Saturday, May 18, 2013

பிரிகேடியர் ரமேஸ் அவர்களின் வீரவணக்கம் நாள்


கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா - தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார். இறுதி யுத்தத்தின் போது காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைப்பதற்காக சரண்டைந்த ரமேஸ் அவர்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை அர்ப்பணித்து தம்மை விதையாக்கிக் கொண்ட எங்கள் வீரத்தளபதிகளிற்கு வீரவணக்கங்கள்.