தமிழகம் என் தாய் வழி உறவடா…!!!
தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா…!!
வேண்டாம் இந்த தீக்குளிப்பு
போதும் இதுவரை கண்ட இழப்பு
இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!!
முத்துக்குமார் இட்ட தீயை - உன்
நெஞ்சினில் ஏந்து
உன் மேனியில் அல்ல..!!!
உன் மேனியில் இட்ட தீ
ஒரு வீரத்தமிழனை அழிக்கும்…
உன் கண்களில் தீயை வை
உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது
ஆயிரம் தமிழனை வாழவைக்கும்.
உயிரை விடாதே உன் உணர்வை தா…!!!
என் சகோதரா
தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல…!!!
நில்
சிந்தனையில் தீ வை…!!!
உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல…!!!
கவிஞர்: தமிழ்ப்பொடியன்