
ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கருணாநிதி அவர்கள் தற்போது என்ன சிவாஜி செத்துவிட்டாரா? என்ற மறதி சினிமா நாயகன் போன்று ஈழத்தில் தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டார்கள் என்ற விடயம் தற்போது தான் கருணாநிதி அவர்களின் அறிவிற்கு எட்டியிருக்கிறது போல? தேர்தல் நெருங்கும் நிலையில் தான் கருணாநிதி அவர்களுக்கு போலி ஞானம் பிறப்பது வழக்கமாகும்.
காங்கிரஸில் இருந்து விலகிவிட்டால் கருணாநிதி அவர்கள் தமிழினத்திற்கு செய்த கெடுதல்களை தமிழர்கள் மறந்துவிடுவார்களா? அன்று இறுதியுத்தத்தின் போது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக தனது பதவிகளில் இருந்து விலகாமல் தொடர்ந்து இணைந்துகொண்டு தான் இருந்தது, இன்று அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியிருந்தால் தமிழினம் அழிக்கப்பட்டதை எப்படி நிறுத்தியிருக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறி தங்களின் மிகப்பெரிய தவறை மறைக்க முனைகிறார்கள். திமுகா விலகியிருந்தால் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்திருக்காது, தமிழக வழியாகவும் இந்தியாவின் எனையபகுதிகளின் வழியாகவும் சிங்கள அரசிற்கு ஆயுதம் கிடைத்திருக்காது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்திய அரசு காட்டுக் கொடுத்து அழிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றிருக்காது. இவ்வாறு பல சம்பவங்கள் தமிழினத்திற்கு எதிராக அன்று நடைபெற்றிருக்காது. புலிகளை முடமாக்கி தமிழின அழிவிற்குத் துணை நின்றார் கருணாநிதி அவர்கள். இதனால் ஈழத்தில் தமிழினமே இல்லாமல் போகின்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார் கருணாநிதி அவர்கள்.
கருணாநிதி என்ற விசப்பாம்பு அமைதியாக முடங்கிக் கிடைக்கிறது ஆனால் பதவியும் அதிகாரமும் கிடைத்தால் அன்று (2009) அவர் எப்படியிருந்தாரோ அப்படி மறுபடியும் அவர் நிலை மாறலாம். ஆகையால் கருநாகமான கருணாநிதியிடம் தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும். பதவி, குடும்பம், சுகபோக வாழ்க்கை இவற்றில் மட்டுமே கருணாநிதி அவர்களுக்கு நாட்டமே தவிர தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை அவருக்கு இல்லை.
கடந்த நான்கு வருடங்களில் திமுக நடந்துகொண்டதைப் பற்றிப் பேசக் கூடாது, நாங்கள் காங்கிரஸில் இருந்து விலகி உத்தமர்களாக ஆகிவிட்டோம் என்று திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். நிண்டகாலமாக ஏமாற்றி திருடி வந்த திருடன் திடீர் என்று ஒருநாள் ஞானம் பிறந்து அதனால் புனிதனாக ஆகிவிட்டேன் என்று கூறினால் உலகம் நம்பிவிடாது, பொய்பித்தலாட்டங்களில் ஈடுபடாமல் உண்மையின் வழியில் இதயசுத்தியுடன் தமிழரின் நலனுக்காக பாடுபட்டால் தான் தமிழினத்திற்கு திமுகாவின் மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியாது தான், கருணாநிதி அவர்களின் குடும்பம் திமுகாவில் ஆட்சி செய்யும் வரை அது நடக்காது தான்.
தற்போது கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலினை CBI விரைவில் கைதுசெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஸ்டாலினை மாட்டிவிடுவதற்காக காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதற்கு அழகிரி திட்டம் தீட்டுகிறார். தமிழின அழிவிற்கு துணையிருந்த கருணாநிதியின் குடும்பதை உள்ளே தூக்கிப்போடும் செயலில் சோனியா இறங்கியுள்ளார். கருணாநிதி கூறுவது போல அவருக்கு கூடாதார் நட்பு கேடாய் விழைந்திருக்கிறது. காங்கிரஸுடன் இணைந்திருந்தால் தனது குடும்பத்திற்கு வரவிருக்கும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்திருக்குமே ஆனால் தற்போது கூட்டணியில் இருந்து விலகிவிட்டோமே என்று ஆதங்கத்தின் காரணமாக கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? என்று சுயநலத்துடன் கூறுகிறார் கருணாநிதி. மறுபடியும் காங்கிரஸுடன் இணைவதற்கு கருணாநிதி அவர்களுக்கு ஆசை தான் ஆனால் ரொம்பவே கேவலமானவர் என்று தமிழ் மக்கள் தன்னைக் கருதிவிடுவார்கள் மற்றும் கட்சியில் உள்ளவர்களும் பொறுக்க முடியாமல் காறி துப்பிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற எண்ணமும் கருணாநிதி அவர்களிடம் உள்ளது.
விஸ்வா