வீரனே
வியக்கிறேன்
உன் விதி கண்டு
பிறக்கும் போதே
எழுதி வைத்தானா
நீ எம் விடியலுக்காய்
விழப்போகும் விதை என்று
சொல் வீரனே
பச்சிளம் குழந்தையிலே
என்னைப்போல் நீயும்
தாய்ப்பால் தானே
உண்டாய்
எனக்கு வராத
விதி உனக்கேன்
எனக்கு வராத
அந்த புரட்சி தீ
உனக்குள் யார் மூட்டினர்
சொல் வீரனே
வியக்கிறேன் உன் விதி கண்டு
பள்ளி பருவத்திலே
எவர் மேல் கொண்டாய்
காதல்
இளம் கன்னியர் மீதா
இல்லை இந்த ஈழ
தாயின் மீதா
சொல் வீரனே
உன் சின்ன சின்ன
ஆசைகள்
என்னவென்று
உன் கல்லறை வாசல்
தட்டி கேட்டு
அத்தனையும் உனக்கு
நான் செய்ய வேண்டும்
சொல் வீரனே
உனக்கு பிடித்த
பூ கார்த்திகை பூவா
அதனால் தான்
எனக்கு கிடைக்காத
அந்த மாவீர
பிறப்பை நீ
எடுத்து கொண்டாயா
சொல் வீரனே
உன் விதி கண்டு
வியர்கிறேன்
வீரனே
உனக்குள்ளேயும்
ஆசைகள் ஆயிரம்
இருந்திருக்கும்
ஆனாலும் அந்த
ஆசைகளுக்கெல்லாம்
தீ மூட்டி
அணையாத விடுதலை
தீயாய் உன் கண்ணில்
பற்ற வைத்து நின்றயே
உன்னை நினைத்தாலே
உடம்பில் உரம்
ஏறும்
என் ஆசை,
நான் உன் கல்லறை
தொழுது, அழுது
சொல்லி வைக்கிறேன்
வீரனே
அடுத்து ஒரு
ஜென்மம் வந்தால்
அன்னையாய் உன்னை
நான் தாங்க
வேண்டும்
அப்படி ஒரு ஜென்மம்
இல்லாமல் போனால்
நான் என்றுமே
பிறவாமல் வேண்டும்..
பூங்காற்றே
பூங்காற்றே
பூவிடம் நீ சொல்லு
போராடி விழுந்தானே
அவன் கல்லறை சேர் என்று
கவிஞர்:ஈழமகள்