Tuesday, May 28, 2013

அகிலமெல்லாம் போற்றும் தமிழுக்கு அவர்தானே உயிர் கொடுத்தார்



வில்லெடுத்து நாண்வளைக்கும் வேடுவிச்சி போலிங்கு
சொல் தொடுத்து நாண் இழுத்து
நற்றமிழை போற்றியிங்கு நாவிசைக்க பாட வந்தேன்
நம் தமிழின் பெருமையினை நற்கவியால் சாற்ற வந்தேன்

தனிப்பெரும் தலைவனின் தலைமையினில்
தமிழ் தானையும் தாண்டிடும் தக்களத்தை
விருதுகள் படைப்புலி போர்க்களத்தில்
வீரகாவியம் படைத்தனர் விண்ணகத்தில்

அதிர்ந்திடும் பீரங்கிச் சரவமுதம்
அதில் அழிந்திடும் அரக்கர்தம் அணிக்கவசம்
பாய்ந்திடும் கரும்புலி உயிரொளியில் எதிரி
பாதாதிகேசமும் மணல் துகளாய்

பொங்கிடும் ஆழியின் பேரமைதி அதை
போற்றிடும் அலைகளில் சரி நியதி
மங்காது ஓங்கிடும் மறநீதி அண்ணன்
மனதினை நிறைப்பது தமிழ்சாதி

சங்கங்கள் போற்றிய சான்றோர் தமிழ்
அண்ணன் சரித்திரத்திற்கோர் சாட்சித் தமிழ்
உலக அரங்கினில் உயர்ந்தோர் தமிழ் எம்மவர்
உணர்விற்கு வழி சமைத்தோன் தமிழ்

வரலாறு கண்டிடா சமர்க்களத்தை தமிழ்
வாழ்நாளில் கண்டிடா வில்யுத்தத்தை
இனவெறி அழித்தவர் இருண்ட உள்ளத்தை
இருகூறாய் பிளந்தனர் எம் புலிகள்

அகிலமெல்லாம் பொங்கு
அவர்தானே உயிர் கொடுத்தார்

கொற்றத்து முரசொலி ஓங்கிடட்டும்
எம் கொங்கணவன் தமிழ் முழங்கிடட்டும்
நற்றத்து நான்மறை நல்லியம்ப நம்மன்னனின்
நற்கனவு நடந்திடட்டும்

கவிஞர்:கவிதை