நேற்றைய தினம் "உண்மையில் தமிழ் மக்களுக்காகவும், அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் இதயசுத்தியுடன் செயல்படுகிறாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள்?" என்று எழுதியிருந்தேன் - https://www.facebook.com/photo.php?fbid=193344670819567 (இதனைப் படியுங்கள்).
இதனைத் தொடர்ந்து தூங்கிக் கிடந்த கேபியின் கூலிகளுக்கு மாரடிக்கும் கும்பல்கள் தங்களின் இணையத்தளங்களில் சில கதைகளை எழுதிப்போட்டிருந்தார்கள்.
அதில் ராதிகா அவர்களுக்கு குயின்ஸ் பார்க் முன்றலில் நடந்த கனடியத் தமிழர் தேசிய அவையின் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் செல்லவில்லை என்று நாடுகடந்த அரசின் ஆதரவு இணையத்தளங்களில் நேற்றைய தினம் செய்திகளை வெளியிட்டிருந்தன.
அதாவது நான் கனடாவில் குயின்ஸ் பார்க் முன்றலில் இடம்பெற்ற மே-18 தமிழினப்படுகொலை நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கரங்கோர்த்து நின்ற நிகழ்வில் கலந்துகொள்ளாத ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் 100 பேருக்கும் குறைவானவர்கள் கொண்ட போட்டி மே-18 நிகழ்வில் கலந்துகொண்ட இவர் எவ்வாறு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்கப்போகிறார்? பிரித்து துண்டாடலுக்கு துணைபோகிறவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்கப்போகிறார்கள்? ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் கரங்கோர்த்து மே-18 தமிழினப்படுகொலை நாளில் அஞ்சலி செலுத்த முடியாமல் பணமுதலைகளின் பக்கம் நின்று நான் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என்று யாருக்காக இவர் கூறுகிறார்? தமிழ் மக்களை ஏமாற்றும் சதித்திட்டங்களில் இறங்கிவிட்டாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் என்று பல கேள்விகளை எழுப்பிய பின்னர் நாடுகடந்த அரசின் கைக்கூலிகளின் இணையத்தளங்களில் அதற்குரிய சில கதைகளைப் போட்டிருந்தார்கள்.
ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் கனடியத் தமிழர் தேசிய அவையின் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்பது தொடர்பாக அந்த அமைப்பினரே பதில் கூறவேண்டும். சில நேரங்களில் நாடு கடந்த அரசின் ஆதரவு இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பாக இவ்வாறு கூறலாம். ஆனால் நான் எழுப்பிய மிகமுக்கியமான கேள்விகளுக்கு விடைகள் வழங்கப்படவில்லை. அதாவது மே-18 நாளை இனவழிப்பு நாள் அல்லது இனப்படுகொலை நாள் என்று எதற்காக ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் கூறவில்லை? மற்றும் துக்க நாள் என்று நாடுகடந்த அரசு மே-18 நாளை கூறுவது போன்று ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் அதில் கூறினார். அதாவது தன்னை நாடுகடந்த அரசின் ஆதரவாளர் என்று காட்டிக்கொண்டாரே தவிர தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், அவர்களில் ஒருவராகவும், தமிழ் மக்களுடன் கரங்கோர்த்து நிற்பவராகவும் இவர் இருந்திருந்தால் இனவழிப்பு நாள் அல்லது இனப்படுகொலை நாள் என்ற சொற்களை கூறியிருப்பார். தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என்று போட்டி மே-18 நிகழ்வில் கலந்துகொண்ட இவர் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் இவர் கரங்கோர்த்து நின்றது பிரித்து துண்டாடி குழப்பம் விளைவிற்கும் சக்திகளான கேபியின் நாடுகடந்த அராசங்கத்தினருடன் தான். அதனாலேயே தமிழ் மக்களினால் மே-18 நாளை இனப்படுகொலை நாள் என்று கூறிவருகின்ற நிலையில் அதனை மறுத்து நாடுகடந்த அரசு கூவுவது போன்று கூவியிருக்கிறார் ராதிகா சிற்சபைஈசன்.
இப்படியான நிலையில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என்று ஊரை ஏமாற்றுகிறாரா? தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் இனப்படுகொலை நாள் என்று கூறமுடியாமல் நாடுகடந்த அரசின் கூலிக்கு மாரடிக்கும் விதமாக துக்க நாள் என்று கூறுகிறாரா? கனடாவில் தமிழ் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள் ராதிகா சிற்சபைஈசன் அவர்களை. ஆனால் அவர் இனப்படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறமுடியாதவராக இருக்கிறார் அதற்கு காரணமாகவும் தடையாகவும் இவருக்கு இருப்பது அவரின் அமைப்புச் சார்பான நடவடிக்கையே.
