Monday, May 6, 2013

தமிழீழப் போராட்டத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசிப்பவர்களுக்கு முதலில் அவற்றைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும்



நான் தலைவனாக இருக்க வேண்டும், நான் தான் ஆளவேண்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழீழத் தேசியத் தலைவர் புலிகள் அமைப்பை உருவாக்கிப் போராடினார் என்றும், சகபோராளி அமைப்புகளையும் அழித்தார் என்றும் சிங்கள அரசுடன் இணைந்து செயல்படும் சிங்களக் கைகூலிகளும், இந்தியாவில் உள்ள வடவர் அடிவருடிகளும் நிண்டகாலமாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.

நான் தான் ஆள வேண்டும், சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணங்கள் தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்திருந்தால் 1987ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலேயே வடக்கு-கிழக்கிற்கு முதலமைச்சராகியிருப்பார். அதாவது இந்தியப் படையினர் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களுடன் ஒட்டுக்குழுக்களாக இணைந்திருந்தவர்களும், அதனைப் போன்று சிங்களப் படையினருடன் ஒட்டுக்குழுவினராகவும் இணைந்திருந்தவர்களையும் அழித்தொழித்து தான் மட்டுமே ஆள வேண்டும் என்ற எண்ணம் தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்திருந்தால் அவர் இந்திய அரசுடனும், சிங்கள அரசுடனும் இணைந்திருந்தால் தமிழினத் துரோகிகளான ஒட்டுக்குழுவினரை மட்டுமல்ல அவர்களின் வம்சத்தையும் அழித்து வடக்கு-கிழக்கிற்கு முதலமைச்சராகியிருப்பாரே?

சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் இருந்த போது தமிழீழத் தேசியத் தலைவர் இணங்கினால் தான் அவரை பிரதமர் ஆக்குவதற்க்கு நான் தயாராக உள்ளேன் என்று கூறினார். ஆனால் தமிழீழத் தேசியத் தலைவர் இதனால் நமது இனத்திற்கு என்ன நன்மை கிடைக்க போகிறது என்று மட்டுமே சிந்தனையாகக் கொண்டு செயல்பட்டு தமிழ் மக்களுக்காக தன்னை அர்பணித்தும், கொண்ட கொள்கைக்காக இறுதிவரைப் போராடியவர் தான் தமிழினத்தின் உயரிய தலைவரான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.

சகபோராளி அமைப்புகளை புலிகள் அழித்தார்கள் என்று ஈழ வரலாற்றை அறியாமல் தமிழகத்தில் உள்ள வடவரின் அடிவருடிகள் நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துகொண்டு வருகிறார்கள். எக்காலகட்டத்தில் சகபோராளி அமைப்புக்களை புலிகள் அழித்தார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியுமா? சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக சகபோராளி அமைப்புக்களுடன் புலிகள் இணைந்து போராடிய காலப்பகுதியில் சகபோராளி அமைப்புகளில் உள்ள எவரையும் புலிகள் கொலை செய்யவில்லை. அதன்பின்னர் இந்திய இராணுவத்துடன் புலிகளுடன் இணைந்திருந்த சகபோராளி அமைப்புகள் பதவிகளுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் இணைந்து கொண்டார்கள். அதாவது சகபோராளி அமைப்புகளாக செயல்பட்டவர்கள் இந்திய இலங்கை அரசுகளின் ஒட்டுக்குழுவினராக மாறினார்கள்.

