
கண்ணியத்தின் காவலனே நீ வாழி
கண்ணிமை நீ எனக்காணம் விழிகள்
போற்றிடும் தேவனே நீ வாழி
எங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம்
காக்க வந்த சாமி நீ
வங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ
வீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ
தண்ணீருக்கும் தாகம் வந்தது இங்கு
தாய் நில நெய்தலுக்கும் காச்சல் வந்தது நொந்து
உப்பளத்து நிலம் தன்னை நீ செப்பனிட்டபோதும்
சிங்களத்து தீவு என்றே இன்னும் பொய்மைச்
சித்திரங்கள் முளைக்கிறது
எடுப்பார் கைப்பிள்ளையோ எம் தேசம்
உயிர் கொடுத்தேனும் பகை அறுத்தே குல வாழ்விற்கு தருவாய் தமிழீழம்
கொள்ளளவு ஈழத்திற்கு நாம் கொடுத்த விலையார் அறிவார்
கொள்ளுமிடம் கொள்ளாதளவில் முட்டுகின்ற
பகைமையை நீ அறிவாய்
நீதி சொல்ல வந்தவரோ பாதி முகம் காட்டி மூடிவிட்டார்
நிழல் யுத்தக் காலம் இதில் நீ இல்லை எனவும் சொல்லுகிறார்
நீதித் தராசை சமச்சீர் தூக்கும் தேவன் நீ
அறிந்தும் அறியாதவற்கும் அறிவொளிச் சுடரும் நீ
வாழிய வாழியவென வாழ்த்துகிறேன் உன்னை
காலத்தை வென்றவனே தமிழீழத்தையும் வெல்வாய் நீ.
கவிஞர்:வல்வை சுஜேன்
Monday, May 27, 2013
கண்ணியத்தின் காவலனே நீ வாழி
Monday, May 27, 2013
கவிதைகள்