உக்கி போன உடலிலிருந்து,
ஓர் உயிர்- தன்னினத்துக்கு
நடந்ததை எண்ணிப்பார்கிறது.
ஈழத்தீவில்!
மே இரண்டாயிரத்து ஒன்பதில்,
கொலைவெறியாட்ட அரங்கேற்றம்.
அங்கே!
ஆசிரியராக கோத்தபாய,
ஆட்டநாயகனாக சரத்பொன்சேகா,
நாடகத்தில் நடந்தவைகள் ஏராளம்.
மரணவெறி ஆட்டத்தில்- மரணித்துப்போன,
தாயின்!
வறண்ட மார்பை தன் பிஞ்சுக்கைகளால்,
பற்றியிழுத்தபடி பச்சிளங்குழந்தைகள்.
பாலுக்காக அழுததா?
இல்லை,
தாய் பாசத்துக்காக அழுததா?
ஒருபுறம் பல்கணை ஆயுதங்கள்,
பட்டினிச்சாவு மறுபுறம்,
பிணம்தின்னும்
பேய்களும் கற்பைப்பறிக்கும் காடையர்களும்.
தன்னைகாப்பாற்ற,
சிதறியோடிய தன்னினம்- சீறிப்போன
குண்டுகளுக்கிரையானாது.
கரிந்துபோன காடுகள்,
அதற்குள்!
கருகிப்போன பிணங்கள்.
பாரெங்கும் ஓங்கியொலித்த தமிழரின்குரல்,
பாதைகளில் கசிந்த- அவர்களின்
பாதரத்தம். பார்த்திருந்து
கைகொட்டியபாரததேசம்!
வன்னிமண்ணில் குண்டுமழை ,
முள்ளிவாய்க்காலில் இரத்தவெள்ளம்,
தட்டுகளுடன் குழந்தைகள்,
தள்ளிநின்ற சர்வதேசம்.
வீதிகளில் சனங்கள் ,
வீடுகளில் பிணங்கள் ,
காடுகளில் கர்ப்பிணி தாய்கள்,
காதுகளில் கன்னியர்கள் கதறல்,
பிரசவத்துகாய் காத்திருந்த தாய்.
அவள் !
தொப்பிளை அறுத்து,
ஈழத்தாய்மடி தொட்ட குழந்தையின் அவலம்.
விழுப்புண்ணுடன் வீரத்தமிழன்,
வைத்தியம் பார்த்த ஈக்கள்,
வீரமரணமாகிய தமிழ் இளஞர்கள் .
இன விடுதலைக்காய்!
உயிர்த்தியாகம் செய்த முத்து,
இன்னும் எத்தனையோ ?
மண்ணுக்குள் புதைந்த தமிழினத்தின் சோகங்கள்,
நான்காண்டு கடந்தும் தன் நெஞ்சத்திரையில்,
ஒளிப்பதிவாய் ஓடுவதைக்கண்டு,
ஓர் மூலையில்,
உட்கார்ந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது.
உக்கிப்போன
உடலிலிருந்து-ஓர்!
உயிர்...
சுவி