இந்திய அரசின் படையினருடன் இணைந்து புலிகளையும், புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் மற்றும் அப்பாவித் தமிழர்களையும் கொலை செய்து காட்டிக் கொடுப்பிலும் ஈடுபட்டார்கள் சகபோராளி அமைப்புகளாக இருந்து ஒட்டுக்குழுவினராக மாறியவர்கள், இவர்கள் தமிழினத் துரோகிகளாக மாறியமையினால் இவர்களைத் தமிழ் மக்களும் தமிழினத் துரோகி என்று கூற ஆரம்பித்தார்கள். இந்திய படையினருடன் இணைந்து தமிழினத்திற்கு எதிராக செயல்பட்டமையினால் தான் சகபோராளி அமைப்புக்களாக இருந்து ஒட்டுக்குழுவினராக மாறியவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற மிகப்பெரிய உண்மையைத் தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் போல இருக்கிறார்கள், இன்னும் சிலர் இவற்றை உணரவும் மறுக்கிறார்கள், அதனை போன்று சிலர் தங்களின் சுயலாபத்திற்காக புலிகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முதுகெலுபில்லாத, வடவரிடம் நக்கி பிழைக்கும் அடிவருடிகள் குற்றம்சாட்டி அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.

தற்போது ஈ.பி.டி.பியின் டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களின் அமைப்புக்களை சகபோராளி அமைப்புக்கள் என்று கூறலாமா? அவர்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டால் சகபோராளி அமைப்பினரை புலிகள் கொன்றுவிட்டார்கள் என்று கூறுவது சரியான வாதமாக கருதமுடியுமா? தமிழினத் துரோகிகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மூடிமறைத்து அவர்களை சகபோராளிகள் என்று புனிதப்படுத்தி அவர்களைப் புலிகள் கொலை செய்துவிட்டார்கள் என்று வடவர் அடிவருடிகள் நீண்டகாலமாகத் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும், இன்னும் சிலரும் கியூபா நாட்டு புரட்சியாளர்களையும் மற்றைய நாட்டுப் புரட்சியாளர்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு புலிகளைப் பற்றி அவதூறாகப் பேசிவருகிறார்கள், புலிகளின் வரலாற்றைத் துரோகிகளிடம் இருந்து கேட்டுப்படித்தால் உண்மைகளை அறியமுடியாமல் தான் இருக்கும். அதி உன்னத அர்ப்பணிப்புகளையும், உயரிய நல்லொழுக்க கட்டுப்பாடுகளையும், புனித போராட்டத்தையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான போராட்டத்தையும், அவர்களைப் போன்ற போராளிகளையும் இவ்வுலகில் எங்கும் காணமுடியாது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திரப் போராட்டத்தினை தூற்றும் மூடர்கள் சிலர் உண்டு.

கிட்லரை விடக் கொடியவர்களான சிங்களப் பேரினவாதிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திரப் போராட்டத்தின் நியாயத்தை சில நாடுகள் உணரமறத்து உண்மையான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிவர்களைப் பயங்கரவாதிகள் என்று சுயநலப் பார்வை கொண்ட நாடுகள் தடைசெய்தன. அவ்வாறான நேர்மையற்ற, அநீதிக்கு துணை சென்ற நாடுகளே ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் அழிவிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க மறுத்தும், அவற்றை மறைத்தும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் காப்பாற்றுகின்றன, தொடர்ந்து ஒரு பக்கச்சார்பாக, தனது நலத்திற்காக சிங்களப் பயங்கரவாதத்திற்கு துணை சென்று கொண்டிருக்கும் நாடுகள் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று தடை செய்வதனால் புலிகள் உண்மையில் பயங்கரவாதிகள் என்று கருதிவிட முடியாது. புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறும் அநீதியை ஆதரிக்கும் நாடுகளின் தீர்ப்பு கொன்று குவித்தவனே நீதி விசாரணை நடத்தட்டும் என்பதாகும்.

சிலர் சிங்களப் பேரினவாதிகளுடன் இணைந்து செயல்படும் ஒட்டுக்குழுவினரின் விசமத்தனமான விமர்சனங்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சூரியனைப் போன்றவர் அவரைப் பற்றி தமிழினத் துரோகிகள் பல உண்மைகளை மறைத்து, அவதூறாக விமர்சனம் செய்வது என்பது சூரியனைப் பார்த்து நாய்கள் குரைப்பது போன்றதுதான்.

விஸ்வா