தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட கேணல் வசந்தன் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாககொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாடாளனாகவும் பாதுகாப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.
பின்னர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகிருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாகப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய கேணல் வசந்தன் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.
இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணி தொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார்.
தமிழீத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார்.
எல்லாளன் முழுநீளத்திரைப்படம்
மேலும் இதே காலத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து வீரமறவர்களுக்கும் வீரவணக்கங்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.