ராதிகா சிற்சபைஈசன் கனடிய அரசிடமும், சர்வதேச சமூகத்திடமும் ஈழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறுவாரா? அல்லது அது ஒரு துக்க நிகழ்வு என்று கூறுவாரா? இதற்காகவா தமிழ் மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள்? கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள் இந்த உண்மைகளைக் கூறினால் உடனே துள்ளிக்குதித்துகொண்டு இவற்றைத் திசைதிருப்பி மூடிமறைக்கும் தந்திரத்தில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறான செயல்பாடுகளில் தான் கனடாவில் உள்ள குருவி என்ற இணையத்தளம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
எதிரி எங்கள் மொழியே பேசுவான் எங்களுடனேயே உண்பான். உறங்குவான், உறவாடுவான் மொத்தத்தில் எங்களின் ஒருவனாகவே இருப்பான் எங்களை விட தமிழீழத்தை ஆதரிப்பவன் போல் நடிப்பான் சிறுகச் சிறுக எமக்கு நஞ்சூட்டுவான் கருத்துக்களில் முரண்பட்டவனாகவும் மாறுபட்ட அமைப்புக்களை ஆதரிப்பவனாகவும் மீண்டும் மீண்டும் பொய்யைக் கூறி அதை உண்மை போல ஆக்க முயற்சிப்பான் அவன் குருவியின் வடிவிலும் இருப்பான்.
மேலும் மே-18 தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் என்று ராதிகா சிற்சபைஈசன் கூறியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக யார் போராடியவர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களை இழந்த நாளில் அவர்களது தமிழீழ சாசனத்தைக் தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு புதிய சாசனம் உருவாக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் உண்மையில் சுதந்திரப் போராட்டத்தையும் அதில் ஈடுபட்டவர்களையும் நேசிப்பவர்கள் என்று கூறலாமா? உண்மையில் அதிஉன்னத அர்பணிப்புகளில் ஈடுபட்டவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களை இழிவு படுத்துவதற்கும் அவர்கள் இழந்த நாளில் அவர்களின் உண்மையான தமிழீழ சாசனத்தைக் தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு கேபியின் சிந்தனையில் உருவெடுத்த புதிய சாசனத்தை அந்த நாளில் வெளியிடுவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும். அதற்குத் துணை செல்வது அதனைவிட மகா துரோகமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் புலம்பெயர் நாடுகளில் ஒன்றிணைந்த ஒரே நிகழ்வுகளாகத் தான் பல நிகழ்வுகள் நடைபெற்றன ஆனால புலிகள் இல்லையென்று கரு்திக்கொண்ட சிங்களக் கைக்கூலிகள் புதிய அமைப்புக்களை உருவாக்கி புலம்பெயர் நாடுகளில் குழப்புவதற்கான போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவருகிறார்கள். அதற்குத் தீயவர்கள் பிழைப்பிற்காகத் துணை செல்லுகிறார்கள்.
கனடாவில் உள்ள கேபியின் மருமகன் இன்று நாடுகடந்த அரசில் முக்கிய பொறுப்பில் அங்கம்வகிக்கிறார். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள்?
"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்" கேபியின் கும்பல்களைப் பற்றிக் கூறினால் உடனே அவர்களின் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள் அவர்களின் மீதுள்ள பழியை மறைப்பதற்கு கூறும் வாக்கியமாக இது மாறிவருகிறது. முதலில் இவர்கள் பணம் பெரிது, சுகபோக வாழ்க்கை பெரிது என்று வாழாமல் தமிழினம் பெரிது, தமிழீழம் பெரிது என்று வாழ்வார்களா? அப்படியானவர்களாக இவர்கள் இருந்தால் ஒன்றரை லட்சம் மக்கள் அழிவினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போட்டி நிகழ்வுகளையும், குழப்பும் வேலைகளிலும் ஈடுபடுவார்களா?
தமிழர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழரின் உரிமைக்காகப் போராட வேண்டும் ஆனால் ஒன்றிணைவோம் என்ற அழைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழரின் நலனுக்கு எதிராகவும் எதிரிகளிடம் சரணடைவதற்கான செயல்பாடுகளாகவும் இருந்துவிடக்கூடாது. "நீங்கள் எனது இனத்திற்கு எதிரியாகவும் துரோகியாகவும் இருந்து பாருங்கள் அப்போது தெரியும் எனது கோபம்" என்று தமிழீழத் தேசியத்தலைவர் கூறுவார். இது அவரின் தமிழினத்தின் மீதுள்ள பற்றைத் தான் காட்டிநிற்கிறது. அவ்வாறு தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் தான் ஒவ்வொரு தமிழர்களும் பயணிக்க வேண்டும். அவ்வாறான பாதையைப் பின்பற்றினால் தான் தமிழின விரோதச் சக்திகளின் வலையில் சிக்கிவிடாமல் தமிழீழப் போராட்டத்தைக் கொண்டு செல்லமுடியும்.
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை, அதனை உலகம் அங்கீகரிக்கச் செய்வதற்கான தீவிரப் பணியிலும், தமிழீழ நாட்டிற்கான வாக்கெடுப்பு இலங்கையில் நடைபெற வேண்டும் என்பதனையும் வலியுறுத்த வேண்டிய பொறுப்பிலும் கடமையிலும் இருந்து ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் விலகிச் சென்றுவிடக்கூடாது. அவற்றில் இருந்து தவறிச் சென்று அமைப்புகளின் பிழையான வழிநடத்தலின் கீழ் அவர் சென்றுவிடக் கூடாது.
விஸ்வா
