குற்றம் செய்யும் கொற்றவனே
மற்றவர் மேல் வீண்பழி சுமத்தி
தமிழனைஅடிக்க தடி கேட்டாய் நீ
தடியும் தந்து கிபீரும் தந்த உலகு
உனக்கே கிலியும் தரும் என்று
நீ நினைக்கலையே அன்று
சிறுபாண்மை என எமை இழிந்து
சிறையிட்டு சிதையிட்டு சிரித்து
இன அழிப்பு கொழுப்பு மிகையில்
பேரினம் என்ற மமதை உனக்கும்
நீ எமக்கிளைத்த தீங்குதானே பயங்கரவாதம்
வெட்ட வெட்ட கிளம்புது பார் ஆதார பூதம்
உரிமை ஜோதிக்கு குருதி வார்த்து
உயிரை திரியாய் ஏத்தினோம்
உலகெலாம் ஓடி ஓடி பயங்கரவாதம் என
பச்சை குத்தினாய் எம்மேல்
வெள்ளை கதர் மேனியனே
துண்டுச் சிகப்பு மாலையனே
அச்சம் கொள்கிறாய் இன்று
ஆணவத் தேர் நிறுத்தி
நீ நடந்த தடங்களின் கீழ்
தமிழனின் பிணக்குன்றும் குளியும் என்று
உன் பாதம் அறியும்போது உலகறியாதோ
தேசியம் என்பது எல்லோருக்கும் பொது
தேய்ந்தாலும் பிறைபோல் பூரணமாகும் அது
நீதிக்கான போர் எமதென கண்டுகொண்டது உலகு
பொய்யுரைத்த உன்னை மெய்யுரைக்க அழைக்க
அஞ்ஞானத்தில் அறிவை ஒளித்து
அனைத்துலகுமே புலி என்கிறாய் நீ
எலி அல்லவா நீ
உலகம் உன்னிடம் தந்த தடி
உன்னை அடிக்கத்தான் என்பதை இன்றறிந்தாய்
சுயநிர்ணயம் சுதந்திரத்தின் அழகு
மகிந்த சிந்தனை மகாவம்சத்தின் மரண விரிப்பு
கவிஞர் - வல்வை சுஜேன்