Wednesday, May 29, 2013

தமிழீழச் சூரியன்


சத்திய பாதையில் சூரியத் தலைவனாய்
படையை நடத்தி வந்தான் - தமிழ்
ஈழக் கோவிலில் அன்னையின் பாதத்தில்
பூசைகள் நடத்த வந்தான் !

இனத்துவேச நதியினில் ஓடும் படகின்
தரித்திரம் மாற்ற வந்தான் - எம்மைச்
சூழும் படைகளின் சாடும் பகமையை
வாழ்வினில் முடிக்க வந்தான்

வீரமா நகரினில் புலியினப் படைகளை
தீரமாய் நடத்தி வந்தான் - எங்கள்
முந்தையர் நாடென பிந்தையர் சிந்தையில்
கட்டியம் கூறிட வந்தான்

தீட்டிய பாட்டின் வரலாற்று ஏட்டிலும்
தேயாத புகழைப் பெற்றான் - தங்கத்
தமிழீழ விடுதலைப் பயிருக்கு உயிர்நீரைப்
பாய்ச்சிடும் ஞான உழவனாய் வந்தான்

உன்நொளி சூரியனிலும் ஈழத்தில் உயர்ந்ததென
இறவாப்பெருநிலை யெற்றிடுவீர் —உயர்
புலியென்று வாழ்ந்துவரும் காலம் தன்னில்
செல்வாக்கை ஈண்டுபுகழ வைத்தான்

தமிழீழத்தில் முளைத்த செங்கனலாய்
விந்தைபுகழ் வீரம் குவித்தான் - முத்தமிழ்
தொட்டிலில் தனித்தமிழ் தூயகலையாட
நெஞ்சுரத்தில் தமிழ்பேனிட வந்தான்

புறம்கூறும் வீரத்தை மிஞ்சிய ஈழவேங்கையாய்
சோழனின் புகழை மறைத்தான் —உரிய
குலமுறைச் சின்னத்தில் சூரிய புதல்வனாய்
குவலயம் போற்றிட வந்தான்

வேகத்தில் மின்னலாய் விசையினில் புயலாய்
காலத்தில் கடமைபுரிய வந்தான் — தமிழன்
தாகத்தைத் தீர்க்கும் தண்ணீராய் சுற்றிவந்து
விவேகத்தின் வீரிய சுடராய் நின்றான்

ஒருகை துப்பாக்கியுடன் இருகை அணைப்பினில்
தற்கொடைப் போராளிகளை வளர்த்தான் - தம்பி
நெருப்பு விழியிலும் சிரிப்புத் தவழ்ந்திடும்
தமிழீழத் தாயவர் பிரபாகரன் வாழியவே

தமிழீழச்சூரியனின் வீரியகதிர் தினம்எழுகவே
இவன்தான் தமிழன் இவன்தான் தலைவன்

கவிஞர்:மா.கி. கிறிஸ்ரியன