உலர் நிலமாய் கிடந்த
எமது ஈழ மண்ணின்
விடுதலையில்
பெருமழையாய்
பொழிந்து நின்றவன்.
ஆழ்க்கடலில்
அழுந்தி கிடந்த
எங்கள்
விடுதலை உணர்வை
ஆழிப்பேரலையாய்
வெளிக்கொணர்ந்தவன்.
சிணுங்கிப் பேசிய
எங்கள் விடுதலையை
சீறி நின்று
பேசச் சொன்னவன்.
பிணங்களை எல்லாம்
விதைகளாக்கி
எங்கள் விடுதலையை
உறுதி செய்தவன்.
குருதியைக் கொண்டு
வேரில் வார்த்து
எங்கள் வேகத்தை
துரிதப்படுத்தியவன்.
அடிமை என்பது
எமது மனங்களில் இருந்து
அடங்கிப்போனது
அவனின் தலைமையில்.
செல்வாவின்
தென்றல் மொழி
புரியாதவனுக்கு
புயலின்
பேரிரைச்சலாய்
பதிலுரைத்தவன்.
தமிழர்களுக்கு
அவன் கிழக்கு திசை.
அகிலமே ஓரணியில்.
அனைத்தையுமே
முறியடித்தவன்.
அவனால் தமிழீழம்
அமையால் போகுமோ!
கவிஞர்: கண்மணி