Saturday, May 4, 2013

கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் மற்றும் கப்டன் சிதம்பரம் அவர்களின் வீரவணக்க நாள்



"அபிதா" மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் ஆகியோரின் 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் 04 ஆம் திகதி வைகாசி மாதம் 1991 ஆம் ஆண்டு பருத்தித்துறை கடலில் சிறிலங்கா கடற்படைக் கப்பல் "அபிதா" மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர்.

1991 வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.



1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் சாவுக்கு அஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.


கடற்கரும்புலி ஜெயந்தன் அவர்களின் நினைவாக அவரின் பெயரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் "ஜெயந்தன் படையணி" உருவாக்கப்பட்டது. இப்படையணி போர்களங்களில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.