வில்லாண்ட பரம்பரையின் விழுதாக அவதரித்து
தமிழினத்தைத் தலைநிமிரவைத்த தாயகனே நாயகனே
வரலாற்றை வளமாக்கித் தமிழ் காக்க வந்தவனே
பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
விலங்கு சுமந்து விலங்காக நாமலைந்து
கல்லாகிக் கல்லாக நாமிருந்த வேளையிலே
வீச்சாகி எம்மினத்தை விடியவைத்த நாயகனே
பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
தேசியத்தை வலுவூட்டி தேசமதைப் படைப்பவனே
நாதியற்று நடை பிணமாய் நாமிருந்த காலமதில்
சோதியாய் வந்தெங்கள் ஆதியை மீட்டவனே
பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
வரலாறு இல்லாத மாந்தர்களாய் நாமிருக்க
வரலாற்றைப் படைத்தெங்கள் வாழ்வை அமைத்தவனே
வாழ்ந்த காலத்தில் வாழ்கின்ற பேறு பெற்றோம்
பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
வில்லாண்ட பரம்பரையின் வீழ்ச்சியின் பின்னாலே
சொல்லாண்டு வாழ்ந்தவராய் நாமிருந்த வேளையிலே
செயல் கொண்ட வீரனது நிழல்பட்டு நாமெழுந்தோம்
பல்லாண்டு பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
கவிஞர்:மா.பாஸ்கரன்
Thursday, May 30, 2013
பல்லாண்டு பாடுகின்றோம் எம்தலைவா !
Thursday, May 30, 2013
கவிதைகள்