிமிர்த்தி எம் மாவீரர் மகிழும் காலம் விரைவில் வரும்.

கவிஞர்: விசுகு