Wednesday, May 22, 2013

உண்மையில் தமிழ் மக்களுக்காகவும், அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் இதயசுத்தியுடன் செயல்படுகிறாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள்?


மே-18 தமிழினப்படுகொலை நாள், அந்த நாளில் நாம் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்த வேண்டிய நாளாகும், ஆனால் சில கயவர்கள் அந்த நாளில் கூட ஒற்றுமையுடன் செயல்படாமல் இருக்கிறார்கள். போட்டி மாவீரர் நாளை ஏற்பாடு செய்து மாவீரர் நாளை இரண்டாக உடைக்கச் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தியவர்கள் நாடு கடந்த அரசாங்கத்தினர்.

மே-18 நாளில் உலகமெங்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. வழக்கம் போலவே கேபியின் கும்பலான நாடு கடந்த அரசாங்கத்தினர் கனடாவில் போட்டி மே-18 நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் 100 பேரும் கலந்துகொள்ளாத நிகழ்வாக அது நடைபெற்றது. மேலும் 100 பேருக்கும் குறைவானவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் பெரும்பாலானவர்கள் நாடு கடந்த அரசின் உறவினர்களாக இருந்தார்கள். அதேநேரம் கனடாவில் குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் அதில் கலந்துகொள்ளாத கனேடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் நாடு கடந்த அரசின் போட்டி மே-18 நிகழ்விற்கு கலந்துகொண்டார்.

100 பேருக்கும் குறைந்த நபர்கள் கொண்ட அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என்றார். மேலும் இனப்படுகொலை நாள் அல்லது இனவழிப்பு நாள் என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் துக்க நாள் என்று நாடு கடந்த அரசு மே-18 நாளை கூறுவது போன்று அவரும் கூறினார்.

கனடாவில் குயின்ஸ் பார்க் முன்றலில் இடம்பெற்ற மே-18 தமிழினப்படுகொலை நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கரங்கோர்த்து நின்ற நிகழ்வில் கலந்துகொள்ளாத ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் 100 பேருக்கும் குறைவானவர்கள் கொண்ட போட்டி மே-18 நிகழ்வில் கலந்துகொண்ட இவர் எவ்வாறு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்கப்போகிறார்? பிரித்து துண்டாடலுக்கு துணைபோகிறவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்கப்போகிறார்கள்? ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் கரங்கோர்த்து மே-18 தமிழினப்படுகொலை நாளில் அஞ்சலி செலுத்த முடியாமல் பணமுதலைகளின் பக்கம் நின்று நான் தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என்று யாருக்காக இவர் கூறுகிறார்? தமிழ் மக்களை ஏமாற்றும் சதித்திட்டங்களில் இறங்கிவிட்டாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள்?.

மேலும் மே-18 தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் என்று ராதிகா சிற்சபைஈசன் கூறியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக யார் போராடியவர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களை இழந்த நாளில் அவர்களது தமிழீழ சாசனத்தை தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு புதிய சாசனம் உருவாக்கப்பட்டு அதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள். உண்மையில் தமிழ் மக்களுக்காகவும், அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் இதயசுத்தியுடன் செயல்படுகிறாரா ராதிகா சிற்சபைஈசன் அவர்கள்?.

மே-18 தமிழினப்படுகொலை நாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதில் ஒன்றிணையாத சக்திகள் தமிழின விரோதச் சக்திகளாகக் கருதப்படுவார்கள். ஒன்றரை லட்சம் மக்கள் அழிவினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் போட்டி நிகழ்வுகளையும், குழப்பும் வேலைகளிலும் ஈடுபடுபவர்களுக்குத் துணை செல்வது தமிழினத் துரோகமாகும்.


விஸ்வா