Tuesday, April 2, 2013

ஸ்டெர்லைட் ஆலையை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கும் தீர்பானது அநீதியானது, இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

sterlite

சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தடை விதித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம், இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியான தீர்ப்பாகும். இந்திய மத்தியரசிற்கு ஸ்டெர்லைட் ஆலையினால் பல கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதனால் இது இயங்க வேண்டும் என்று நேர்மையற்ற நீதிபதிகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

கடந்த 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையைச் சூழ இருந்த மக்களும் பாதிப்படைந்தார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. தற்போது தமிழக மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை நாங்கள் அவர்களின் உயிரை பணையமாக வைத்து தமிழகத்தைச் சுரண்டப்போகிறோம் என்பது போலத்தான் இத்தீர்ப்பு உள்ளது. தமிழ் மக்களின் நலனை புறக்கணித்து அவர்களைப் பற்றி கவலைப்படாமல் இந்திய அரசிற்கு வருவாய் குறைந்துவிடுமே என்று மட்டும் கவலைப்பட்டிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். வரலாற்றில் மிகப்பெரிய அநீதியை தமிழர்களுக்கு எதிராகச் செய்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். இது மனிதநேயமற்ற, மனிதகுலத்திற்கு எதிரான தீர்ப்பாகும்.

வழக்கபோலவே தூங்கிக் கொண்டு இருக்கும் தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அநீதியான விடயம் என்பதை உணராமல் இருக்கிறார்கள். மற்றைய மாநிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ளவர்கள் கோமாளிகளாக இருந்தமையினால் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடியில் உள்ள தமிழ் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதனால் பாதிப்படைந்திருந்தும் கூட அதனை மூடமறுக்கிறது இந்திய அரசும், இந்திய உயர் நீதிமன்றமும். இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளை உணராமலும் அதனைத் தட்டிகேட்காமலும் கோமாளிகளைப் போன்று தமிழக மக்கள் இருந்துவருகிறார்கள். எனக்கு பாதிப்புகள் இல்லை மற்றவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள், மற்றவர் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன என்று மனிதநேயமில்லாமல், சுயநலவாதிகளாக இருந்தமையினால் தான் தமிழினம் அழிக்கபட்டது, அழிந்தும் கொண்டிருக்கிறது, மற்றும் அவலத்திலும் வாழுகிறது. இருப்பாய் தமிழா நெருப்பாய், தமிழர்களைக் காக்க தமிழர் நலனுக்காக உழையுங்கள். அது உங்களின் கடமையாகும்...

விஸ்வா